இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Saturday, 11 September 2010

இகலின் மிகலினிது


                 நண்பர் Dr. சுதாகர்- எப்பொழுது சந்திக்கச் சென்றாலும் ஒரே பரவசமாகவும் பெருமிதமாகவும் இருக்கும்.அவர் நல்ல மனிதர், நல்ல மருத்துவர், நல்ல எழுத்தாளர் என்பதையெல்லாம் விட அவர் தங்கி உள்ள மருத்துவர் விடுதிக்கு கீழுள்ள Canteen தான் என் பரவசத்திற்கு காரணம்.


                    சேலம், அஸ்தம்பட்டியிலுள்ள VHS (Voluntary Health Service) என்னும் நடுத்தர மக்கள் பயன் பெரும் வகையில் அமைக்கப்பட  மருத்துவமனை  அது
GH-ற்கும் தனியார் மருத்துவமனைக்கும்  இடைப்பட்ட இடம்.


         என் நண்பர் அங்கு தான் பணிபுறிகிறார். சேவை செய்கிறார் என்று  தான் சொல்ல வேண்டும். Private Hospital - ல் Part Time - ல்  பணி புறிகிறார்அங்கு VHS போல மும்மடங்கு சம்பளம் அதிகம் பெருகையிலும்  தன் பணியில் எவ்வித பாரபட்சமும் காட்டாமல் நடந்து கொள்வார்.


         பத்து நிமிடம் தாமதமானாலும் அன்று முழுவதும் புழம்பித் தீர்த்து விடுவார்.அடுத்த நாள் சீக்கிரம் சென்று சரி செய்துவிட்ட பிறகே அவர் முகத்தில் சிரிப்பை பார்க்க முடியும்.


          நிற்க.


         அந்த Canteen - ல் ஒருவித ஒழுங்கு முறை (?) கடைபிடித்து   வருகிறார்கள்.Canteen - மூன்று அறைகளாக பிரித்து இடப்பக்கம் குப்பைகள் குவிந்துள்ள விடத்து நோயாளிகள், உறவினர்கள் மற்றும் பொதுமக்கள் உண்பதற்கு என்றும்,


         வலப்பக்கம் சாக்கடை நீர் தேங்கியுள்ள விடத்து செவிலியர் மற்றும் இதர மருத்துவப் பணியாளர்களுக்கென்றும் பிரித்து,


                     நடுவிலுள்ள அறையை ,  Doctor's Cabin -ஆக  நடத்துவார்கள்.
 
         என் குதூகலத்திற்கு அதுவே காரணம். நண்பர்கள்  நாங்கள்  நால்வரும் எப்பொழுது சந்தித்தாலும் அந்த Canteen - ற்கு செல்வோம் .   


                 
        அப்பொழுதெல்லாம் எனக்கு ஒரே பரவசமாகவே இருக்கும்.
                         Dr.சுதாகருடன்செல்லும்பொழுது எவ்வளவு கூட்டநெரிசல் இருப்பினும்  
அவருக்கு முதல்    மரியாதை கொடுப்பார் Canteen முதலாளி மணி. 


                  (எல்லா டாக்டர்களுக்கும் அந்த மரியாதை தரப்படும் )


                 அவருடன் செல்வதால் எனக்கும் சமமான மரியாதை தரப்படும்.தோசை மசால் வடையுடன் எங்கள் அரட்டை ஆரம்பமாகும்.


        அந்த Cabin - ல் பலதரப்பட்ட மருத்துவர்களை சந்தித்திருக்கிறேன் நான் . White Coat - ம்  Steth - ம் ஆக மிடுக்காக நடந்து வந்த Doctor ஒருவர் Cabin உள் நுழைந்து Coat - கழற்றியவாறு..


                   "மணி ஒரு செட் பூரி..!" 



       என்று Order செய்து Fridge - திறந்து ஒரு Coca Cola - வை எடுத்து சுவைத்தவாறு கால் நீட்டி அமர்ந்து,


                " என்ன டாக்டர் சுதாகர். . ஏதோ சீரியஸா தின்க்  பன்னிட்டு இருக்காப்பலத் தெரியுது "


        என்றவுடன் டாக்டர் தொப்பி கழன்று விழும். சாதாரணன்  ஆகிவிடுவார். டாக்டர் சுதாகர் கூரையையே உற்றுப் பார்த்து கொண்டிருக்கையில்..


