இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Monday, 6 December 2010

குறிஞ்சிப் பாதையில் - டிஜிட்டல் ஆத்மாவுடன்...

பயணம் :

            எல்லாப் பயணங்களும் அற்புதத்தை நிகழ்த்தி விடுவதில்லை. அதே சமயம் எந்த பயணமும் வீண் போவதுமில்லை. தேடலுடன்  சென்றாலும்,  திக்கற்றுச் சென்றாலும் 'பயணி' - ஏதோ ஒன்றை அடையத்தான் செய்கிறான்.  'உள்ளும்', 'புறமும்' சிறு கீறலாவது ஏற்படத்தான் செய்கிறது.

குறிஞ்சிப் பாதையில் 'டிஜிட்டல் ஆத்மா' - வுடனான இப்பயணமும் அப்படியே.

எப்பொழுதும் மலைப் பயணமென்றால் அத்தியாவசியப் பொருட்களோடு செல்வதே வழக்கம். இம்முறை தவிர்த்துவிட்டதன் காரணம் நம்ம 'ஏற்காடு' தானே என்ற எகத்தாளம் தான். (ஆனால்  'இயற்கையை' அவ்வளவு எளிதாக கணித்து விட முடிவதில்லை.)

காலை எட்டு மணிக்கு நானும் என் நண்பனும், (பாழ்ய சிநேகிதன், ஆராயிச்சியாளன், Digital ஆத்மா ) சேலம் - புதிய பேருந்து நிலையத்திலிருந்து இரு சக்கர வாகனத்தில் புறப்பட்டோம்.

"  நான் இன்னைக்கு Fruits ல இருக்கப்போறேண்டா.."- டிஜிட்டல் ஆத்மா.

" யே..நான் எப்ப Hills க்குப் போனாலும்   Fruits லத் தாண்டா இருப்பேன்.."

" இருக்கட்டும்.. நீ மொதல்ல கொஞ்சம் டிபன் சாப்புட்டுடு.."


சிவா காப்பி பார் :

நான் பரபரவென காப்பி சொல்ல..

" யே.. நீ குடிச்சிட்டு சொல்றா.."

சேலத்து Spl. cake ம் காப்பியும் வாங்கி வந்தேன்.

நான் பரவசமாக வர என் முகத்தைப் பார்த்து ஏமாந்து போனான் டிஜி.

நான் வாயெடுக்கும்  முன்பே பாக்கெட்டில் இருந்து  பர்ஸ் எடுத்தான்.

மாஷ்டரோடு கதைத்து விட்டு காப்பியோடு வந்தான்.
அவனைப் பார்த்து நான் சிரிக்க என்னை பார்த்து எகத்தாளமாக சிரிக்கிறான்.

எட்டிப் பார்த்தேன்.  கச்சிதமான காப்பி.

காப்பி தயார் செய்வதில் மன்னன் Digital ஆத்மா.
"  மாஸ்டருக்கு Class எடுத்துட்டியா.."

"  Strong காப்பின்னா பால் கொஞ்சம் அதிகமா சேத்துக்கனும்.. நமக்கு தேவையானத நாமத்தான் கேட்டு வாங்கிக்கணும்.."

ஆ..... ரம்பமானது டிஜிட்டல் ஆத்மாவின் 'அட்வைஸ்' அளப்பறைகள்..

அடிவாரம் நோக்கிப் பயணித்தோம்..

அது புரட்டாசி மாதம். வடகிழக்குப் பருவ மழை பதம் பார்த்ததில் சேலம், ஊட்டியாகவே காட்சியளித்தது.

சாலையோர அங்காடியில்..

" Cap வாங்கிக்கலாமாட..?"

" நீ வேண்ணா வாங்கிக்கடா.."- டிஜி.

 Low Quality Materials.. Allergic Reaction.. டிஜிட்டல் ஆத்மாவினுள்  உள்ள மருத்துவன் அவ்வப்பொழுது எட்டிப் பார்ப்பான்.

அஷ்த்தம்பட்டி..

 சேலம் சிறைச்சாலை..

 கொல்லப்பட்டி..

என பயணித்தோம்..


கண் கவர் உறைகாட்சி :

" ச்சே.. Camera Miss பண்ணிட்டேன்டா.."

" அதெல்லாம் வேணாம் நீ போடா.." - டிஜி.

" இல்லடா..பெருங்கூட்டமே காத்துட்டிருக்கு என் Stills - க்காக.." ( ஹி..ஹி..)

" நான் சொல்றேன் நீ போடா.."

Pep+ சீறியது..

" Camera இல்லாம எப்படிடா Stills எடுப்ப..?" - டிஜி.

" அது எடுப்பண்டா... Mind ல Click செய்வேன்.."

" அதான் எப்படி..?"

" நீ ஏதோ சொல்ல வர இல்ல.. அதச் சொல்லிடு"

" ஒரு காட்சியப் பாத்தயினா அத 3D images - ஆ Store பண்ணிக்கணும். பல படிமங்களா Mind- ல அடுக்கி வெச்சிக்கிட்டு கண்ண மூடி Re-collect பண்ணிப் பாக்கணும். Missing Segments- அ மறுபடியும் பாக்கணும். ஒவ்வொரு காட்சிக்கும் ஒரு குறியீட வெச்சிக்கணும். முக்கியமா உணர்ச்சிகளற்ற பதிவா இருக்கணும் அந்த Images. இந்த வகையில தேவையானபோது நாம அத எடுத்துப் படிச்சிக்கலாம். "

" OK.. Subjectively நீ சொல்றது சரி தான். But,  நம்ம அனுபவத்தைப் பகிர்ந்துக்க ஒரு Medium தேவப்படுதில்லையா..?"

" கண்டிப்பா..ஆனா Emotional Content அ தவிர்த்துட்டு இயங்கறது முக்கியம்.."

இந்த பயணம் தொடங்கு முன்பே Nostalgia - வை தவிர்த்து விட்டு பயணிப்பது என முடிவு செய்திருந்தேன். அதன்படி அப்பாதைக்கும் எனக்குமான நினைவுகளை தவிர்த்தே பயணித்தேன்.

" Night Stay பண்ணலாமா..?" - டிஜி.

எதிர்பார்க்கவில்லை நான்.

" கண்டிப்பாடா.."

" தமிழ்  நாட்ல எவ்வளவு கேப்பாங்க..?"

" Why not we stay in youth hostel..?"

" OK. but youth hostel ல நாம எப்படி..?" டிஜி .

நான் என் T-Shirt, Jean- ஐ தடவிப் பார்த்து Scooter - ஐ வேகமாக ஓட்டினேன்.
சற்று நேரத்திற்குப் பிறகு வேகம் குறைக்க.. என்னைப் பார்த்து கண்ணாடியில் சிரித்தான் டிஜி. நானும் சிரித்தேன்.

" 'Red wine' கெடைக்குமாடா..?"- டிஜி.

" யே..என்னடா சொல்ற..குடிக்கறத நெனைச்சேப் பாக்கலடா.. ஜிவ்வுன்னுது.."

" வீட்ல எப்படியாவது 'Permission' வாங்கி 'Stay' பண்ணிடுவோம். நம்மள 'Rejuvanate' பண்ணத்தான் இந்த பயணமே.."


அடிவாரம் :

          மென் காற்றின் விளை சுகம். இயற்கை எங்களை மெல்ல தாலாட்ட ஆரம்பித்தது. தூரத்து மலைகளை நெருங்க நெருங்க அதன் பிரம்மாண்டம் ஏற்படுத்தும் பிரமிப்பு.. பேரிருப்பின் முன் மனிதனின் வாழ்வழி வருத்தங்கள் அனைத்தும் சிறுத்து செயலற்று போதலை மீண்டும் மீண்டும் உணர்கிறேன்.

        உள்ளூர் அரசியல்வாதியின் பிரம்மாண்ட சுவரொட்டி பெரும்பாறையை அடைத்திருக்க..

" சேலம் ஒரு ஜாலியான இடம் தான் இல்லையா.."

" இல்லையே.." ( எதையும் ஒத்துக்க மாட்டான் ஆராய்ச்சியாளன்.)

" 20 kms - ல மலை. இது ஒன்னு போதாதா.."

" போதாது. இந்த சுத்து வட்டாரத்துல இவர பகச்சிகிட்டு நீ நல்லா வாழவே முடியாது"

 அவரின் வீரதீர பராக்கிரமங்களை அடுக்கிக் கொண்டே போனான் டிஜி. அது தொட்டு எங்கள் உரையாடல் அனைத்தும் தவறு..குறைகூறல்..கோவம்.. வன்மம்.. என புகைய..

" டேய்.. முக்கியமா இந்த பயணத்துல நாம யாரையும் திட்டவோ Negative ஆன விஷயங்களை விவாதிக்கவோ கூடாது. என்ன.."

" கண்டிப்பா.." என்றான்.

கொண்டைஊசி வளைவு- 3 . சமதளத்தை பெரும்பரப்பாக கழுகுப் பார்வையில் பார்க்கையில் ஏற்படும் உணர்வெழுச்சி அற்புதமானது. வாகனத்தை நிறுத்தினோம். ஆங்காங்கே மண் குவியல்கள் தென்பட,

" அது என்ன தெரியுதாடா..?"

" மேட்டூர். "- டிஜி.

" அது இங்கருந்து 70 kms.நீ வேறேதாவது Try பண்ணு."

" கல்குவாரி..?"

"Better- ஆத்தான் Try பண்ற.."

" மேகத்தினுள் வயல்வெளி..எப்படி கவிதை..?"- டிஜி.

" நல்லாருக்கே.."

வாகனம் ஊர்ந்தது..

சமீபத்தில் தான், கார் ஓட்டக் கற்ற அனுபவத்தை டிஜி சில்லாகித்துப் பேச..

" ஒனக்கு Drive பண்ணும் போது 'Confidence'- Raise ஆகுமில்ல..?" என்றேன்.

" ஆமாமா.."

" Drive பண்றியா..?"

சில்லிட்டக் காற்று செவிப்பறையில் 'Drums'  வாசிக்க விறைப்பாக ஓட்டினான் டிஜி.

" ச்சே.. 'College Period' - லயே Driving கத்திருந்தா  எவ்ளோ Travel  பண்ணிருக்கலாம்ல..?"- டிஜி.

" பண்ணி..? "

" 'Explore'  பண்ணியிருக்கலாம்."

" 'Explore'  பண்ணி..?"

" 'Learning'  தான்.."

" இப்ப என்ன கெட்டுப் போச்சி..?"

" குண்டு சட்டியிலேயே குதரைய ஓட்டிட்டமே.."

" ஓ..School - ல ஒனக்கு குதர  ஓட்டத் தெரியுமாடா..?"

" ஒரு 'Rhyming' அடிச்சா உட்ரியா நீ.."

" Hills -ல 'Timing'  தான் முக்கியம். 'U-Turn'- ல எழுதப்படாத விதி இருக்கு... 'Horn' குடு."


ஏறுமுகம் :

                      வளைந்து வளைந்து குறிஞ்சிப் பாதையில் நாங்கள் மேலேற..பதட்டத்திற்கே பழகிய மனம் பதப்படுகிறது. ஒடுமுகிழ் கூட்டத்தினுள் 'Horn' கொடுத்தபடி பறக்கும் சில்வண்டுகள்.




" something is special in Hills .  சமதலத்துல இல்லாத ஏதோ ஒன்னு மலைகள்ல பொதஞ்சி கெடக்கு. எனக்குத் தெரிஞ்சி, எல்லா ஞானிகளும் மலைகள்ளத்தான்  சுத்திட்டு  இருந்திருக்காங்க.  இல்லையா..?"

" Heidegger  கூட Hills -ல தனக்குன்னு ஒரு கொட்டத்தயே அமைச்சுக்கிட்டு ஒரு long walk போவாரு. நமக்கேத்த மாதிரி வளச்சுக்கிலாமில்லையா நம்ம Thoughts -அ.."

" கண்டிப்பா.."

" Excellent - டா..அந்த U-Turn ல perfect ஆ வளச்சிட்டியே..அவ்ளோதாண்டா..
Two Wheeler -ம் ஒன் வசம்.."

" நாம எல்லாருமே 'Nature' - ரோட  வசம் டா..''

" ஹ..ஹ.."


மலையருவி :

                               சிறு சிறு சுனைகள் சேர்ந்து பெருகி வரும் நீர் வீழ்ச்சிகள் பாறை அடித்தளத்தில்  பட்டு தெறிக்க, மூடு பனியினூடு  தாவி வந்து கன்னத்தில் முத்தமிடும் நீர்த் திவலைகளால்  மூர்ச்சையாகிப் போனது எனது இருப்பு.

" ரொம்பவும் நுட்பமானதுடா நம்ப மனசு. நாம தான் கொஞ்சும் gap எடுத்து அப்பப்ப இந்த மாதிரி hills க்கு வந்து அத relax பண்ணனும்..'' என்றேன்.

".........................."

" டேய்..டேய்..!"

" ஆங்..அற்புதம்டா.."( சத்தியமாக அவன் என்னை சொல்லவில்லை.)

" சரி ஒரு நிபந்தனை. இந்த 'Travel' - முடியற வரையில 'Negative - ஆன விஷயங்கள் எதையும் நாம......" என்றேன்.

" சரி..சரி...நான் பேசல ..நீ எதாவது சொல்லு நான் கேக்கறேன்.."- என்றான் டிஜி.

" அடக்கமா..?"

" ஆமா..அது அமரருள் உயிக்கும்."- டிஜி.

" அப்ப என்ன பேச சொன்னது..?"

" ஹ..ஹ.. எப்பொருள் யார் யார்.."

" முன்னால சரிவு ...."

பக்குவமாக ஓட்டினான் டிஜி.

" நல்லாவே கத்துக்கிட்டியேடா.."

" சரி..நீயும் Four Wheeler -  license  எடுத்திடு. நாம நாலு பேரும் ஒரு 'All India Trip'  போவோம்." என்றான்.

" மொதல்ல தமிழ்நாட்ட 'Explor'e பண்ணுவோம்.."

" சரியாய் சொன்னே..நாம மதுரைல துவங்கி காவேரி பாதைல போய்..தேவதேவன் கூட...அந்தப்  பாதையிலத்தான்....."

" டேய்.. இப்போதைக்கு ஏற்காட Explore பண்ணுவோம்டா.."

" சரியா அடிச்சே.."

" நாம பேசாம இருந்தாவே நெறைய...."

" சரி விட்றா  விட்றா.."

தேவதேவன் கவிதைகள்..

பிரமிள்..

என நீண்டது பயணம்.

'சரணாகதி' -  கீதையில் சொல்லும் இவ்வார்த்தியின் அர்த்தம் கேட்டிருந்தான் டிஜிட்டல் ஆத்மா. முன்தினம் நாங்கள் நால்வர் அதைப்பற்றி விவாதித்ததை சொல்ல...

" சரியாடா.."

மௌனமாக பயணித்தான் டிஜி.


 ஏற்காடு :

               மலைக்குச் சென்றதும்  மயக்கத்தை நாடியது மனம். பாருக்கு போகுமுன் சாப்பிட திட்டமிட...சாப்பிடும் முன் கூப்பிட்டார் என் குருநாதர்  பாலு மகேந்திரா.

" Morning Sir.."

" Morning Da..நானே  கூப்பிட்டாத் தான்  பேசுவியா ?. எப்பவாவுது எங்காவது Function - ல  பாத்தாத்தான்  உண்டு .."

" Nothing Sir..Not a specific reason for that..its like..''

'' சரி விடு..where are you now..?'

" Sir i am in Yercaud now.."

" Yercaud..! thats nice.."

மலைகளை கவ்வும் காமிரா கவிஞர் அவர்.

" ஊரச் சுத்திக்கிட்டே  இருப்பியா நீ..? "

" Just to discuss about my script with my friend சார்.."

" With whom ..?"

" I told you about my friend who is a scientist doing his research in Finland .."

" Yeah.."

(சத்தியமாக அவருக்கு ஞாபகம் இருக்காதென்று எனக்குத் தெரியும்)

" Howz going..?"

" Yeah..Its going well, sir.Its about a disease.."

" Thats nice. Recently I saw a film in which the hero recollects everything except the face of the people he met. I forgot the name of the disease."

நான் நண்பனை பார்க்க.. அவன் 'Selective'....என்று ஏதோ கூற..

" Nowadays its fashion doing films on disease, just to create attention sir."

" You people just leave all your comments and do whatever you want to do டா..நான் பாலாகிட்ட.. வெற்றிகிட்ட..ராம்கிட்ட..கூட Function- ல இதத்தான் சொன்னேன் "

" Absolutely sir. This is what Mahatma said :  "Be the change"

" Exactly..Exactly..you do your films and that will talk as a representative of yours and people come to know your 'self ' through that.."

" I dont want people to know about my 'self ' sir, thats not my goal at all. Its only me who have to know about myself. I just like to share my thoughts with others. Thats my art.."

" True டா.. அதான்..அவ்ளோதான் ..! "

நண்பன் விலகிச் சென்றான். எப்படிப் பட்ட மனிதனும் அவனுக்கு ஒன்றே. அவன் நோக்கம்.....................அப்பொழுது 'Wine' குடிப்பது மட்டுமே. ( ஹி..ஹி..)

" Howz about the Function Sir..? "

" Itz very very..... குரு  கதைக்.. நான் இழிக்க.. ஒரு வழியாக பேசி முடித்து..

" OK..எங்கடா Stay பண்ற..?"

" I don't know sir. எங்காவது ஒரு இடம். அத 'Night' பாத்துக்கலாம்."

" நீ இன்னமும் ஒரு தேசாந்திரி தானாடா..?"

" நான் ஏற்காட்ல Shoot பண்ணிருக்கேன். அங்க ஒரு நல்ல Star Hotel - ல Stay பண்ணேன். U juz go and try there."

" நாங்க ஏதாவதொரு Dormetry- லத்தான் Stay பண்ணுவோம் Sir."

" I see. ok. சென்னை வந்து Call பண்ணு."

" Sure sir."

" OK டா.."

பூங்கா காவலரிடம்  ஏதோ விசாரித்துக் கொண்டிருந்தான் டிஜிட்டல் ஆத்மா.

" அவரு ஏதோ Star Hotel ல Stay பண்ணாராம்.அங்க போய் பாக்கச் சொன்னாருடா.."

" அவர, அவுரு Producer தங்க வைப்பாரு. நாம எங்கடா போறது.."


ஹோட்டல் தமிழ்நாடு :

            எங்களை ஹாஸ்யமாக ஹளைத்தது. தந்தை மொழி 'தமிழை'-  தன்  நாட்டில் தனியாக இயங்க விடுவதே  இல்லை தமிழர்கள். 'தமிழ்' (இவ்வளவு வயதாகியும்) - தான்  புணர்ந்த பல பெண்களில் யாராவது ஒருவளுடன் எப்பொழுதும் சேர்ந்து  உறவாட விடுவதே தமிழர்களின் வாழ்வாக உள்ளது.

 சிரித்தவாறு இருவரும் ஹோட்டல் தமிழ்நாடு சென்றோம்.

அவ்விடத்திற்க்கான நினைவுகள் என்னுள் ஊடுரவ லாவகமாக அதனை அப்புறப் படுத்தினேன்.

" Toilet- அ நல்லா வெச்சிருக்காங்களா பாரு.." - டிஜி.

" யேன். நல்லாத்தானே இருக்கு."

" இருக்கு. ஆனா கலரப் பாருடா.."

" டேய். எவ்வளோ காசு கொடுத்தாலும் இங்கெல்லாம் இவ்வ்ளோதான். "

" ஹ..ஹ.."

வரவேற்ப்பறைக்கு வந்து அங்குள்ள ஒரு சுவற்றில்  ஏற்காட்டின் படத்தைப் பார்த்து..

" எல்லா இடத்தையும் சரியா Plan பண்ணி பாத்துடனும்..என்றவன்,
 Double Bed Room எவ்வளவுங்க..?" வரவேற்ப்பாலரிடம் கேட்டான்.

" 475 sir.."

" Book பண்ணிடலாண்டா."-டிஜி.

" Evening Book பண்ணிக்கலாங்களா..?"

" வாங்க சார். Free- ஆத்தான் இருக்கும்."

" Thanks.."

உணவு விடுதிக்குள் சென்றவாறு..

" பயனுத்தள என்ன வேண்ணாலும் நடக்கலாண்டா. முன்கூட்டியே Book  பண்ணத்- தேவையில்ல.."

"...................."

