(நண்பர் பிரபுராஜசோழனின் 'கருப்பம்பட்டி'- திரைப்படத்தின் இசை வெளியீட்டினை
[09.08.12]முன்னிட்டு செப்.'2010 அன்று வெளியிட்ட ப்கட்டுரையின் மறுபதிவு.)
உங்களை அன்புடன் வரவேற்கிறது |
நண்பர் பிரபு, தன் 'கருப்பம்பட்டி' திரைப்படத்திற்காக ஒரு பாரம்பரியமிக்க பழைய வறண்ட கிராமத்தை தேடி அழைந்து கொண்டிருந்தார். என்னிடமும் கேட்டார். " எங்கெங்கோ தேடி பாத்துட்டேன், ஒன்னும் கெடைக்கல.. ஒங்க ஊர் Side ஏதாவது Village கெடைக்குங்களா..?"
" Villages நெறைய இருக்கு ஆறுமுகம் .ஆனா Village - ஆ இருக்குமாங்கறது Doubt தான். Anyway..நான் Try பண்றேன். May be.. Chances are there..!"
" Please..Do that for me "
ஊத்தங்கரை போன்ற சிற்றூர்கள், Mineral Water - க்கு மாறிவிட்ட விடத்தும் இன்னமும் கிணத்தடி நீரை சேந்தி வெங்கலச் சொம்பில் மொண்டு குடித்து வயக்காட்டில் Violent - ஆக வேலை செய்யும் விவசாயிகள் வாழும் கிராமங்கள் ஆங்காங்கே ஜீவனுடன் இருக்கத்தான் செய்கிறது.
சிஷ்யன் விமலை Torture செய்து College - ஐ Cut அடிக்க வைத்து நண்பன் செல்வாவை இம்சித்து Digital Camera வாங்கிக் கொண்டு இருவரும் கிளம்பினோம்.
DOLLAR பயணப் பாதை |
அது ஒரு Dollar பயணம். [ $ - வடிவம் கொண்ட பாதை. மட்டுமின்றி, உலகமயமாக்கலின் தாக்கத்தால் அழிந்து வரும் கிராமங்களையும் சுட்டுகிறது. ]
ஊத்தங்கரையில் தொடங்கி திருப்பத்தூர் சாலையில் நேர்க்கோட்டில் சென்று வலப்பக்கமாக திரும்பி பாரதிபுரம்.... உப்பரப்பட்டி வந்து அங்கிருந்து இடப்புறம் பயணித்து பழத்தோட்டம், குன்னத்தூர் வழியாக காரப்பட்டு சென்று நேர்க்கோட்டில் ஊத்தங்கரை வந்து முடிவடைந்த பயணம்.
அது வடகிழக்கு பருவ மழைக் காலமாதலால் பரவலாக நாங்கள் சென்ற கிராமங்களெல்லாம் பசுமையாகவே காட்சி அளித்தன. வறண்ட கிராமத்தை தேடிச் சென்ற எங்களுக்கு அது ஏமாற்றமாக ஆனவிடத்தும் ஒரு வகையில் பசுமையை கண்டபொது உயிப்புடன் திகழ்ந்த கிராமங்கள் மகிழிச்சியையே அளித்தது. இருப்பினும் மழைக்காலத்தை ஒதுக்கி வைத்துப் பார்த்தால் பயணித்தப் பாதைகள் அனைத்தும் Cement சாலைகளாவும் Tiles வீடுகள், வாஸ்த்து வண்ணங்கள், DTH Antenaa - க்கள், Cell Phone Tower - கலாவுமே நிறைந்திருந்தன.
... எட்டும் தூரந்தான் |
" என்ன விமல் இது.. வேலைக்கு ஆவாது போல இருக்கே ..
தேடித் தேடிப் பாத்தாலும் ஓட்டு வீடோ, ஓல குடிசையோ கெடைக்க மாட்டுதே..
ஆர்னுகத்துக் கிட்டச் சொல்லி மருதிப்பட்டிய, Title மாத்தி, La - Mar -D- Pet - ன்னு French - லேயே படம் எடுத்துடச் சொல்லலாம் போலருக்கே.."
( மருதிப்பட்டியின் ஒரு பகுதியை France - ல் எடுப்பதாக உள்ளார் ஆறுமுகம் . தமிழக கிராமங்களின் வாயிலாக தமிழ்க் கலாச்சாரத்தையும் இம்மண்ணின் பாரம்பரியங்களையும் வெளிப்படுத்துவதே அவரின் நோக்கம். )
" என்ன சொல்ற விமல்..?"