                "சுதாகர் ..! டாக்டர் சுதாகர்..!! Any Emergency ? " எனக் கேட்க..


                "ஆங்.. வினோத்..ஒன்னுமில்ல சும்மாத்தான் " என்பார் சுதாகர்.


 ( சுதாகர் எப்பொழுதுமே ஏதாவது யோசித்துக்கொண்டே தான் இருப்பார். யோசித்து யோசித்து தான் அவர் வயிறு வீங்கி கெடக்குறார் என்பது செய்தி. )


                " சும்மா நாச்சும் மேல பாபிங்களா சுதாகர் .. அப்ப பெரிய ஆளா வரப் போறீங்க " என தன் களேபரத்தை துவங்குவார்  Dr. வினோத்.


                 "சார். பூரிக்கு கெலங்கா சாம்பாரா ?"  
        சர்வர் தாத்தா கேட்க..


               " ஏதாவது ஒன்ன கொடுங்க மிலிட்டிரி.. ஆனா சீக்கிரம் கொடுங்க "  
        வினோத் ஆசுவாசப் படுத்த..


                " சொல்லுங்க டாக்டர் வினோத்.."
                  சுதாகர் சீரியசாக கேட்பார்.


                " யேன் சுதாகர் அப்ப இவ்வளவு நேரம் நான் பேசுன எதையுமே நீங்க கேட்கலையா ?" அப்பாவியாக வினோத். 


       " ஹி..! ஹி ..!! " 


        சின்னதாக ஒரு சிரிப்பை உதிர்ப்பார் சுதாகர்.


               " அடங்கப்பா..! எல்லாத்துக்குமே ஒரு சிரிப்பு தானுங்களா ? பெரிய ஆளுத்தாங்க டாக்டர் நீங்க.."


                 ( சுதாகரின் சிரிப்பு அர்த்தம் நிறைந்தது..! )


                 பூரி கொண்டு வரும்  செர்வர் தாத்தா,


                 "சார் வேற ஏதாவது வேணுங்களா ?"


                " மொதல்ல பூரிய சாப்புட உடுங்க மிலிட்டரி"
                " ரைட்  சார் "  


        தாத்தா ஸ்டைலாக நடந்து செல்வார்.


                "நாராயணா இந்த கொசுத் தொல்ல தாங்க முடியலடா "


                (வினோத் கவுண்டமணியின் பரம ரசிகர்.)


                   இப்படி எந்த டாக்டர் ஆனாலும் அந்த Cabin - உள் வந்தவுடன் டாக்டர் தொப்பியை கழற்றி வைத்து விடுவார்கள்.


       மிலிட்டரி தாத்தா :


                   கனிவு..கருணை.. கவனம்..கம்பீரம்  அனைத்தும் கலந்த கலவை. டாக்டர் வினோத் சொன்னது போல கொசுத் தொல்லை தான் அவர். சுத்தி விட்ட பம்பரம் போல சுழன்று கொண்டிருப்பார்.பரபரப்பாக இயங்கிக் கொண்டிருப்பவர் ப்ளேட் காலி ஆகும் முன் பக்காவாக வந்து நிற்பார்.அதுதான் மிலிட்டரி.


   எனக்குத் தெரிந்து மூன்று Cabin - ஐயும் சமமாக நடத்தும் ஒரே மனிதர்.


       மணி :
                  Canteen முதலாளி. அவருடைய நாற்காலியில் அவர் உட்கர்ந்து நான் பார்த்ததே இல்லை. காலையில் பூஜைக்கு கர்ப்பூரம் பத்த வைத்தால் ராத்திரி பத்தானாலும் அடங்க மாட்டார்.Business Man - க்கு Definition இவரே.