நான் எது சொன்னாலும் உன்னிப்பாகவே கவனிப்பான் என் நண்பன்.. என்னைத் தவிர மற்ற எல்லாவற்றையும்.

" Atmosphere நல்லாருக்குல்ல.."- டிஜி.

இட்லியும் கிச்சடியும் கடுமையாக இருக்க..வேறு வழி இல்லாமல் நான் மட்டுமே சாப்பிட வேண்டி இருந்தது.

" 'Hypoglycemia'  Travel- அ Disturb பண்ணிடக் கூடாதுல்ல. அதாண்டா.." என்றேன்.

" Humans,  Initial- ஆ Protein based organisam- ஆ இருக்கத்தான் Chances அதிகமா இருக்குடா.."- டிஜி.

" ஆச்சர்யமா இருக்கேடா.. நீ அன்னிக்கே சொன்ன இல்ல.."

" But அன்னிக்கு யாருக்குமே அதோட முக்கியத்துவம் தெரியலடா.."

"ஆங்.."

" இனிமே கொஞ்சம் பேசுறத நிருத்திடலாமுனு இருக்கேன் டா..கேட்காம கொடுக்கப்- படறது எதுவுமே Waste தானடா..?"

" ம்...."

காப்பி எடுத்து வந்தான் சிறுவன்.

" OPINION... கேட்கறதும் தப்பு. குடுக்கறதும் தப்பு.( Super Star பஞ்ச் அடித்தான் டிஜி.) ம்..Again..இதுவும் ஒரு Opinion தான். தவிர்க்கணும்.. தவிர்க்கணும்.."

காபியை வாயில் வைத்த வுடன் Wash basin நோக்கி ஓடினான் டிஜி.

நான் சலனமில்லாமல் குடித்துக் கொண்டே இருந்தேன்.காப்பி முக்கியமில்லை.காப்பி என்னும் உணர்வே போதுமானது. இதை அவனிடம் சொல்ல முடியாது.அடுத்த 'Punch' வைப்பான்.

" பால் சுண்டி கொமட்டிடுச்சிடா..அதான்.."

" சுண்டுன பால் நல்லது தானே.."

" இல்ல. அத ஒரு விதமா பதமா சுண்ட வைக்கல.."

" Right டா. சரியான வெப்பத்துல பித்தள பாத்தரத்தல சுண்ட வைக்கல.. இல்ல..?"

மெளனம்....

(எதைத்தான் ஒத்துப்பானோ டிஜிட்டல் மண்டையன்.)

அவனுக்காக நானும் காப்பியை பாதியில் நிறுத்தி.. பணம் செலுத்தப் போனோம்.

" எதுவும் சொல்லிடாதடா.."- டிஜி.

" யேன்..?"

" நாம குடிக்காம விட்டதுலையே நம்ம எதிர்ப்ப தெரிவிச்சிட்டோம்.அத உணர்ந்து அவங்களா கேட்டா அப்ப சொல்லலாம்..Again.. OPINION...shit.."

பணம் செலுத்தினோம்.

சலனமில்லாமல் சில்லறையை கொடுத்துவிட்டு புத்தகம் வாசித்தார் முதலாளி.

நாங்கள் சிரித்தவாறு வெளியேறினோம்.

" வெற்றி ரொம்ப முக்கியம்டா. இதே நாம ஒரு 'IAS' - சாவோ 'Comissioner' - றாவோ இருந்திருந்தா கதையே வேற இல்ல. நம்மோட சிறு அசைவக் கூட சரியா கவனிச்சி வேற காப்பி கொடுத்திருப்பாங்க. நாம நெனைக்கறதச் செய்ய நமக்கொரு 'Position' தேவடா.அது வரைக்கும் எதப் பத்தியும் நாம பேசக் கூடாது."

நான் அவனைப் பார்த்து சிரித்தவாறு நடக்க..புரிந்து கொண்டு அவனும் சிரித்து அமைதி ஆனான்.சாலையோர பூச்செடிகள் எங்களை வருட..மேடேறிச் சென்றோம் மௌனமாக.

" BAR - ஆத் தம்பி..?"- ஒரு பாட்டி.

" ஆங்.."  நான் தடுமாற..

" இதோ..அந்தப் பக்கம்."   (நான் அப்புடியே SHOCK ஆயிட்டேன்..!)

" வாடா..வாடா.. இதுக்கெல்லாம் அதிர்ச்சி அடைஞ்சா அப்பறம் பெரிய விசயங்கள எல்லாம் எப்படிடா Face பண்ணுவ நீ.."

செயற்கையாக ஏற்படுத்தப்பட்ட பணக்காரத் தோரணை பூச நினைத்து சறுக்கி விழுந்த Bar. இருவர் அமர்ந்து தீவிரமாக யோசித்துக் கொண்டிருக்க..கோப்பையினுள்  லாவகமாக ஊற்றிக்  கொண்டிருந்தார் பணியாளர்.

" Red wine இருக்குங்களா..?"

" இருக்கு சார்.உக்காருங்க.."

" என்ன Label..?"

அவர் விழிக்க..

" OK. Catalogue கொடுங்க.."

ஜன்னலோர இருக்கையாகப் பார்த்து அமர்ந்தோம்.

இளவெயில் பனிமூட்டத்தினூடாக ஊடுருவ..

வெளியிலுள்ள தாவரங்களின் மனம் கவர்ந்து வந்து எங்களைத் தாலாட்டியது சூரிய ஒளி.

Catalogue - ஐப் புரட்டியவன்..

" எல்லாமே Waste டா.. "

" OK. வேற பார் போலாமா..?"

சற்றே தயங்கியவன்..

" சரி போலாம் வா.."


ஏற்காடு ஏறி :




                         பள்ளி மாணவர்கள் குளிருக்கு இதமாக 'Sweater' அணிந்து செல்ல.. நாங்கள் 'Scooter'- ல் ஏரியைச் சுற்றிப் பயணித்தோம்.

" ச்சே..இந்த மாதிரி ஒரு School- ல இருந்துகிட்டு மலையிலேயே வாழ்ந்தோம்னா எவ்வளவு நல்லா இருக்குமில்ல.."

" இல்ல." என்றேன்.

சிரித்தான் டிஜி.

" இங்கெல்லாம் Tourist- ஆ வந்து Two or Three days இருந்துட்டு போறதாலத்தான் நமக்கெல்லாம் நல்லாருக்கு. சூரியனைக்கூட  பாக்காம  இங்கயே இருந்தோம்னா மந்தமாயிடுவோம்."

" நல்லது தானே. எதுக்குமே சலனப் படாம ஒரு விதமான மோன நிலையில வாழ்றது.."

" OK. But குடும்பத்தோட இருந்துகிட்டு உணர்ச்சியற்ற தளத்துல இயங்குனா என்னவாகறது.."

" ம்.."

" அதுவும் Certain Stage- ல Depress ஆக்கிடும்ல.."

" கண்டிப்பா." அழுத்தமாகச் சொன்னான்.

