இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 7 March 2018

( குரு பாலுமகேந்திரா உடனான அனுபவத் தொடர் - பாகம் 9)






( குரு பாலுமகேந்திரா உடனான அனுபவத் தொடர் - பாகம் 9)

🍀🌼🌹🌸🌻🌺

கலைஞனாக மனிதனாக பல பரிமானங்களை கொண்ட பாலுமகேந்திரா தமிழ் சினிமாவில் செய்தது என்ன ?

அவர் கையாண்ட கதைகளை விட அவரின் திரைமொழியின் ஆளுமையால் கட்டுண்டவர்கள் தான் அனைவரும். ஒரு படத்திற்கான திரைக்கதையை எழுதும் பொழுதே editing point ஐ தீர்மானித்து விடுவார். அதே போல் தான் 'சத்தம்.' இசையின் தேவை எவ்வளவு, பிறச்சத்தங்களின் அளவு எவ்வாறு இருக்க வேண்டும், எங்கே மௌனம் மட்டும் பேச வேண்டும் என்பதை துள்ளியமாக கையாள்வார். இவர் சொல்லாமலேயே இவரின் தேவை மற்றும் ரசனையை அறிந்து பின்னணி இசையமைத்தார் இசைஞானி. கடைசிப் படமான 'தலைமுறைகள்' ல் இரண்டே இடங்களில் தான் இசையையே நாம் கவனிப்போம்.

Film as a medium தமிழ் சினிமாவை முறையாக கையாண்ட முதல் கலைஞன் இவர் தான். இவரின் உதவி இயக்குனர் கலை கோட்பாட்டாளர் தங்கவேலவன்(ஞானி) அவர்கள் "Sound superimpose ஐ தமிழ்படங்களில் முதலில் கையாண்டவர் இவரே. அதேபோல் அனைவரும் Step freeze High speed Jarring zoom in Zoom out என இயங்கிக் கொண்டிருந்த காலகட்டத்தில் அது அனைத்துமே அலுத்துப்போனதாய் கருதி அவருக்கான புது அழகியலை உறுவாக்கினார்" என்பார்.

"We cannot make a realistic cinema டா. Because 'Reality doesn't have single face." என்பார் பாலு சார். "இந்த அறையில நாம ரெண்டு பேரும் பேசறத ஒவ்வொரு இடத்துல இருந்து பாக்கும் போதும் வெவ்வேறு வகையா தெரிவோம் இல்லியா.. Thats why.."

எழுபதுகளிலும் எண்பதுகளிலும் புது திரை மொழியை கையாண்டு அனைவரையும் திரும்பிப் பார்க்க வைத்தவர் அதற்கு பின் தகவமைத்துக் கொள்ளாததால் அதுவே அலுப்புறுவதாக மாறிப்போனது.

So reality not only differs with place. It also depends on 'Time'.

அவர் முதல் கொண்டு அனைவருமே சில்லாகிப்பது 'வீடு' மறாறும் 'சந்தியா ராகம்' தான். ஆனால் அவற்றைவிட ஒரு இந்தி படத்தை தழுவி எடுத்திருப்பினும் 'மறுபடியும்' தான் அவரின் ஆகச் சிறந்த படம். கலைஞனாக கனவனாக மனிதனாக அகமும் புறமும் ஒன்றிணைந்து உருபெற்ற படம்.
"I may be a vulgar man. But my art is not " என்ற அவரின் சுயபிரகடனத்தை அர்த்தப்படுத்திய படம். இப்படத்தின் சிறப்புகளில் முதன்மையானது 'ஒலி'. துள்ளியமாக பயன்படுத்தியிருப்பார்.

மற்றும் தமிழ் படப்பாடல்களில் lip sync இல்லாமல் montage ஐ அறிமுகப் படுத்தியவரும் இவர் தான்.