               " க்யூல வாயா.. ஒவ்வொருத்தரா நீட்டு. யார் கிட்டன்னு நான் காச வாங்குவேன். எனக்கென்ன பத்து கையா இருக்கு. யோவ்.. பொறுய்யா.. போருத்தவந்தான் பூமி ஆள்வான்யா.. இல்லன்னா சிங்கள் டீ கூட கெடைக்காதுயா.. சார்.. வாங்க சார்.. வணக்கம் சார்.. ஒக்காருங்க.."


                 டாக்டர்களுக்கு மட்டும் அவருடைய Chair - ஐயும் தூக்கிக் கொடுப்பார்.(இன்னொரு Chair மட்டும் வாங்கிப் போடா மாட்டார்.) அங்கு  வரும் டாக்டர்கள் அனைவரும் அவரை உரிமையுடன் "மணி" என்றே அழைப்பார்கள்.


       முதலில் தயங்கி பிறகு நானும் "மணி" என்றே அழைக்கத் தொடங்கினேன்.முதலில் தயங்கி பிறகு அவரும் என்னை மரியாதையுடனே நடத்த ஆரம்பித்தார்.


       எனக்கு சந்தேகம்.


                சுதாகருடன்  செல்லும் பொழுது மட்டும் தான் அவர் எனக்கு மரியாதை கொடுக்கிறாரோவென்று ..உடனே ஆராய்ச்சியில் இறங்கி விட்டேன்.
( ஆராய்ச்சிக்கு என்றே பிறந்தவனுடைய நண்பன் அல்லவா..! )


                சுதாகர் அல்லாத  பொழுது   நான் தனியாக  சென்று   பார்த்தேன். தயக்கத்துடனே  "மணி" என்றேன்.


               "சார், வாங்க ஒட்க்காருங்க..என்ன சாப்பிடறீங்க .."


                சரவண  பவன்  Special Meals - யே சாப்பிட்ட திருப்த்தி எனக்கு..!


              " Strong - ஆ  ஒரு டீ.. மணி  "


               மெதப்பாக  Order  செய்து மிடுக்காக தேநீர் பருகி வேண்டுமென்றே நூறு ரூபாய் நோட்டு எடுத்து நீட்ட..


      "சார்..Five Rupees Change -ஆ இருக்குமா?" 
      "பரவால்ல மணி.. நான் அப்புறமா வாங்கிக்கிறேன்" 
       என 100௦௦ ஐ நீட்ட,
      "சார்.. நீங்க அடுத்த தடவ வரும் போது கொடுங்க சார் "
      "அப்படிங்கறீங்களா..OK..then..bye.." 
       
      ஒபாமாவுடன் "Breakfast" சாப்பிட்ட பெருமிதத்தில் ஸ்டைலாக நடை போட்டேன்.
      இப்படியாக மணியுடைய நாற்காலி எனக்கும் வந்தது.


       தூக்கம் கெட்டு அழுக்குடையுடன் மனதில் பாரம் சுமந்து தோய்ந்து போன மனதையும் துவண்டு போன உடலையும் சற்றே இளைபாற அந்த Canteen -க்கு வரும் மனிதர்கள் டீ டோக்கன் கேட்டு அலைவார்கள். 


       நானோ அவர்கள் மத்தியில் அவர்களை கடந்து சென்று Doctor's Cabin -ல் அமர்வேன்.


       அன்றும் அப்படித்தான் அமர்ந்திருந்தேன். 


      மிலிட்டரி தாத்தாவிடம் பூரி Order செய்து விட்டு அந்த அறையை எனக்காகவே ஒதுக்கப்பட்ட Special Cabin ஆக பாவித்து படுபந்தாவாக உட்கார்ந்திருந்தேன்..


        எதிர் பாராததொரு தருணம் வானம் கருக்க இளந்தென்றல் சன்னல் வழி ஊர்ந்து வந்து என்னை இலகுவாக்க.. 


        என்னுள் ஊடுருவியிருந்த செயற்கை உடல் மொழி களைய மனம் லேசானது. என்னுள் மௌனம் குடிகொள்ள சன்னல் வழியாக அசைந்தாடிய புங்க மரத்தை பார்த்தபடி ஒருமித்திருந்தேன். 


         அந்நேரம்..