" கீழ இருக்கறவன் 'Depress' ஆனா மலைக்கு வந்து தன்ன 'Resurrect' பண்ணிப்பான். மேல இருக்கறவனுக்கு 'Depression' வந்தா எங்கடா போவான்.."

அவன் வாய் திறக்க..

" கீழன்னு மட்டும் சொல்லிடாத..ஞாபகம் இருக்கா..லாரன்ஸ்..?"

" ம்ம்.."

" 2003 - October.. ஊட்டி.."

" ஆமா அந்த School  பையன்.."

" மலை வாழ் பையன்.என்ன சொன்னான்.ஒனக்கு கீழ போகனும்னு தோணலையான்னு கேட்டப்ப..தோணும். ஆனா என்ன ணா பண்றது.  இங்கதான இருக்க வேண்டிருக்குன்னு சொன்னான் இல்லையா.. எனக்கென்னமோ தொடர்ந்து மலைகள்ல வாழ நினைக்கறவன் தனியனா தான் இருக்கணும்னு தோணுது.அப்பத்தான் அது சாத்தியம்."

" எது..?"

" To be nameless and homeless.."

( இப் பயணத்திற்குப் பிறகு இரண்டு வாரம் கழித்து திருக்குறளை நாங்கள் அலசிக் கொண்டிருந்த சமயம் தமிழ் மரபானது அறம்,பொருள்,இன்பம்,வீடு என முறையே பிறப்பு முதல் இறப்பு வரையிலான கால நிலைகளில் வகுத்து வைத்திருப்பதை உணர்ந்தோம். தாம்பத்யம் தவிர்த்து துறவறம் பற்ற வேண்டியதில்லை. தாம்பத்யம் கடந்து துறவறம் நாடுதலே இயற்கையின் நெறி என உணர்த்திற்று 'குறள்'.)

" சேர்வராயன் கோயிலுக்கு எப்படிங்க போகணும்..?"

ஒரு TASMAC தெறிகிறது.

" இங்க வாங்கிக்கிட்டா கூட Cheap - ஆ முடிஞ்சிடும்ல.."

" ஏதாவது கலப்படமா இருந்துச்சினா Risk ஆயிடும்."

" OK நாம வேற Bar Try பண்ணுவோம்."

" அதுக்கு முன்ன சாப்பிடுவோம்."

மலை வாழை  சாப்பிட்டு பயணிக்க..


அரண்மனை :

                        'British- Liquor'  என எழுதி இருந்த பாரைப்  பார்த்து வாகனத்தை மேடேற்ற.. பழங்கால பாரம்பரியத்தோடு வடிவமைக்கப் பட்ட கட்டிடம்.

கருப்பு வெள்ளையில் உலகத் தலைவர்கள்.. காதல் காட்சிகள்.. இயற்கையை பிரதிபலிக்கும் வண்ண ஒளிச் சித்திரங்கள் சுவற்றில் பளபளக்க, ரத்தினக் கம்பளம் மேல் பாதம் பட்டு நெளிந்தது.

பாதம்:      " இவ்வளவு மென்மையா கூட தரை இருக்குமா..? "

மனம்:      " நீ வேற.. எனக்கும் அதே Doubt தான்."

பாதம்:      " சரி விடு.என்ன Disturb பன்னாத.நான் அனுபவச்சிக்கிறேன்.."

மனம்:      " இத அனுபவச்சியனா அப்புறம் கரடு முரடான பாதையில நடக்கறது கடினமாயிடும் பர்ராலையா.."

பாதம்:      " Bool shit. மேன்மைய அனுபவிக்கத் தெரிஞ்ச  எனக்கு வன்மையையும் தெரியும்.ஆனா அந்த அனுபவங்கள் என்ன பரவசப் படுத்தாம, பாதிக்காம பாத்துப்பேன். போதுமா..? "

மனம்:      " OK. தாமறை  இலை மேல நீர் போலங்குற..? "

பாதம்:     " Exactly. இனிமே எல்லாரும் ரத்தனக் கம்பளத்து மேல பாதம் போலன்னு சொல்லணும்.."

மனம்:     " Sure. Request granted. you may proceed my dear feet."

        ஊழியர் ஒவ்வொரு அறையாக திறந்து  காட்டினார். மாளிகை அது. மெல்ல ஒரு மெத்தையை  தொட்டுப் பார்த்தேன். ' ஷாருக் கானின் ' இல்லம் ஞாபகத்திற்க்கு  வந்தது.

( தனி மனிதனுக்கு  இவ்வளவு ஆடம்பறம்.. வசதி.. சுகம்.. தேவையா ? எப்படி இவ்வளவு காசு கொடுத்து தூங்க முடியுது இவங்களால..)

ஆங்கிலேயரின் முறைப்படி வடிவமைக்கப்பட்ட அறைகள்..தூண்கள் திறந்த வெளி குளியலறை..!

" அற்புதமா இருக்கில்ல.." - டிஜி.

"....................."

" யாருங்க ஒனர்..?"

" இங்க பெட்ரோல் பங்க் வெச்சிருக்காரு சார்."

" நல்லா ரசனையோட கட்டிருக்காரு..குடும்பத்தோட வந்தா எவ்ளோ நல்லாருக்கும்ல ..குழந்தைங்க இப்படி ஒரு Open space - ல விளையாடறத நாம ஒரு காப்பி குடிச்சிகிட்டே ஒக்காந்து பாத்துக்கிட்டிருந்தா......ச்சே.."

ஏனோ அவ்விடத்தை விட்டு வெளியேறவே நினைத்தேன்.

" Wine இருக்குங்களா..?"

" வாங்க சார்."

எதயுமே இல்லை என்று சொல்வதில்லை பெரிய இடத்து பணியாட்கள்.

'Finlandiya' - பச்சை நிற பாட்டிலைப் பார்த்து பரவசப் பட்டான் டிஜிட்டல் ஆத்மா.

'பற்றறுத்தல்'  என்பது வலுக்கட்டாயமாக செய்தாலே  தவிர வாய்ப்பில்லை போலும்.

" ஒரு பெக் 600 Rupees சார்.."

" Wine இல்லைங்களா..?"

" Sorry sir. எங்க 'Owner'  Foreign போகும் போது வாங்கிட்டு வர்றது. முக்கியமா யாராவது கேட்டா மட்டும் குடுக்கச் சொன்னாரு. எனக்கென்னுமோ ஒங்களுக்கு குடுக்கனும்னு தோணுது.."

வாடிக்கையாளர்களை சிம்மாசனத்தில் ஏற்றி வேடிக்கை காட்டுவது வேலையாட்களுக்கு கை வந்த கலை.

" நாங்க Wine தான் Expect பண்ணோம்.பரவால்ல. எதுவுமே வேண்டாம்."

சுற்றிப் பார்த்தவாறு..

" இந்த Set-up ல வீடு எவ்ளோங்க போகும்..?" என்றான் டிஜி.

" என்ன ஒரு 90 lakhs-க்கு வாங்கிடலாம் சார்."