Mild - ஆக ஒரு Smile - ஐ மட்டும் போட்டான் விமல். அவன் எப்பவுமே அப்படித்தான். மர்மன் என்று பெயர் வைத்துள்ளேன். அவன் நினைப்பது அவனுக்கேத் தெரியாது. அவன் ஒரு Secret Container. No..No..Secret Depot.
" Throat Dry ஆயுடிச்சி விமல். நீ ஏதாவது பேசேன். Atleast ஆங்.. இல்ல.. ன்னாவது சொல்லேன். " மசியமாட்டான் பாதகன்.
" சரி. வண்டிய அப்படியே உடு. Next Village என்னன்னு பாத்துடலாம்."
" OK - ங் Master.." ( அவன் என்னை அப்படிக் கூப்பிடுவதே வழக்கம். ) (விளக்கம் - வேறொரு சமயம். )
இரவெல்லாம் பெய்த மழையின் ஈரமிகு காற்று கிராமத்தின் வாசத்தை என்னுள் ஊடுருவச்செய்ய.. என் பால்ய காலத்தில், எங்கள் பாட்டியின் கிராமத்திற்கு கோடை விடுமுறைக்கும் பொங்கலுக்கும் செல்லும் பொழுது அனுபவித்த நிகழ்வுகளை வருடிச்சென்று சில நொடிகள் காலத்தை மறக்கடிக்கச் செய்தது . TVS - ல் பயணித்தவாறு கண்களை மூடி பெருமூச்சிழுத்து சுயம் இழக்கையில்..
" யேய்.. வண்டிய நிப்பாட்டு.." கநீறெனத் தெறித்த கிராமத்தின் குரல் காலத்தின் கட்டுக்குள் என்னைக் கொண்டு வந்தது.
" யேய்.. யாருப்பா நீங்க..? " விமல் பதட்டத்துடன் வண்டியை நிறுத்த..
" என்னாப்பா இது.. Digital Camera வோட என்னாப் பண்றீங்க..?"
ஒரு கிராமத்துக் கட்டழகன் கண் சிமிட்ட விமலும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக்கொள்கிறோம்.
பரவலாக நாங்கள் சென்ற அனைத்து கிராமங்களிலும் அந்நியர்களை கச்சிதமாகக் கண்டுபிடித்து கேள்விகளால் பெண்டு நிமித்தி விடுகிறார்கள் அவ்வவ்வூர் மக்கள். அனால் அறிமுகமானப் பிறகு அன்பால் ஆட்டுவித்து விடுகிறார்கள்.
" ஒன்னுமில்லீங்.. ச்சும்மா அப்படியே நம்ம கிராமங்கள படம் புடிக்கலாமுனு.."
" புடிச்சி என்னா பண்ணப் போறீங்க..?"
" ச்சுமா பாக்கறதுக்காகத்தான்.."
" யேய்.. அட இருங்கப்பா. மூஞ்சி கீஞ்ச கழுவிகினு வர்றோம். " பெரிசுகள் இருவர் வேகமாக குடிசைக்குள் செல்ல..
" நீ என்ன எடு ராசா.. " முகத்தை கதர் சேலையால் துடைத்தவாறு ஒரு பாட்டி.
" யேய்.. என்னாடி இது.. என்ன மட்டும் உட்டுப்புட்டு.. என்னையும் எடு ராசா.."
இன்னொரு பாட்டி.
விமல் சற்று மிகையாகவே குனிந்து நிமிர்ந்து அவர்களை Click செய்ய..
" அட என்னாப்பா.. அம்முட்டுத்தானா..? உண்ணும் செத்த எடுக்கறது.."
" இல்ல பாட்டி, இதுவே போதும்."
" அட சரியா உலாம போயிடப்போது கண்ணு..எதுக்கும் உன்னம் கொஞ்சம் எடுத்துக்கோ.."
" பாட்டி தான் சொல்றாங்கல்ல.. எடேன் விமல், நீ.." என்னைப் பார்க்கிறான். சிரிக்கிறானா முறைக்கிறானா, தெரியலை.
பாட்டிகளை இன்னும் கொஞ்சம் Click - கி விட்டு TVS - ஐ Kick செய்தான் . பாட்டிகள் டாட்டா காட்ட பெரிசுகள் பவுடரோடு ஓடிவந்து.
" யே.. நில்லுப்பா..என்னைய எடுக்கவே இல்ல.."
