இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Thursday, 9 September 2010

இல்லாத இருப்பு

பல மாதங்களுக்குப் பிறகு...
என் பழைய Bike - ஐ பழுது பார்த்து முத்தமிட்டு பயணித்தேன்  .

"இதுக்கு  செஞ்ச  செலவுக்கு  புது  வண்டியே  வாங்கி  இருக்கலாமே"..கடன்  கொடுத்த   நண்பர் கூறினார்  .

எனக்கும் என் Bike - க்குமான உறவை எப்படி கூறுவேன் ? என் எட்டு வருட வாழ்க்கையை அவனிடமே அதிகம் பகிர்ந்துள்ளேன். என் வலிகள், மகிழ்ச்சிகள், பரவசங்கள், பரிதவிப்புகள் என அனைத்தையும் பேசிய நண்பன். என் எண்ண ஓட்டமே  நானும் என் Bike - ம் பயணிக்கையில் தான் நடைபெறும்.

என் கைகளின் நீட்சியாக Handle Bar - ம், Handle பார் - ன் நீட்சியாக என் கைகளுமாக ஒருமித்து உருவாகும் எங்கள் பயணம். மோன நிலையில் உருவாகும் தியானம் அது. அப்பொழுது விபத்துகளுக்கு  வாய்ப்பேது ?

நித்திரை தொலைத்த யாத்திரை பலவற்றினுள் "என்னை" கண்டடைந்திருக்கிறேன் நான்.

நாட்கள் பல செல்ல, மறுபடியும்  பழுதானான்  அவன். ஒவ்வொரு பாகங்களாக மாற்ற வேண்டி வந்தது.
Seat, Fork, Shock Absorber, Wheel, Doom, Cylencer, Tank  என ஒவ்வொன்றாக மாற்றிய பொழுதும் என் Bike - என்னும் எண்ணம்  என்னை உயிர்ப்புடனே வைத்திருந்தது.

வெகு நாட்கள் ஆன பிறகு, தற்பொழுது எண்ணிப் பார்க்கையில்..

நான் "எனது" என்று உரிமை கொண்டாடி உறவாடிய எனது " Bike" அதன் மூலப் பொருட்கள் எதையும் கொண்டிருக்கவில்லை. அனைத்தும் புதுப்புது பாகங்கள் கொண்டு சேர்த்து செய்த புது வண்டி அது. ஆயினும் அதன் தொகுப்பு எனது பழைய  Bike - ஐயே நினைவு படுத்துகிறது.

இல்லாத ஒன்று இருப்பது போல என்னை எண்ண  வைக்கிறது.
நண்பர் கேட்டார்." உன்  Bike - ன்னு ஏதோ பெருசா சொல்லிட்டு இருந்தையே எங்க அது ? இதுக்கு பேசாம நான் சொன்னப்பவே ஒரு  புது Bike - அ வாங்கி இருந்திருக்கலாம் ".

இப்பொழுது எண்ணிப் பார்க்கையில் நான் நேசித்தது என்  Bike - ஐயா  அல்லது  Bike என்ற குறியீடு கொண்ட வெளியையா ? என்னும் யோசனை வருகிறது.

என்றும் இல்லாத ஒன்று இருப்பதை ஆழ்கிறதெனில்..

இருப்பதென்பது நிஜத்தில் இருக்கிறதா ?..
( நானும் ஓர் கனவோ..? இந்த ஞாலமும் பொய்தானோ..?  )
இல்லாததின்  உள்  பொதிந்து  கிடக்கிறதே  வாழ்க்கை..!

இது தோற்ற மயக்கமா அல்லது காட்சிப் பிழையா ?. 

                                             ****

1 comment: