இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 9 March 2018

Human Stupidity


'ஜானி'.


படத்தின் இந்த ஒரு காட்சி நால்வரின் கலைத்திறனை பறை சாற்றுகிறது. முதலில் ஸ்ரீதேவியின் நடிப்பு. பிறகு ரஜினி. ராஜாவின் இசை. உச்சமாக மகேந்திரன் அவர்களின் இயக்கம். பாலுமகேந்திராவிடம் கூறினேன். இது போல் ஒரு காதல் காட்சியை எழுதி இயக்கிவிட்டால் அதற்குப் பிறகு காதல் படங்களை இயக்குவதை விட்டுவிடுவேனென்று. பொருமியவர்..

"என்ன பெரிய மகேந்திரன்.. 'முள்ளும் மலரும்' படத்த நான் தான்டா படமாக்கனேன். Just emotion ஆ ஒரு கதையோட வந்தார் மகேந்திரன். Screenplay shot divisions ன்னு i only did everything..u know.."

நான் மௌனம் காக்க பார்வையை திருப்பிக் கொண்டார் குரு.

ஸ்ரீதேவி.

"நான் அப்படித்தான் பேசுவேன்.."
ஜானியிடம் கூறுமிடத்து ஏழெட்டு வயதில் உண்டான சிலிர்ப்பு இன்றும் பசுமையாய். குடைமிளகாய் மூக்கழகி இந்திக்கு போய் பச்சை மிளகாய் ஆனதோடு முடிந்தது தமிழ் சினிமாவின் ஒரு அத்தியாயம். அவரின் முடிவும் அம்மாவின் முடிவும் அப்படித்தான். சுடும்.

ரஜினி.

"பட படான்னு ஏதேதோ பேசிட்டீங்களே.. ஏன் அப்டி பேசிட்டீங்க.. ஏன்..ஏன்.."

ஜானி'யாக அக்கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு உச்சம். அதை விடுத்து இன்று 'கதம் கதம்' என மய்யத்தோடு பகடி செய்து கொண்டிருக்கிறார்.

இளையராஜா.

எல்லா சாதனைகளையும் செய்து முடித்தாயிற்று. ரமணாஸ்ரமத்தில் ஓய்வெடுப்பதை விடுத்து spb உள்ளிட்டோருக்கு Notice விடுத்துக் கொண்டும் Royalty புத்தகங்கள் பேட்டி எனவும் சேர்த்த புகழை கரைத்துக் கொண்டிருக்கிறார்.

மகேந்திரன்.

தெறி'க்க விடுகிறார்.

Like a child star whose fame fades as the years advance, many once-innovative companies become less so as they mature.
- Gary Hamel

'Only two things are infinite, the universe and human stupidity, and I'm not sure about the former.'
- Albert Einstein

என்ன செய்ய..

பேசாமல் இதை click கலாம்.⬆️

No comments:

Post a Comment