" திரும்பி வரும் போது எடுக்கறோம் தாத்தா.."
தாத்தாக்களை கவிழ்த்த கட்டழகிகள் |
( இதனால் அறியப்படும் நீதி : பெண் புத்தி முன் புத்தி.)
" பரவலா கிராமத்துல எல்லோரும் Comfort - டாத்தான் இருக்காங்கில்ல விமல்..?"
" தருமபுரி Side போய்ப் பாருங்க.."
வழியெங்கிலும் வேடிக்கைப் பார்த்துக் கொண்டு சென்றேன். மனம் ஏனோ இனம் புரியாததோர் இறுக்கத்தில் ஆழ்ந்தது. சென்னையின் வெப்பத்திலும் நெருக்கத்திலும் அல்லளுற்று உலகமயமாதலின் பால் நசுக்கப்பட்டு.. வாழ்தல் போய் பிழைத்தலே படு கடினமாகி நொந்துபோன மனங்களுக்கு இப்படிப் பட்ட கிராமச் சித்திரங்கள் மனதை இலகுவாக்கத்தன் செய்யும். ஆயினும் ஆங்காங்கே தென்பட்ட Kurkere பாக்கெட்டுகளும் Flex - களும் அதிர்ச்சியையே அளித்தது. Amateure Artists ( கடை முதலாளிகள் ) வரைந்த ஓவியங்களும் எழுத்துக்களும் தனி அழகு வாய்ந்தவை. என்ன செய்ய.. FLEX அவற்றை அழித்துச் செல்கிறது . கிராம அடையாளங்கள் மாறாமல் பாரம்பரியம் தேங்கி நிற்கும் காட்சி எங்கு தென்படினும் மனம் அங்கேயே நிலை கொள்கிறது.
உயிர்ப்புள்ள கிராமம் |
ஆங்காங்கே தென்படும் ஓலை குடிசைகளையும், ஒட்டு வீடுகளையும், அம்மி அரைக்கும் பாட்டி, எள் குத்தும் பெண்கள் என தென்பட்ட கிராமத்தின் அழகுகளை படம் பிடித்தபடி வந்தோம்.
தூரத்தில் இருந்து சிறுவர்கள் சிலர் Tyre ஓட்டியபடி வந்தார்கள்.( நகரத்து குழந்தைகள் Video Games வழியாகவே ஓடுகிறார்கள்.)
ஒரு பையன் அருகில் வந்து,
" அண்ணா..அண்ணா.. செத்த காட்டுணா.."
அவர்களிடம் Display - வில் காட்ட.. தங்களையும் தங்கள் ஊரையும் பார்த்து பரவசப்பட்டு.. " டேய் பையா இங்க ஓடியாயேன்.. இதப்பார்ரா போட்டா..!"
" அட்ராத் தாய்லி அஜீத்து..நீ மட்டம் என்னாடா இம்முட்டு வெள்ளையா க்குற...? யேன் மூஞ்சேத் தெர்ல..! என்னண்ணா..என்ன மட்டும் இப்புடி எடுத்துட்டீங்க..?"
" சரி போய் நில்லு நீ.." ஓடிச் சென்று Style - ஆக நிற்கிறான்.
" யேய்..நீயும் வாடா அஜீத்து....ண்ணா..ண்ணா..செத்த இருண்ணா.."
அஜீத் ஓடி வந்து நிற்க.. Click செய்யும் நேரம் பார்த்து,
" டேய் பையா அஜீத்து.. நீ மானாம் போடா, ஒங்கூட நின்னா நான் கருப்பாத்தாண்டா
தெர்வேன்.."
Upset ஆன அஜீத், " காண்டிக்கும் என்னா மசுருக்குடா என்ன கூப்புட்ட நீயி..?" Tension - னோடு விலகுகிறான்.
VIDEO GAMES அறியாத குழந்தைகள் |
" எங்க சிரி.." Click செய்த பிறகு ஓடி வந்துப் பார்த்து ...
" ச்சூப்பரா கீதுணா.." என்றவன் " அண்ணா ஒரு நிமிசம் ணா..உண்ணும் ஒரே ஒரு போட்டா ண்ணா.. டேய் அஜீத்து வாடா நீயும்.."
" போடா.. நீ தான் என்ன மாணான்னு ஒதுக்கிட்டயே , அப்பறம் என்னத்துக்காண்டி கூப்புடற..?"
கிராமத்து தெய்வங்கள் |
" டேய்..டேய்.. வாடா அஜீத்து.. எதுக்கெடுத்தாலும் சுள்ளு சுள்ளுன்னு கொவிச்சிகிரடா நீயி .."