   சன்னலுக்கு வெளியே உள்ள Wash Basin ஐ நோக்கி சற்றே தயக்கத்துடன் இரு பெண்கள் நடந்து வந்தார்கள். என்னிடம் ஏதோ செய்கையால்  கேட்டவாறே   வந்தார்கள். 

        மூடுமுகிழ்   சூழ்ந்த  அந்த  காலைப்  பொழுது ..
         அந்தப்  பெண்கள்  இருவரும்  செம்மண்  படர்ந்த  கிழிந்த ஆடையுடன்

முகம் கைகளெல்லாம்  செந்நிரத்துடன்   இருந்தார்கள். கட்டிடவேலை

செய்பவர்கள் போலும் .  கைகளை  அலம்பிக்கொள்ள  என்னிடம் அனுமதி
  
கேட்டார்கள். 

                        அவர்களுக்கும் எனக்கும்  இடையில்  இருந்த தடுப்புச் சுவர் 
ஆயிரமாயிரம் ஆண்டு கால மனித குல வரலாற்றை உணர்த்தியது.
                        இருப்பினும்  இரு  பக்கத்தையும்  இணைக்கும்   பாலமாக  அமைந்த 


அந்த  சன்னல்  எனக்கு  நம்பிக்கை  தந்தது. 

                        மௌன  கணத்தில்  தியானித்திருந்த   நான் அவர்களை 


கண்டவுடன்  இளகிப்போனேன் . 

                       கை அசைத்து  அனுமதி  அளிக்க  அவர்கள்  உற்சாகத்துடன்  Tap -ஐத் 


திறந்தார்கள். கை பட்டவுடன் பீய்ச்சி அடிக்கும்  குழாய் . 
                     ஆதலால்  அவர்கள் திறந்தவுடன்  தண்ணீர்  சத்தம் கேட்க முதலாளி 


  மணி சடேரெனத்  திரும்புகிறார். 
                      எனக்கு பதட்டம் அதிகரிக்கிறது. .
         சீக்கிரம் அவர்கள் போய்விட மாட்டார்களா  என  நான் தவிக்கிறேன். 
         ஒருமுகப்  படுத்தியிருந்த  மனம்  அப்பொழுது  அலைக்கழித்துக்  
 கொண்டிருந்தது. 

         அந்தப்  பெண்களை பார்த்ததும் மனம் இழகி  அனுமதி  கொடுத்த 


அந்த  கணம் மணியிடம் கேட்கலாமா என்று  எண்ணினேன்.

         கேட்டால் அவர் அப்பெண்களுக்கு  அனுமதி கொடுப்பாரா  என்னும் 


தயக்கம்  ஒருபுறம்  இருக்க,

         என்னை மதித்து என்னிடம் அனுமதி கேட்ட  பெண்களிடம்  
கண்ணியத்துடன்  நடந்து கொள்ள வேண்டுமென்ற எண்ணமா ?
                      ..அல்லது.. 
       எனது ஆளுமையை  நிலை  நாட்டிக்கொள்ள  பயன்படுத்தப் பட்ட வாய்ப்பா?

என சரியாக  தெரியவில்லை, மணியிடம் கேட்காமலே அனுமதி அளித்து
விட்டேன்.
       மணி  திபு திபுவென  அப்பெண்களை நோக்கி  ஓடி  வருகிறார்.
       நான் மௌனமாக அமர்ந்திருக்கிறேன். 

                    " ஹேய்.. ஹேய்.. நிப்பாட்டுங்கமா தண்ணிய..
                         யாரு  உங்கள  இங்க வந்து கழுவச் சொன்னது..
                       அறிவில்ல  உங்களுக்கு.. 
                      .. அப்புறம்  ஏதாவதுன்னா  நீங்களா  வந்து நிப்பீங்க..?"
                      பதறிப் போய்  பயத்துடன் உறைந்து நிற்கும் பெண்கள். 
                      நான்  தான்  அனுமதி கொடுத்தேன் என்று கூறிவிட எத்தனித்து, 
 
                    " யார் சார் உங்கள சொல்ல சொன்னது " 
                       என்று அவர் கெட்டு விட்டால்...!?