பாலுமகேந்திராவின் ஒளிப்பதிவை பரவலாக அனைவரும் சில்லாகிப்போம்.
இயற்கையின் வண்ணங்களை பாசாங்கின்றி தரிசிக்க முடியும் இவரின் சட்டகத்தினுள். சூரிய ஒளியை அவர் 'God's light' என்றே சொல்வார்.

"நாம எத்தன லைட்டு வெச்சாலும் என்ன தொழில்நுட்பத்த பயன்படுத்தினாலும் இயற்கையுடைய அந்த ஒளி அமைப்பு கிட்ட நெறுங்க முடியுமா.. what an amazing plan it is. I just record the light which god shows over this planet. My goodness..Am blessed enough to record that divine light at the right time."

இது தவிற உடை அலங்காரத்தில் சற்றே வினோதமான அழகியலை கையாள்வார். இவரின் நாயகர்கள் பேண்ட் மட்டும் அணிந்தவாரும் நாயகிகள் சட்டை மட்டும் அணிந்தவாரும் வலம் வருவார்கள்.

நடிகைகள் ஒப்பனையுடன் வந்தால் எண்ணையும் சோப்பும் போட்டு கழுவியபின்பே கேமரா முன்பு நிறுத்துவார். சூரிய ஒளியை கொண்டாடுவதைப் போன்றே மனிதர்களின் இயற்கையான தோற்றத்தை பதிய விரும்புவார். திராவிட முகங்களே இவரின் தேர்வாக இருந்தது. "In my entire career kamal is the only exception. அந்த கலர என் frame ல allow பண்ணதுக்கு ஒரே காரணம் அந்த நடிப்பு."

புதிதாக நடிக்க வருபவர்கள் பட்பிடிப்புக்கு முந்தைய நாள் ஆர்வத்துடன் " சார்..நான் என்ன home work செய்யணும். எப்படி வரணும்.."
என்றால் " எல்லாத்தையும் தொடச்சிட்டு blank ஆ வாங்க. I ll fill the requirement.." என்பார்.

தான் பிறந்து வளர்ந்த நிலத்தின் சமூக வரலாறையோ அல்லது தான் வாழ்ந்த மண்ணின் அரசியல் சூழலையோ அவர் படமாக்கவில்லை என்று குற்றச்சாட்டப்படுவார். அது உண்மையே. ஆயினும் 'அது ஒரு கணாக்காலம்' முடித்த பிறகு ஒரு படம் எடுக்க நினைத்தார். 02.02.2000 அன்று தமிழகத்தையே உழுக்கிய ஒரு சம்பவம் நிகழ்ந்தது. ஜெயலலிதா சம்மந்தப்பட்ட ஒரு வழக்கின் தீர்ப்பு வெளியான அன்று காலை கோவை கல்லூரி மாணவர்கள் ஓசூரிலிருந்து பேருந்தில் சென்று கூண்டிருந்தனர். ஆத்திரமடைந்த தொண்டர்கள் தர்மபுரியில் வழியாக சென்றுகொண்டிருந்த அப்பேருந்திற்கு தீ வைக்க அதிலிருந்த மூன்று மாணவிகள் கருகி இறந்து போனார்கள். அதில் ஒரு பெண்ணின் காதலர் அம்மூன்று பெண்களின் முதல் எழுத்தைக் கொண்டு ஒரு தொண்டு நிறுவனம் நடத்தியபடி இறந்தவர்களுக்காக நீதி கேட்டு போராடி வந்தார். அவரையும் அப்பெண்களின் பெற்றோரையும் பேட்டி எடுத்து அதனை ஆவனமாகக் கொண்டும் மற்ற நிகழ்வுகளை கற்பனையாக சேர்த்தும் docufiction ஆக ஒரு படமெடுக்க திட்டமிட்டார் பாலுமகேந்திரா.