" வாங்கடா உப்ப இருந்து நீங்க ரெண்டு பேரும் Friends. என்னா..? "
விமல் நாட்டாமை ஆக நினைத்தான்.
இருவரும் தோள்மேல் கை போட்டு சிரித்து
" அண்ணா நாங்க எப்போமே பிரண்ட்ஸ் தாண்ணா.."
மூக்கு உடைந்து விழுந்தான் மர்மன்.
இருவரையும் Click - இயவுடன் Tyre ஓட்டியபடி பறந்து விட்டார்கள்.
" டாட்டாண்ணா... டுர்ர்.."
" Super - ல விமல் அந்தப் பசங்க..? "
"................................" வண்டி ஓட்டுகிறான்.
" கேக்கல.."
" நான் தான் எதுவும் சொல்லலையே .."
" அப்ப Mind Voice எது போட்டியா ?"
Slight ஆக திரும்பி சிரிக்கிறான் மர்மன்.
{இதுவும் கடந்து போகும்...}
மஞ்சள் தோட்டம |
"யே..யே.." கேட்காமலே Slow செய்தான் விமல்.
என்னை அவனுக்குத் தெரியும்.
அந்த காலைப் பொழுதில் மழை ஒய்ந்த பின் உதயமாகும் ரம்மியமான சூரிய ஒளிக் கதிர் பறந்து விறிந்த மஞ்சள் தோட்டம் எங்கிலும் ஊடுருவ.. மஞ்சள் தன் வாசம் தனை தென்றல் சுமந்து வருகையில் அதில் ஒரு கிராமத்து மைனாவின் வாசத்தையும் கலந்தே எடுத்து வந்து என்னுள் ஆக்கிரமிக்க.. Digi Cam - வுடன் அவ்விடத்தில் நின்றோம்.
மஞ்சக்காட்டு மைனா |
மஞ்சள் பாவாடை கட்டி சிவப்பு தாவணி உடுத்தி மாநிறத்தில் ஒரு மஞ்சக் காட்டு மைனா. தாவணி போட்ட தீபாவளி.
( இப்பயணத்தில்..நாங்கள் பார்த்த ஒரே தாவணிப் பெண் இவள் தான்.! )
என் மனசுக்குள் மத்தாப்பு பற்ற...
Ten Thousand Vaalaa வெடிச்சத்தம்.......! விமலுக்குள். ஆடாமல் அசையாமல் பதட்டப் படாமல் பக்குவமானவனைப் போலவே சலனமில்லாமல் நிற்கிறான் மர்மன்.
" விமல்..!"
"மாஸ்டர்..?"
( அடப்பாவி . நிஜமாவே இவனுக்குள்ள ஒன்னியும் ஆகலையா..? )
" Well. இந்த மஞ்சள் தோட்டத்த Shoot பண்ணிக்கலாம்."
" OK.. Master.. ! "
" கிராதகா " (M .Voice)
மஞ்சள் தோட்டத்தின் இடப்பக்கம் ஒரு பண்ணை வீடு தென்பட வித விதமான கோணங்களில் யாருக்கும் தெரியாமல் தாவணிக் கிளியை Click செய்கிறேன்.
தூரத்தில் இருந்து ஒரு குரல்.
" யேய்........ "
" என்னங்க..?"
" மாஸ்டர்.. இப்படி எல்லாம் பேசனா .. தள்ளுங்க ..
" யேய் யாருப்பா அ.......து..?" " ஓ............வ் .." இது விமல் .
" என்னா வேணு...........ம் .."
" போட்டா..போட்.........டா..."
பாத்தி கட்டிக் கொண்டிருந்தவர் அருகில் வருகிறார். நைந்த லுங்கி, தலப்பாக்கட்டு, முறுக்கேறிய தசைகள். சத்தியமாக அவர், Hot-Dog, Piezza, Cheese Burger, Chats, Coca Cola, Pepsi, t-ion, Neon, Acid, Alkali, Protein. Body Mass Index, Gym என எதுவும் அறியாதவர்.
கிராமத்து கட்டழகர் |
" மஞ்சள எங்க அனுப்புவீங்க ?"