" OK நாங்க வறோங்க ."

வண்டியுடன் தயாராக  நின்றேன். ' டிஜி' உட்காற்ந்ததும்  வண்டி தானாக அவ்விடத்தை விட்டு விலகி உருண்டோடியது.

(வரும் பொழுது தான் நாங்கள் தள்ள வேண்டி இருந்தது.)

" டேய்..வண்டி என்னாச்சி..Sound- யே காணோம்."

" அதுவா போகுதுடா.."

யாதனின் யாதனின் நீங்கியான் நோதல்
அதனின் அதனின் இலன்.
                                                             குறள்- 341

சேர்வராயன் ஓட்டல் :

                               'பாரு' - க்குள்ளே சிறந்த 'பாரு' - இதுதான்  பாரு , என்பது போல் வரவேற்றது சேர்வராயன் ஹோட்டல் . அற்புதமான சூழல்.  ரம்மியமான மெல்லிசை...

" Smell தான் Nauseating- ஆ இருக்கில்ல.." - டிஜி.

" நல்லாத்தானே இருக்கு."

அருகில் கோழிப்பண்ணை.

நாம் நினைப்பதை மட்டுமே நுகர முடிகிறது.
நுட்பத்துடன் இயங்குபவனாலேயே  துல்லியமாக உணர முடிகிறது.

டிஜிட்டல் ஆத்மா சொல்லிய பிறகே எனக்கு அது கோழிப்பண்ணை என்று தெரிந்தது.

காலியான பார். ஆறு  பேர் அமரக்கூடிய இருக்கையில் அமர்ந்தோம். 'செப்' இருவர் இருக்கையில் அமரச் சொல்ல நான் மட்டும் எளவே இல்லை.

" வாடா.." அர்த்தத்துடன் அழைத்தான் டிஜி.

சென்றேன்.

பியரும், வயினும் வந்தது.

நான் மெல்ல பியர் அருந்த Wine- ஐ  லைட்டாக சிப்பிவிட்டு..

" Actual ஆ Liquor லாம் தேவையான விஷயம் தான்." என்றான் டிஜி.

" ஆமாமா..போதை அற்புதமான விஷயம் தான்.அது Health அ மட்டும் Spoil பண்ணாம
இருந்ததுன்னா அத நல்லாவே Use பண்ணிக்கலாம்."

" ச்சும்மா கத வுட்ரானுங்கடா. அப்படி எல்லாம் இருக்க வாய்ப்பே இல்ல. ஒரு கட்டுக் கோப்பான சமுதாயத்த ' Maintain'  பன்றத்துக்காக அப்படி பயமுறுத்தி வெச்சிருக்காங்கடா..அவ்ளோத்தான்.."

" அப்படின்றையா.."

கடகடவெனச் சென்றது.

" என்னடா ஒரு பீருக்கே சீன் போடுவ போலருக்கே.."

" ச்சே..ச்சே..Actual ஆ குடிக்கறதுன்றதே எனக்கு பிடிக்க மாட்டுது. Last two three times பிடிக்காமத்தான் குடிச்சேன்."

" நல்லது தானே.."

" Ofcourse. 'Meditation'- லயே இத கொண்டு வர முடியுமில்லையா.."

" ம்ம்..எவ்ளோ தூரம் போயிருக்கற 'Meditatin' - ல..?"

" எங்கையும் போகலடா. Maximum half an hour பிராணயாமா  செய்வேன்.
 Just inspiration - hold - expiration... 1: 4: 2 ratio - வுல.அவ்ளோத்தான்."

" ம்ம். "

" நான் வேறென்ன பண்ணனும்."

" சீக்கிரம் குடிச்சி முடிக்கணும். இந்த salad-ம், chicken-ம் காலி  பண்ணனும்." ( கிறாதகன் )

" ஒனக்கு..?"

" அவ்ளோத்தான்.."

" யேய்..வண்டி ஓட்டுவியா நீ..?"

" இது ரொம்பவே ஓவர்டா.ரென்ற பீர் வரை தாங்குவேன். இன்னைக்கு இந்த 'Mild kick' - அ Throughout  the' journey'  maintain பண்ணனும்.." என்றேன்.

" ம்.. ..Breath control- ல தான் எல்லாமே இருக்கு. Continuous passive awareness- ங்கறது Outward and inward Activities -அ Watch பண்றதுதான்.'Depression' ஆனாலும் சரி 'Excite' ஆனாலும் சரி. Emotional imbalence- அ Neutralize பண்ணிக்கலாம். அதுக்கு மொதல்ல Watch out ur breath. understand it. Then slowly take control on it ."

" அவ்ளோத்தானா..?"

" ஆனா அது அவ்ளோ Easy கெடையாது."

டிஜி பேச பேச என் மூச்சை கவனிக்க ஆரம்பித்தேன்.

அதை அவனும் அறிவான். மிகவும் நுட்பமான என் உளச்சிக்கலை தெளிவாக விளக்கிக் கூறினான். சிக்கலும் தீர்வும் விவாதிக்கப் பட்டது.

தொலைக்காட்சியில் நடிகை நடனமாட..

" இவளுக்கு எந்த திறமையும் இல்லாத போதும் 'Marketing' - அ நல்லாவே தெரிஞ்சி வெச்சிருக்கா பாத்தியா. இவள நல்லவள்னு அவரும் நெனச்சிகிட்டு இருக்காரு...நம்புறாரு . அவளும் அப்படியே நம்புறா. அவங்க ரெண்டு பேருமே தங்கள   ஏமாத்திக்கறாங்க இல்லையா.."

அவனை விழித்து  பார்த்துக் கொண்டிருக்க..

" மாயை..  மாயையுள்  மாயை.. பெருமாயை....

(கண்களை மூடிக்கொண்டு)

.....பொய்த்தோற்றம்."  என்றான் டிஜிட்டல் ஆத்மா.

"................."

மெளனம் சூழ் அறையுள் பனிக்காற்று படற உள்ளும் புறமும் நடுங்கியது.

" Just like that வாழ்க்கைய செதச்சிக்க முடியும் இல்லையா, நமக்கே தெரியாம. அத Careful- ஆ Watch  பண்ணம்னா அற்புதமாவும் வாழ்ந்துடலாமில்ல.. Apart from whatever you acheive or whoever you are . "

" கண்டிப்பா. கணத்தை முழுமையா ஆளும் போது அது சாத்தியம் தானே.."

" ம்..அது 'Initial stage' தான். 'சரி' 'தவரு' ங்கறது அப்புறம். மொதல்ல விழிப்புணர்வோட இருக்கறது தான் முக்கியம்."

பணம் செலுத்தி... சிறுநீர் கழித்து வெளியேற..
'Chef' பவ்யமாக சிரித்தவாறு சேர்வராயன் கோயிலுக்கு வழி சொன்னார்.

" உள்ள போகும் போது இவர் எப்படி.. இப்ப எப்படி பாத்தியா.." என்றேன்.
" நெறையா அடி பட்டிருப்பாறு இல்லையா.." என்றான்.