2006 ஏப்ரல் முதல் ஆறுமாதங்களாக செந்திலும் நானும் ஆதாரங்களை சேகரித்தோம். அக்காதலரை தேடி அழைக்க ஆளுங்ககட்சியாளும் எதிர் கட்சியாளும் தொடர் தொல்லைக்காலானதால் அவர் எங்களுக்கு ஒத்துழைக்க மறுத்து விட்டார். கிடப்பில் கிடந்தது அந்த திரைக்கதை. சில மாதங்கள் கழித்து பாலாஜி சக்திவேல் அச்சம்பத்தைக் கொண்டு 'கல்லூரி' என்ற படம் எட்த்தார். அதைப் பார்த்த பின்பு ஆசான் மேல் மேலும் மதிப்பு கூடிப்போனது எங்களுக்கு.

ஆரம்பத்தில் எப்படியோ தன் அந்திமக் காலத்தில் ஒரு தீவிரமான படைப்பாளியாகவே திகழ்ந்தார் பாலு மகேந்திரா. நீண்ட நாட்களுக்குப் பிறகு அவ்வழக்கில் சம்மந்தப் பட்டவர்களுக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்ட செய்தியை தெரிவித்தேன். கைகளை குவித்து மௌனம் காத்தார்.

மௌனம். அவரின் அடையாளங்களில் ஒன்று உள்ளங்கையினுள் கன்னம் புதைத்தவாரு அமர்ந்திருப்பது. இது வெவ்வேறு சந்தர்ப்பங்களில் பலவாறு உபயோகப்பட்டிருக்கிறது அவருக்கு.
" மௌனத்தால சொல்ல முடியாத உணர்வையா இந்த வார்த்தைகளால சொல்லிட முடியும். மனிதனோட எல்லா உணர்வுகளையும் துள்ளியமாக சொல்லிட வார்த்தைகள் இல்லை. Verbal language has its own barrier."

வீடு' படத்தில் அர்ச்சனா தளர்ந்து உட்கார்ந்திருக்கும் சமயம் பானுசந்தர் ஆறுதலாக அவர் தோள் தொடுவது, காதலர்களின் ஊடலுக்குப் பிறகான மௌன ஸ்பரிசம்.. இவை ஆயிரமாயிரம் வார்த்தைகள் பேசாததை செய்யும்.

இது சரியாக புரிந்ததால் தான் தன் நிஜ வாழ்க்கையிலும் கச்சிதமாக பயன்படுத்தினார் பாலு மகேந்திரா.

'அது ஒரு கனாக்காலம்' படத்தை சில்லாகித்து எழுத ஒரு பிரபலமான சிறுபத்திரிகை நிருபர் வந்திருந்தார்.படத்தில் தனுஷின் தாயார் இறந்த வீடு. இறந்தவரை வீட்டின் முன் கிடத்தி அனைவரும் மௌனம் காக்க அவர்களுக்குப் பின்னால் மனிதர்களின் நடமாட்டம்.

இக்காட்சியை சில்லாகித்து,"மனித வாழ்க்கை ஓரிடத்தே முடிந்தாலும் மற்றோரிடத்தே தொடர்ந்தபடி தானுள்ளது.. அப்படிங்கற வாழ்க்க தத்துவத்த அனாயாசமா சொல்லீட்டீங்களே பாலு சார்.." சிலிர்த்தார் நிருபர்.

நிஜத்தில் அக்காட்சியை edit செய்யும் போது இயக்குனர் " எவன்டா அது back ground ல ஆளுங்க போறத கூட பாக்காம என்னடா வேல செஞ்சீங்க.." என்றாராம்.

நிருபரை சுற்றி நாங்கள் அடக்க முடியாமல் உள்ளுக்குள்ளே சிரித்துக் கொள்ள பாலு சார் நிருபரின் அவதானிப்பை உள்வாங்கியபடி உள்ளங்கைகளால் கன்னங்களை இருக்கமாக பற்றி..

"..ம்ம்ம்.." என்று மௌனித்தார்.😂😂

(End of part - 9)

****




No comments:

Post a Comment