" நாங்க ஊத்தங்கரைக்கு எடுத்துகினு போய் போட்டுடுவோம். அங்குருந்து சேலத்துக்கு போய் அப்படியே.....ஆங்..த்தா வரண்ணே.. பாத்தி கட்டுனும். நீங்க எடுங்க " " ஆங்..சரிங்க நீங்க பாருங்க "
அவர் போனதும் மஞ்சள் தோட்டத்தை எடுக்கும் சாக்கில் மைனாவையும் CLICK -அ ஆடாமல் அசராமல் pose கொடுத்தால் அவள்.
வேலையாளுக்குத் தெரியாமல் நான் தோட்டத்தினுள் சென்று தாவணி போட்ட அழகியை அவசர அவசரமாக சுட்டுத் தள்ளினேன். விளைவு. அவள் pose கொடுத்தும் முழுதாக எடுக்க முடியவில்லை.
முகம் எடுக்க முடியவில்லை. மன்னிக்கவும் |
பல் தொலக்கவே பாக்கெட் வாட்டர் வாங்கும் ஊரில் வாழ்பவனுக்கு பாட்டியின் குரல் பால்கோவாவாக இனித்தது.
" இல்ல பாட்டி ..இது போதும்.."
என்று சொன்னாலும் சும்மா இருக்கவில்லை சுள்ளான்கள். அள்ளி இறைத்து அளப்பரையை நிகழ்த்திவிட்டோம். தொட்டியினுள் எகிறி குதித்து தெள்ளிய நீரில்
தள்ளினோம், அனைத்து அக அழுக்குகளையும். (....? )
மஞ்சக் காட்டு மைனா நாங்கள் Jeans Pant - வுடன் குளிப்பதை தோட்டத்தில் நின்றபடி பார்த்துக் கொண்டிருந்தாள். எனக்கோ கிளுகிளுப்பாகவே இருந்தது. குளித்து முடித்து தென்னந் தொடப்பம் கொண்டு சேற்றைக் கூட்டித் தள்ள.. விமல் என்னை வியப்பாக பார்த்துக் கொண்டிருந்தான்
. " நல்லா குளிச்சீங்களா ராசா..?"
" ம்... பாட்டி." விமல்.
சத்தியமாக மணிரத்னம் படத்துக்கு வசனம் எழுத போலாம் . வீனாக் கெடந்து
வாடறான் ஊத்தன்கரையிலே.
" ரொம்ப நாளாச்சிப் பாட்டி.."
" ஏன்யா..?"
" நான் மெட்ராசுல இருக்கேன் பாட்டி.."
" குளிக்கக் கூடவா...யா தண்ணியில்ல அந்த ஊர்ல..?"
" யேன்...பாட்டி.. குடிக்கவே காசு குடுக்கணும் அங்க.."
" அடக் கடவுளே..! என்னாப் பொளப்பு கண்ணே அது..?"
" நாறப் பொளப்புப் பாட்டி,"
" நீ ஏன்யா அந்த ஊர்ல போய் க்கர.. நம்ம மண்ணுல இருய்யா.. வாழ்ந்தாலும் செத்தாலும் நம்ம மண்ணுல கெடக்கனும் ராசா. அதான் மருவாதி.."
" சர்தான் பாட்டி. என்னாப் பண்றது. என் தொழில் அப்படி."
( சொல்ல வந்து அமைதியானேன். )
" காப்பி யெது குடிக்கறீங்கலாயா..?"
" கூளு கெடைக்குமாப் பாட்டி ?"
" பொழுதோடத் தான் கரைக்கனும். எழனி குடிக்கறீங்களா..? "
" இல்ல பரவால்லப் பாட்டி.. நாங்க கெளம்பறோம் ."
" பாத்து போங்கயா..மல ஈரம்.."
" சரி பாட்டி.."
பாத்திக் கட்டு வாலிபருக்கு நன்றி தெரிவிக்க Purpose - ஓடு வண்டியைத் திருப்பி..
" நன்றிங்.."
இதை சற்றும் எதிர்பாக்காதவர் தடுமாறி ,
" ஐயோ .. இருக்கட்டுங்..! "
இந்த மாதிரி சின்ன சின்ன விசயங்களப் பாத்து பன்னம்னு வை, அவங்களுக்குள்ள அது பெரிய விசயங்கள செஞ்சிடும் விமல் "
மௌணம்.
POSE கொடுத்த மாடு |
" விமல் ? "
" மாஸ்டர்..? "
" என்ன..? "
"ஒன்னும் இல்ல..இந்த 'விஷயம்' 'விஷயம்'- ன்னு சொன்னீங்களே அது என்ன மாஸ்டர்..? "
" எதுத்தாப்ல மாடு விமல்..! "
சண்டாளா. ( M.Voice )
TVS - ஐ Balence செய்து முறுக்குகிறான். மஞ்சக் காட்டு மைனா டாட்டக் காட்ட பயணம் தொடர்ந்தது...
