உலகமயமாக்களுக்கு இரையான பல பொக்கீஷங்களில் ஒன்று நம் கிராமங்கள். தேசியமயமாக்கல் என்னும் பெயரில் அரங்கேறிவரும் சர்வாதிகாரப் போக்கை சாமான்யனும் உணரந்து வருகிறான். 'வேற்றுமையில் ஒற்றுமை' என்னும் சித்தாந்தத்தோடு துவங்கிய குடியரசு தற்போது ஒற்றுமை என்னும் பெயரில் ஒற்றைத்தன்மை வாய்ந்த கொடுங்கோலாட்சியை கோலோச்சி வருவது நாம் அறிந்ததே. 'இந்தியா' எனப்படும் நாட்டின் அங்கங்களான எல்லா மாநிலங்களும் இதை ஒரு நாடாக பாவிக்க வேண்டுமா அல்லது துணைக்கண்டமாகவா என்பதை தீர்மாணிக்கும் பொறுப்பும் அக்கறையும் ஆண்டு வரும் நம் அரசாங்கத்திடமே உள்ளது.
இச்சூழலில் ஒவ்வொரு பிரதேசத்தை சேர்ந்தவரும் தங்களின் அடையாளங்களை பண்பாட்டை பாதுகாக்க வேண்டிய ஆவணப்படுத்த வேண்டிய அவசியம் இருக்கிறது.
கலைஞர்களின் கடமையும் அத்தகையதே. இதன் அடிப்படையிலேயே தமிழர்கள் சில காலமாக மறந்த இழந்த வாழ்வை ஞாபகப்படுத்தும் பொறுட்டு 'பொங்கல்' என்னும் பண்டிகையை ஒரு பாடலாக படம் பிடித்தோம்.
கிராமம் என்றால் அங்கு மனிதர்கள் மட்டுமல்ல தாவரங்கள் கால்நடைகள் முதற்கொண்டு புழுக்கள் பூச்சிகள் வரை அனைத்தும் வாழும். மனிதர்கள் தவிர்த்து மற்ற அனைத்தையும் அதன் போக்கில் படம் பிடிக்கத் தெரியாதவனுக்கு மேற்சொன்ன பார்வை வாய்க்காது.
தணிக்கையின் தலையீடு இவ்விடத்தில் தான் ஆரம்பமாகிறது. கால்நடைகளை படம் பிடிப்பதானால் முதலில் எழுத்து மூலம் காவல்துறையிடம் அனுமதி பெற்று காவலர்களுடனும் கால்நடை மருதுத்துவருடனும் VAO வுடனும் சென்றே படப்பிடிப்பு நடத்த வேண்டுமாம். அதுவும் மாடு' என்றால் மத்திய அரசு கதிகலங்கிப்போகும். அம்மாடு இரண்டு கிலோமீட்டர் சுற்று வட்டாரத்தில் இருந்தே கொண்டுவரப்பட வேண்டும். அதற்கு பயன்படுத்தும் வண்டியின் எண், Registration no., ஓட்டுனரின் உரிமச் சான்று என சான்றுகளின்றி அணுவும் அசையாது. அசையக்கூடாது. இதுவே தணிக்கைத்துறையின் அறம் மனுதர்மம்.
'வாடிய பயிரைக் கண்டபோதெல்லாம்..' என்னும் மேலான நோக்கத்தோடு அணுகப்படுவதல்ல இது.
இவர்கள் கட்டாயப்படுத்தும் அனைத்து விதிகளையும் கடைபிடிக்க வேண்டுமானால் அதிகாரிகளுக்கு ஆவன செய்ய வேண்டும். LYCA, FOX போன்ற பெரு முதலாளிகள் மட்டுமே படம் பிடிக்க முடியும். அவர்களின் நோக்கமோ வேறு. More than that candid capturing is an art. இப்பாடலில் காண்பிக்கப்படும் பெரும்பாலான உயிரினங்களையும் அதன் இயல்பில் உள்ளபோது படம் பிடிக்கப்பட்டதே. அதுமட்டுமல்லாது விவசாயிகளுக்கும் கலைஞர்களுக்கும் தெரியாத ஜீவகாருண்யமா அதிகாரிகளுக்கு தெரிந்துவிடப் போகிறது. சட்டத்தை நிலைநாட்டுவது ஒன்றே அவர்களின் நோக்கம். சட்டம் எதற்கு? சாமாண்யனை சாகடிப்பதற்க்கு.
'Smoking and liquor drinking is injurious to health' புகையிலை விற்கும் அரசாங்கம் தான் இதை வழியுறுத்துகிறது. கால்நடைகளை காமிராவால் படம் பிடித்தாலே காயப்பட்டுப் போகுமென கலங்கும் அரசே கசாப்பு கடைகளை நடத்துகிறது.
மட்டன் பிரியானி திண்றவாறே ஆட்டை நினைத்து உருகும் நெறியே அரசாங்கம் கையாள்வது. அதை செயல்படுத்தவே தணிக்கை முதற்கொண்ட அனைத்துத் துறைகளும்.
தனிமனிதர்களிடம் அறம் நீதிநெறி சமூகபொறுப்பு மனிதநேசம் என அடிப்படைகளை கட்டமைக்க வேண்டிய அரசு அதனை கல்வித்துறையில் துவங்க வேண்டும். தனியாருக்கு தாறைவார்த்துவிட்டு தண்ணீரையே காசுக்கு விற்பவர்கள் தான் சட்டம் என ஒன்றை பிறப்பித்து அதை மீறுபவர்களை கண்டிக்கவும் துண்டிக்கவும் செய்கிறார்கள்.
கலைஞர்களின் சுதந்திரத்திற்கு கடிவாளமிட்டு அடக்க நினைக்கும் எந்த ஒரு நாடும் மானுட விடுதலைக்கானதல்லை.
**
92.7 Big Fm ற்கு அளித்த பேட்டியில் மேற்கண்ட ஆதங்கத்தை பதிவு செய்தோம்.
Atlast 'The breaking point.' இது போன்ற பாடல்கள் வெகுஜனத்தை சென்றடைய வேண்டுமானால் 'சன் டிவி' போன்ற பிரம்மாண்ட ஊடகங்கள் தேவை (நகைமுறன்).அதற்கு தணிக்கைச் சான்றிதள் தேவை.
போகியன்று மனிதர் தவிர வேறெந்த உயிரினமுமற்ற ஓர் கிராமத்தை காட்டி (வெட்டி) சாண்றிதழ் பெற்ற (நல்ல குடிமகன், நல்ல கலைஞன் என்று) பாடலைத்தான் நாம் SUN MUSIC ல் கண்டு வருவது.
***
நிஜ கிராமம்(பொங்கல்) : https://youtu.be/Y4SZo3w-I8Y
No comments:
Post a Comment