" ஒவ்வொருத்தரும் புதுசு.. நாமளும் புதுசு தானே.."

" அவரு அவ்வளவு நுட்பமான ஆளா  இருக்க வாய்ப்பில்லையே.."

சேர்வராயன் கோயிலுக்கு ஒருவர் தவறாக வழி காட்ட சுற்றி   சுற்றி  அந்த பாருக்கே திரும்ப வந்தோம்.

" Mild - ஆ 'Wine' டா.." என்றேன்.

" Chance - யே இல்ல. சாப்பிடலாம் வா."


ஒளி உணவு :

                             பண்பான பெரியவர் அன்போடு பரிமாற, அவருக்காகவே அவன் சற்றே அதிகம்  சாப்பிட வேண்டி இருந்தது.

உலகில் எந்த நாட்டில் எந்நேரத்தில் எந்த உணவு கிடைக்கும் என தெரியும் அவனுக்கு. தேடித் தேடி சாப்பிடுவான் டிஜி.முதல் வாய் சாப்பிட்டவுடன் கை கழுவி விடுவான். 'ம்..நல்லாருக்கு..அல்லது ம்..நல்லாயில்ல..' அவ்வளவு தான்.

'பற்று பற்றியே அறுக' - அறிஞர்  வழி வாழ்விதுவோ..தெரியவில்லை.

சேலம் திரு.இரா.குப்புசாமி. அவர்கள் டிஜிட்டல் ஆத்மா சைவத்திற்கு மாறினால் சில நுட்பங்களை கற்றுத் தருவதாக சொல்லி இருந்தார்.

குண்டலினி யோகம் பயின்று தியானத்துடைய உச்சம் உணர்ந்தவன், சைவம் அசைவம் என்பதல்ல..உணவற்ற நிலை..ஒளி உணவருந்தி இறை நாடும் வாழறிவைப் பற்றி பேசுபவன் வாழைக்காய் பொறியலைத் தேடி உன்னும் சூட்சுமம் புறியாமல் குழம்பித் தவிப்பேன் நான்.


         ஏற்காடு மலை உச்சியை நோக்கி பயணிக்கையில் பச்சை இலைகளைக் கொண்ட மரக்கிளைகளில் கொத்து கொத்தாகத் தொங்கும் பளீர்  சிவப்பு இலைகளைக் கண்டு வியப்புற்றேன். 'பச்சையும்'  'செம்மையும்' ஒன்றுள் ஒன்று ஊர்ந்திட இருவேறு முரண்கலின் ஒருமித்ததோர்  இருப்பில் சூரிய ஒளிக்கதிர் ஊடுரவ அதன் வெளிறிய நரம்புகள் செந்திரையினுள் மினுமினுக்க  என் அகம் சில கணங்கள் அந்நிரத்தினுள் சங்கமித்தது. கணத்தின் முழுமையுள் முழுதாய் மூழ்கிட்டத் தருணங்கள் அவை.

வாகனத்தை 'டிஜி' ஓட்ட பின்னால் அமர்ந்து பயணித்தேன்.

" ரொம்ப Dry - ஆ இருக்குடா Travel.." ( கடுங்குளிர் சாலை..)

" நல்ல காப்பி இது வரையில குடிக்கல நாம.."

சமகால இலக்கியவாதிகள் சிலரைப்பற்றி,  அவர்களின் குறைகளைப் பற்றி உரையாடல் நீண்டது..

" தேடித் தேடி தப்ப மட்டுமே சுட்டிக் காட்றதே அவரு வேலையாப்போச்சி..ஆக்கப் பூர்வமா என்னதான் செஞ்சாரு அவரு..அவர Follow பண்ண பெருங்கூட்டமே இருக்குங்கற ஒரே காரணத்தாலயே  அவர் எழுதறதெல்லாம் இலக்கியம் ஆயிடுது.அவர் ரசம் சொத்த சூடு பண்ணி சாப்பிட்டதெல்லாம் நமக்கெதுக்கு.."

" கண்டிப்பா..'Reasoning'..மனுஷனுக்கு கை தேர்ந்த கலை.எதையும் 'Reason out' பண்ணிடமுடியுதிள்ள..தற்க்க  ரீதியா எத வேண்ணாலும் பேசி ஞாயப்படுத்திடலாம்.தரிசனம் கண்டடஞ்ச மாதிரியான மாயையில பேசற பேச்சி.நாலு பெரு கேக்க  இருந்தான்னா 'தான்' பேசறதெல்லாம் உண்மைங்கற ' Illusion ' - Create ஆயிடும்.அது Subject- ஐயே நம்ப வெச்சி செதச்சிடும். Ok. 'Subject' செதையட்டும். அது அவரோட விதி. Listeners- ம், Followers- ம் பாழாப் போறாங்களே..அது எவ்ளோ பெரிய Crime.."

" Shoot பண்ணாக்கூட தப்பில்ல இவங்களை எல்லாம்.."

கொண்டையூசி வளைவுகளில் பசுமை படர்ந்த சாலையில் உறைபனி சூழ் வெளியில் தாறுமாறாக நீண்டது உரையாடல்.

" GOD...! யாரையும் 'Critisize' பண்ணக்கூடாதுன்னு 'Decision' எடுத்து யேன் நாம இப்படி பண்றோம்.."

" நம்ம அகத்த புதுப்பிக்க..ஆத்ம தரிசனத்த தேடிப் போற பயணமா இருக்கணும்னு Plan பண்ணி திரும்பத் திருமா தப்பு பண்ணிட்டுத் தான் இருக்கோம்ல.."

" ஆமாமா நமக்கும் இது Easy தான். ஒரு போத மாதிரி..Critisize பண்றது.யாரு  வேண்ணாலும்  பேசலாம்ல.."

" தப்ப சுட்டிக் காற்றத விட நல்லத வாழ்ந்து காற்றது தான் உத்தமமான செயல் இல்லையா.."

" ஒலகத்துல உத்தமமான செயல்னு எத சொல்றது.."

" இல்ல..'சரி' 'தவறு' ன்னு எல்லாக் காலத்துக்கும் போருந்தற மாதிரியான ஒழுக்க நெறின்னு எதையும் நம்மால சொல்ல முடியாதுங்கறது உண்மை தான். ஆனா அறப்பார்வையோட சிந்திக்கற, செயல்படற மனசு எல்லாருக்குமான நல்லத மட்டுந்தானே செய்யும்.. So பேசாம இருக்கறதே Best way தான் இல்லையா.." என்றேன்.

" யே..தூறல் போடுதுடா.."

" நிக்கக்கூட எந்த எடமும் இல்லேடா..இப்படி காட்ல மாட்டிக்கிட்டமே.."
" நல்லாவே மழை வந்துடிச்சிடா.."

" என்ன பன்றது..?."

" சரி விடு. இதெல்லாம் கெடைக்குமா. நீ அப்படியே ஓட்டு. அனுபவிப்போம்."