{ இதுவும் கடந்து போகும்..}
வழி எங்கிலுமுள்ள காட்சிகளை படம் பிடித்தவாறு பயணிக்க..
எல்லைச்சாமி.ஒவ்வொரு ஊருக்குள் நுழையும் போதும் காண முடிகிறது.
கிராமக் குழந்தைகளையும் கெடுக்க தடுப்புச் சுவர் எழுப்பி எடுப்பாக கட்டப்பட்ட Convent - கள். Van அனுப்பி வளைத்துப் போடுகிறார்கள், கிராமங்களை.
குழந்தைகளின் குடலைக் கெடுக்கும் Kurkure... இத்யாதிகள் ..!
" கடைசி வரைக்கும் என்ன கிட்டையே விடல மாஸ்டர் நீங்க.."
" என்ன விமல் சொல்ற நீ..? "
" செவப்பு தாவணி.."
" அடப்பாவி. மனசுக்குள்ள இம்முட்டு ஆசைய மறச்சி வெச்சிகினு மரமாட்டம் இருந்துட்டயேடா மடையா..! " ( M .V )
" சொல்லி இருக்கலாமில்ல விமல்.. ச்ச..! "
" சரி. பரவால்ல விடுங்க மாஸ்டர். "
" எப்படி விமல்.? எப்படி என்ன விடச் சொல்ற நீயி..? நான் மட்டும் அவ கிட்ட போயி.. Close-Up - லாம் எடுத்து.. ஒன் மனசு எப்புடி கெடந்து தவிச்சிருக்கும் விமல்.!"
" மாஸ்டர் நிஜமாவே எனக்காக Feel பண்றீங்களா..?"
" விமல்...............!!! "
" எனக்கென்னுமோ நீங்க என்ன கலாயிக்கற மாதிரியே இருக்கு மாஸ்டர்..! "
நான் சிவாஜி Modulation - ல் .. " என்ன விமல்...? என்ன சொல்ற நீ...? இதுல என்ன Doubt உனக்கு..? "
டங்கு வாரு அறுந்து போய், அவன் Accelerator - ஐ முறுக்க...
" மாஸ்ட.. .ர்ர்ர்ர்..... "... பறந்தோடிய வண்டி Enter ஆனது அடுத்த ஊரில்.
பழத்தோப்பு . K
" பேறக் கேட்டாலே ச்சும்மா இனிக்குதில்ல விமல்."
" கசக்குதுங்.. மாஸ்டர்..! "
"ஆங்..? "
" ஒங்க Comedy.." பலி வாங்கிட்டான் மர்மன்.
ஒத்தையடிப் பாதையில் வண்டியை விட்டோம். இரு பக்கமும் வாழைத்தோட்டம், தென்னந் தோட்டம், மாந்தொட்டம், என பறந்து விரிந்து இருந்தது.
தூரத்தில் பத்து பதினைந்து குடிசைகள் தெரிய அங்கே சென்று தக்காளித் தோட்டத்திற்கு வழி கேட்டோம். தளர்ந்த முதியவரை தாங்கிப் பிடித்து அவர் 'ஒன்றுக்கு' இருக்க உதவி பிறகு குடிசைக்குள் கைத்தாங்கலாக கூட்டிச் செல்லும் பாட்டி.
" என்ன பாட்டி அவருக்கு..?"
" ஒடம்புக்கு முடியல.. பத்து நாளா படுக்கையிலேயே கெடக்குறாரு.."
" ஆஸ்பத்திரிக்குப் போலயா..? "
" ஊத்தங்கரைக்குத் தான் கூட்டிகினு போனன். ஏதோ எதுக்கெடுத்தாலும் அந்த டப்பாவுளந்து நாலு வெள்ள மாத்தறைய எடுத்துக் குடுத்துர்றானுங்க.. எழவு.. ஒன்னுத்தயும் கேக்க மாட்டேனுது..!"
" அதெல்லாம் செரியாப் போச்சி.. நீ பொச்ச மூட்றி முண்ட.."
" என்னாத்த செரியாப் போச்சி ஒனக்கு. ? உட்டா உழுந்து புடுவ நீய்.. தெரிமா..!"