          பிறகு நான் அந்த Canteen -ல் இயல்பாக வந்து போக முடியுமா என்னும் 


தயக்கத்தில் செய்வதறியாது  இழி பிறவியாக அமர்ந்திருந்தேன்.

                   " போம்மா .. அந்தப் பக்கம்.."
            உறைந்திருந்த பெண்கள் அவசரமாக  தங்கள் உடைகளை 
சரி செய்தவாறு  Doctor's Cabin -ஐ விட்டு விலகி ஓடுகிறார்கள். 
 
           "இவங்கள விட்டா எடத்தயே ஒரு வழி பண்ணிடுவாங்க சார்.  எத்தன 


வாட்டி  சொல்றது." 
                      சிரித்தவாறு  .. 
                    " சாருக்கு  என்ன  வேணும்  ?...
                     (   என்னையே நான் கேட்க வேண்டிய கேள்வி அது. )
                      மெல்லிய குரலில்,
                     "பூரி  சொல்லியிருக்கேன்.." 
                      தலை தாழ்த்திக் கொண்டேன்.
                     ( அப்பெண்கள்  என்னைப்  பார்த்திருப்பார்களோ ? )

                      மிலிட்டரி தாத்தா பரிமாற.. சவம் போல் அமர்ந்திருந்தேன். 
                     மிடுக்கான மீசையுடன்,

                    "வேற ஏதாவது  வேணுங்களா சார்.." 
                      தாத்தா  வெள்ளந்தியாக  கேட்க..

                     தலையசைத்து திரும்பிக் கொண்டேன். 
                     உள்ளுக்குள் கூனி குறுகிப் போயிருந்தேன்.



                     ரணமான கணங்கள் அது.

        "மணி"  போன்ற முதலாளிகளின் செயல்களை சாடுவதற்கு முன்பு..


என்னை.. சற்று முன் நான் நடந்து கொண்ட விதத்தை.. நானே சாட


வேண்டும். ஏதோ ஒரு வகையில் "மணி" களின் தயவை நாடி வாழும் நாய்


தானே நானும்.  ( நாய்கள் மன்னிக்க ..)






                   " தான் குற்றம் நீக்கிப் பிறர்குற்றம் காண்கிற்பின் 
                    
                    என்குற்றம் ஆகும் இறைக்கு ?  "



          சாப்பிட்டு முடித்து  மணியிடம் பணம் கொடுத்து விட்டு வெளியே 
வருகையில் தூரத்தில் சன்னல் வழி தெரிந்த அந்த மரத்தடியில்  செங்கற்கள்  


மேல் அமர்ந்தவாறு  அலுமினியப்  பாத்திரத்தில்  உணவருந்திக் 


கொண்டிருந்தார்கள் அப்பெண்கள். 

           என்னை  பார்த்து  நன்றியுடன்  புன்னகைத்தார்கள்.அந்த சிரிப்பை 
எதிர்கொள்ள முடியாமல் வெறும்  உதட்டசைவுடன்  அவர்களை  கடந்து 


சென்று என் Bike -ஐ  Start செய்தேன். 

                    முப்பரிமாணத்  தோற்றம் கொண்டு  அந்த Canteen இயங்கிக் 
கொண்டிருந்தது. 
                    முதலாளி மணி பரபரப்பிலும் .. சிநேகத்துடன்  கை  அசைத்தார்.

          மணி அப்பெண்களிடம் ,
                   " அப்புறம்  ஏதாவதுன்னா "
                    என்று சொன்ன வார்த்தையின் அர்த்தத்தை  எண்ணிப் பார்த்தேன் . 



                   " இகலின் மிகலினிது என்பவன் வாழ்க்கை 


                      தவலும் கெடலும் நணித்து."



                     நான் வேகமாக  Bike -ஐத்  திருப்ப..  அப்பெண்கள் சிரித்தபடி அரட்டை 
அடித்தவாறு சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.


                    நான்  மௌனமாக  பயணித்தேன்..




குறிப்பு :
 


 இகலின் மிகலினிது - பிறரோடு மாறுபடுதலில் மிகுந்த இனிமை கொண்டு..)


                                          - வாழ்பவன்  விரைவில் அழிவான் -



                                                                                    ****

No comments:

Post a Comment