இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 7 March 2018

( குரு பாலுமகேந்திரா உடனான அனுபவத் தொடர் - பாகம் 5 )


மூடுபனி ⛵
----------------
கடந்த சில வருடங்களாகவே சார் அடிக்கடி கேட்ட கேள்வி,
" Why should i stretch this..(life).?"
" பிறப்பினுடைய அடிப்படை நோக்கமே உயிரை நீட்டிக்கறது தானே சார்.."

ஏதாவதொரு உணவகத்தில் அமர்ந்தவாறு எப்பொழுதும் நிகழும் உரையாடல் இது. அவ்விடம் கணத்த மௌனம் நிலை கொள்ளும்.

கூற்றம் வருங்கால் அல்லளுரும் மனது வாழ்வை எங்கோ தவறவிட்டதன் வெளிப்பாடே. சொந்த வாழ்வில் திருப்தியுறாதவர் தன் கலை வாழ்வில் மீன்டும் ஒரு வெற்றியை ருசித்து மறைய ஏங்கினார். அதற்காக தன்னுடன் நெறுக்கமாக பழகிய சிலரிடம் உதவி கோறினார். காத்திருந்து கலைத்து போனவரை அவரது பழைய சாதனைகளை சொல்லி ஊக்குவிப்போம். சிறிதளவும் சலனமில்லாது சொல்வார்,

"பொய்யாய் பழங்கதையாய் கனவாய் மெல்லப் போனதுவே ".

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் உச்ச பட்ச சாதனையை செய்திருக்கலாம். ஆனால் இன்று அவன் என்னவோ அதுவே அவன் அடையாளம்.

'மூன்றாம் பிறை', 'மறுபடியும்' போன்ற உயரிய வெற்றிகளை பார்த்தவர் நிகழ்காலத்தில் தன் சக கலைஞர்களோடு போட்டி போட முடியாது தவித்தார். கடைசி சில வருடங்களாகவே திரும்பத் திரும்ப அவர் சொல்லிக்கொண்டிருந்தது "இன்னும் மூனு படம் எடுக்காம இந்த உயிர் போகாதுடா".

இதைச் சொல்லும் போது தன் கண்கண்ணாடியை கலட்டுவார். அதி தீவிரத்துடன் ஜ்வலிக்கும் அந்த கண்கள். அரிதாகவே தென்படும் அப்பார்வை.

பாலுமகேந்திரா எடுத்தது  'Emotional Cinema' தான். ஆனால் அவருடைய கடைசி காலத்தில் எடுத்த பெரும்பாலான முடிவுகள் அனைத்தும் அறிவு சார்ந்து யோசித்து செதுக்கியதே. நாங்கள் ஒருவரும் நம்பவில்லை. ஒரு சினிமாப் பட்டறை ஆரம்பிப்பார். ஒரு படம் இயக்குவார் என்று. ஆனால் கிழவன் செய்தான்.

பரவலாக இருக்கும் பார்வையைப் போல் பாலுமகேந்திரா ஏழ்மையில் உழலவில்லை. ரொம்பவும் சொகுசு பேர்வளி தான் அவர். ஆனால் அதன் அளவுகோல் தான் வேறு.

இயக்குனர் பாலா தன் குருவுக்கு கார் வசதி ஏற்படுத்தி தந்த வரையில் அவர் ஆட்டோவிலும் எங்கள் பைக்கிலும் தான் பயணித்தார். அதுவே அவருக்கு ஆடம்பரம் தான். சாலையில் எதிர்படுவோரை ரசித்தபடி வருவார். அலுவலகம் வந்ததும் அவர் குசும்பு சிரிப்பு சிரிக்க தான் ரசித்த பெண்களைப் பற்றியும் மற்ற காட்சிகளைப் பற்றியும் நீழும் உரையாடல்.

அவர் சிறப்பு விருந்தினராக பங்குபெற்ற விழாக்களில் அக்கூட்டத்தை அவர் கலை ஆளுமையால் சிலிர்க்க வைத்ததை அடுத்து பெரும்புள்ளிகள் பலரும் அவருடன் உறைபடங்கள் எடுத்துக்கொண்டு கலைந்த பிறகு நடந்தவாறு வாயிலை அடைகையில்,

"சார் ஒங்க கார் டிரைவர் நம்பர சொன்னீங்கனா இங்கயே வரச்சொல்லிடுவோம்" என அவர்கள் கேட்க,

"இந்த எடத்துக்கு காரே வரும் போது ஒரு ஆட்டோ வராதா. கூப்பிடுங்கப்பா.." சிரிப்பார்.