" யே..உட்றி நீயி..உட்றி பாக்கலாம்.. " தடுமாறி நிற்ப்பவர்
" ம்மாள..யாருகிட்ட.. பத்து பெறப் பாப்பண்டீ நானு..! "
" அதுக்கு ஒன்னும் கொறச்சல் இல்ல.. மறுமொகல வெச்சிகினு பேசற பேச்சப் பாரு...? "
" பாட்டி வெக்கப் படறாங்க பாருங்க மாஸ்டர். பழைய ஞாபகம் போலருக்கு.. ம்ம். ம்ம் .."
" சரி. அதுக்கு நீ யேன் வெக்க பட்ற விமல்..? ஒனக்கும் ஏதாவது ஞாபகமா..?"
" மாஸ்டர்...! யாரப் பாத்து... என்ன கேள்வி....? "
" சரி..சரி.. நீ ரொம்ப நல்லவந்தான். விடு."
" இப்படி சொல்லி சொல்லியே ஆள ஒழிச்சிப் புடுங்க..! "
"யெது..? என்ன சொன்ன..இப்ப..? "
" நான் என்னச் சொன்னேன்.."
" ஒரு போட்டா எடுத்துக்களாங்களா..? "
அவர்கள் முகம் மலர்கிறது. பேரன் தாத்தாவின் ஊன்று கொள் பிடித்து ஆட்ட
" இப்படி வா தாத்தா.." பேரன் தாத்தாவுக்கு நடக்கக் கற்றுக் கொடுக்கிறான்.
CLICK.., CLICK.. !
தாத்தாவுக்குக் கற்றுத் தரும் பேரன் |
" Blog - ல போடப் போறீங்களா..? "
" கண்டிப்பா.."
" மஞ்சத் தொட்டத்தையுமா..? "
" Ofcourse.."
" ச்செ.. Back - லருந்து ஒரு Still எடுத்திருந்தா நல்லா இருந்திருக்கும் மாஸ்டர்.."
" அடப்பாவி.. எல்லாத்தையும் லேட்டாத்தான் சொல்லுவியா நீ..? "
" சரி விடுங்க.. Title என்ன..? மஞ்சக் காட்டு மைனாவா..? "
" பின்னே.."
" பின்னே தான் எடுக்கலையே..!! " சொல்லால் அடித்தான் மர்மன்.
மருமகள் கிளாசில் ஏதோ கொடுக்க, அந்தப் பாட்டி தாத்தாவுக்கு குடிப்பாட்டுகிறார் .
(ஏனோ ?.அப்பெண் கடைசி வரை எங்களிடம் முகத்தை காட்டாமல் குனிந்தவாறு முறத்தில் ஏதோ ஜல்லித்துக் கொண்டேயிருந்தாள்.)
" என்ன பாட்டி அது..? "
" கசாயம். சுக்கு, கொத்தமல்லி, துளசி எல்லாம் போட்டு வெச்சது."
" அது போதுமா..? " விமல்.
" இந்த இங்குலீசு மருந்தெல்லாம் எங்களுக்கு செரி பட்டு வர்றதில்ல.. குன்னத்தூர்ல கோவிந்தராசுன்னு நாட்டு வைத்தியரு க்கராரு .அவராண்ட போனா லேகியம் குடுப்பாரு.. அத்த சாப்புட்டாப் போதும் .."
" நல்லா தூங்கச் சொல்லுவாரு. நோவுன்னு வந்துட்டாவே ஒடம்புக்கு ஓய்வு குடுக்கனும்னு சொல்லுவாரு. தூங்கனாவே ஒடம்பு தன்னால சரியாயிடுமாம்." தாத்தா சொல்கிறார்.
" எப்புடியாப் பட்ட வியாதிக்கும் வழி சொல்லிருவாருப்பா..! நல்ல மனுஷன். காசு பணங்கூட ஏதும் பெர்சா வாங்க மாட்டாரு. கைளக் கீரத வாங்கிக்குவாரு. தங்கமாட்டும் மனுஷன். மொதல்ல போனா நம்ப மூஞ்சப் பாத்து நாலு வார்த்த பேசுனும். அதான் ஆறுதலே. இந்த டிவுனு டாக்குட்டருங்க எங்க, மூஞ்ச பாத்தே பேசறதில்ல.. என்னுமோ இவுனுங்கெல்லாம் வானத்துலந்து குதிச்சி வந்தவனுங்க மாதிரி உர்ருன்னு மூஞ்ச வெச்சிப்பானுங்க.." - பாட்டி .
" பொண்டாட்டி கிட்ட போம்போது கூட அப்புடியேத் தான் மூஞ்ச வெச்சிப்பானுங்களா இவனுங்க..? எப்புடி வருவா..? "
தாத்தாவின் கோவம் ஞாயமாகவேப் பட்டது. பாரம்பரியமிக்க மருத்துவம் அறிந்தவர்கள் தாம் நாம் .என்ன செய்ய.....???
{ இதுவும் கடந்து போகும்..}
TVS - ஐ Start செய்தான் விமல். அடுத்து தக்காளித் தோட்டம்.
" மாஸ்டர் மறந்துட்டீங்களா ? நாம ' மருதிப்பட்டி' -க்கு Location பாக்க வந்திருக்கோம் இல்ல ? "
" YEAH... YEAH..! "
தக்காளித் தோட்டம்
கூடை கூடையாக கொட்டி வைத்துள்ள தக்காளிப் பழங்கள். அன்போடு எங்களை வரவேற்ற தோட்டக்காரர்கள். அவர்களைச் சுற்றியுள்ள வாழை, கத்தாளை, நெல்லி, கொய்யா, அவரை, சீத்தா பழம் என அனைத்து மரங்களையும் Click செய்துவிட்டு விடைபெற,
" எப்படிங்க கிலோ..? " விமல் கேட்டான்.
" என்ன விமல்..? "
" இங்கெல்லாம் வருவம்னு தெரிஞ்சிருந்தா ஒரு பையாவது எடுத்துக்கிட்டு வந்திருப்பேன். Cheap - ஆ கெடைக்கும் மாஸ்டர்.."
கண்ணெதிரில் ஒரு குடும்பஸ்தனைக் கண்டேன்.
" அடப்பாவி. எனக்கென்னுமோ ஒன் மேல Doubt - ஆத்தான் இருக்குது."
( இழிக்கிறான் ).
" சிரிக்கரையே மர்மா.. ?!"
தக்காளித் தம்பதிகள் |
" எவ்வளவு சொல்லுங்க மொதல்ல.." விமல்.
" அட நீங்க என்னா.. டன்னு கணக்குலையா வாங்கப் போறீங்க. சும்மா எடுத்துகினு போங்க. நம்ம தோட்டத்து ஞாபகார்த்தமா ..! " விமல் நெழிந்தான்.
" ஐயயோ.. சும்மால்லாம் வேணாங்க..இது ஒங்க தொழில் இல்ல..? "
" அட என்னங்க தொழிலு.. நம்ம தோட்டத்துக்கு வந்துனுகீறீங்க, எல்லாம் சொந்தம்தான் தம்பி."
வலுக்கட்டாயமாக மறுத்து அவர்கள் அன்பில் நெகிழ்ந்து நன்றி தெரிவித்து விடை பெற்றோம்.
போகும் வழியில் ஒரு பெரியவர் தலைமேல் தேங்காய் மட்டைகளை தூக்கியவாறு நடந்து சென்றார். அவரிடம் ,
" போட்டா எடுக்கலாங்களா ? "
" செத்த இருப்பா " என்று தலைமேல் இருந்த மட்டைகளை கீழே போட்டுவிட்டு மிடுக்காக POSE கொடுத்தார்.
" இல்ல தாத்தா அது இருக்கட்டும். நல்லா இருக்குதே.."
" இல்ல அது மானாம். நீ இப்படியே எடு." பிடிவாதமாக மறுத்தார்.
சூழக்கருப்பி காவலன் |
விமல் வண்டியை கிளப்பினான். நான் DIGITAL கண்களால் கண்ட காட்சிகளை சுட்டுக் கொண்டே போனேன். பயணம் தொடர்ந்தது.....
{ இதுவும் கடந்து போகும்..}
சற்றுமுன் கிடைத்த தகவல் :
மஞ்சக் காட்டு மைனாவின் PULL PIGURE |
{ முற்பகுதி முற்றிற்று.. }
****
இதுவரைக்கும் நல்லாத்தான் போயிட்டு இருக்கு...
ReplyDeleteமர்மன் சொன்ன மாதிரி நெறைய கமல் சோக்கு இந்த முதல் பகுதில இருக்கு,, இது மருதன் சாருகே வெளிச்சம் !
ReplyDeleteசரி.. சரி.. வண்டியில ஏறுங்க மிச்சத்தையும் பாத்துட்டு ஒங்க கருத்த சொல்லுங்க ராஜா..
ReplyDeleteஅடப்பாவி நீ பெசினது ஒனக்கே தெரியலையா மர்மா..!?
ReplyDelete