நாங்கள் ஆட்டோவில் பயணிக்க நிலைதடுமாறி ஆட்டோவை வெறித்தவாறு நிற்பார்கள் விழா குழுவினர்.

இயக்குனர் மனிரத்னத்தின் முதல் படமான 'பல்லவி அனுபல்லவி' மற்றும் மகேந்திரன் அவர்களின் 'முள்ளும் மலரும்' ஆகிய படங்களுக்கு ஒளிப்பதிவாளர் பாலுமகேந்திரா தான்.

ஒரு அண்ணனைப்போல கைப்பிடித்து தனக்கு பாடம் கற்றுத்தந்ததாக மனிரத்னம் கூறுவார். தனக்கு அவர் ஒரு ஆளமரம் போல இருந்தாரென கமலஹாசன் கூறுவார்.

இப்படி தன்னிடம் பாடம் பயின்ற சக கலைஞர்கள் தொழில்நுட்ப ரீதியாக விஸ்வரூபமெடுக்க தான் பின்தங்கி விட்டதாக அடிக்கடி வருந்துவார்.

மனிரத்னம் படங்களில் சாருக்கு பிடித்தது 'இருவர்'. பிடிக்காததில் முக்கியமானது பம்பாய்.

"Jurassic park' என்று கற்பனையின் உச்சத்திற்கே சென்றவர் Spielberg. அப்படிப்பட்டவர் Schindler's List எங்கற படத்தை கறுப்பு வெள்ளையில் தான் எடித்தார். இதுவே ஒரு கலைஞன் தன் கலைக்கு செய்யும் மரியாதை. ஆனால் நம் சம காலத்தில் நிகழ்ந்த பல்லுயிர்களை பலி கொண்ட கலவரமான பாபர் மசூதி தகர்ப்பை மையப்படுத்தி எடுக்கும் படத்தில் 'ஹம்மா..ஹே..ஹம்மா' என்னும் 'குச்சி குச்சி ராக்கம்மா' என்னும் அனுக எப்படி மனசு வந்தது ஒங்களுக்கு"
என்று அவரிடம் கேட்டுள்ளார்.

அதற்கு மனிரத்னம் கூறினாராம்..
'Then only these kind of films will run successfully balu.'

"மௌனராகமும் நாயகனும் எடுத்த அதே கலைஞன் தான்டா இந்த பதில சொன்னாரு"
என்று கன்னத்தில் கை வைப்பார்.

சரி நம்ம சாருக்கு வக்காலத்து வாங்களாமென,

"ஆமா சார்.. we can't acknowledge an artist only with his technical talent. என்னத்த படம் எடுக்கறாரு மனி சார்.." என்றால் தடாலடியாக..

"எங்க.. 'விடை கொடு எங்கள் நாடே' பாட்ல மனி வச்ச மாதிரி ஒரு shot வச்சி காட்டுங்கடா பாக்கலாம்.." என கதிகலங்க வைப்பார்.

'கருவி முக்கியமில்லை. அதை கையாளும் கலைஞன் தான் முக்கியம்' என்பதை 5D காமிரா மூலம் படம் பிடித்து நிரூபித்துள்ளதாக 'தலைமுறைகள்' பார்த்த கமலஹாசன் புகழ்ந்தார்.

'தலைமுறைகள்' படத்திற்காக ஒரு பழைய வீடு தேடி அலைந்தோம். ஒரு வழியாக கண்டுபிடித்த பின்,

"இந்த வீடு நான் வருவேங்கறதுக்காக தான் 150 வருஷமா காத்திட்டு இருந்திருக்கு டா.." சிலிர்த்தார்.

"I donno how.. but, when i was shooting climax scene for 'மூன்றாம் பிறை ', எனக்கு மழை தேவப் பட்டது.. வந்தது. I was wondering.. இப்ப.. 'தலைமுறைகள்'க்கு புயல் தேவப் பட்டது.. Again, வந்தது. Donno how.."

"If a person really desires to achieve something all the universe conspires to help that person to achieve his dream"- paulo cohelo, sir.' ⛵

" True டா."

(End of Part - 5)

****

No comments:

Post a Comment