ஒரு மரத்தடியில் நிற்க..மலை உச்சியில் மழைக்குளியலில் 'நான்' நனைய... துடித்த உடலுள்  உற்சாகம் பரவ...

அகம்  ஒருநிலைப்பட்டதோர்  உச்ச  நிலையில்... 'சரணாகதி' என்பதை  உணர  கண்கள் கசிந்தது.

" டேய்..வா கெளம்பலாம்."

வண்டி  பறந்தது...

தூரத்தில் ஒற்றைக் குடில். அங்கெ மழைக்கு  ஒதுங்கிய மனிதர்கள். நாங்களும் ஐக்கியம்.
நெடு  மரத்தினூடு  வழிந்து சொட்டிய ஒவ்வொரு  மழைத்  துளியையும் அதன் தாள லயத்தோடு கவனித்தேன். இயற்கையை வெல்லும் இசை இது வரையில் பிறக்கவில்லை.

மலை உச்சி :

                            சேர்வராயன் கோயில் செல்லும் சாலையில் மலை உச்சியைக் குடையும் பணி நடந்துக் கொண்டிருந்தது.

" இது யார் வேலன்னு தெரியுதா..? " - டிஜி.

" தெரியலையேடா..நீ சொன்னியே Local Politicean.."

" ச்சே..ச்சே..பீகார்ல.."

" யேய்..என்னடா சொல்ற..!?"

" எது வரையில நீளுது பத்தியா அந்த  கை.."

" World - லயே No: 1.... ஆனா, அம்பானிய 'Beat' பண்ண முடியல..ஏன்னா அம்பானியும் நம்ம Government- ம் ரொம்பவே Close.. "

  Check post - ல் ஒரு பாட்டி நாங்கள்  ஐந்து ருபாய் கொடுக்க..

 " வரும்போது டிக்கெட் வாங்கிக்கறீங்களா சார்.." என்றார்.

அவரிடம் விசாரிக்க..

" கலேக்டர்லந்து எல்லாரும் அமைதியாத்தான் சார் இருக்காங்க..இவனுங்க மலைய சொரண்டி திங்கறதப் பாத்தா சோறு எறங்க மாட்டுது உள்ள.....ம்.......என்ன பன்றது விதியேன்னு கெடக்கறோம்.." என்றார்.

மலை உச்சிக்கு சென்று  சுற்றிலும் பார்க்க..

பேரமைதிக்குள் மழைச்சாரல்.

உடல் சமநிலை காக்க 'தேநீர்' வேண்டியது. தூரத்தில்  தெரிந்த ஒரு தேநீர் விடுதியை நோக்கி ஓடினோம்.

ஒரு நடுத்தர வயதுப் பெண் தன் உறவினரிடம் மிகவும் உணர்ச்சிப் பெருக்குடன் தன் குடும்பக் கதை பேசிக் கொண்டிருந்தார்.

" இங்க டீ நல்லாருக்குங்களா..இல்ல காப்பியா..?" என்றேன்.

வேண்டா வெறுப்புடன் வந்தவர்,

" எல்லாம் நல்லாத்தான் இருக்கும்.." என்றார்.

டிஜியின் உதடுகள் பக்கவாட்டில் நீண்டது. தேநீர்க்  கோப்பையுடன் வெளியேறினோம்.

" இதுல என்னடா தப்பிருக்கு..?"

" நீ கேட்டதுல தப்பில்ல..ஆனா அவங்க சூழல புரிஞ்சிக்கல.."

"......................"

" நமக்கு டீ தர்றதையே பெரிய இம்சயாத்தான்  நெனச்சாங்க அவங்க..பாவம் குடும்பத்தப் பத்தி பேசிட்டிருந்தாங்க இல்லையா ..இதுல நீ வேற.... அப்படி கேட்டிருக்கக்  கூடாதுடா..Ok...........Again... 'opinion'........ச்சே.......இந்த Travel - யே Spoil ஆயிடுச்சிடா..Shit.."

இருவரும் தேநீர் அருந்தியபடி ஆசுவாசப் படுத்திக்கொள்ள..

ஊர்ந்து செல்லும் பனிக் காற்றில் Echo voice கேட்டது...

' ன்னைக்கி Fruits- லதான்......!  யாரையும் திட்டிப் பேச......!  ம்ம சுயத்த மட்டும்.....!.'

" போலாமாடா.."

" போலாம்.."

ஒரு Cement குடையின் கீழ், மழைக்கு ஒதுங்கிய ஒரு வாலிபனும், மங்கையும் கட்டியபடி நின்றிருக்க.. நாங்கள் நெருங்கியும் அவர்கள் விலகவில்லை...நாங்களும் விலகவில்லை.

ஆத்திரமடைந்த டிஜிட்டல் ஆத்மா..

" அங்கிருக்கற நாலு பசங்களும் இவன அடிச்சிப் போட்டுட்டு அவள தூக்கிட்டு போனா என்ன பண்ணுவா அவ.."  கொதித்தான் .

" தூக்க விட மாட்டா..  இவளே போய்டுவா.."

" ச்சே.."

" பின்ன என்னடா..அவளுக்கு ஒரு 'Romantic super hero' அவன் தான். இவன் 'தேவதை' ன்னு சொல்லி வெச்சிருப்பான். இப்ப ரெண்டு பேருமே ஒரு கனவுலகத்துல சஞ்சரிச்சிட்டிருக்காங்க இல்லையா.. சாபக்கேடுடா.."

" டேய்..விட்றா.. என்ன 'Travel'  இது..கெளம்பலாமா, இப்படி சொதப்புதே.."

" சரி வா.."

நில்லாத வற்றை நிலையின என்றுணரும்
புல்லறி  வாண்மை கடை.
                                                                             குறள்- 331.
                                            
நாங்கள் டிக்கெட் கேக்காமல் போனதால் அந்தப்  பாட்டி  எங்களை நன்றியுடன் புன்னகைத்தார். தலையாட்டி 'Check post'  கடந்து மௌனமாகப் பயணித்தோம். வண்டி பள்ளத்தில் தானாக ஊர்ந்து சென்றது.. இரு பக்கமும் மலையை குடைந்து கொண்டிருந்தார்கள்.

மனிதன் ஆடும் ஆட்டங்களை மௌனமாகப் பார்த்துக்கொண்டிருந்தது மலை.

கோயிலைத் தேடிப்  பயணிக்கையில், வழி கரடு முரடாக செல்ல..சற்றே பயந்து தயங்கி திரும்பினோம். ஆறு பேர் அரிவாளுடன் நடந்து வர..

" கோயிலுக்கு எப்படிங்க போறது.."

சலனமில்லாத முகங்கள்.

" தெர்ல. இப்படி போ.."

சற்றே விலகிய பிறகு,

" காட்டுல இந்த மாதிரி ஆளுங்க கிட்ட பேசக்கூடாதுடா. படிச்சதில்ல, Simple- ஆ அறுத்துட்டுப் போயுடுவாங்க..நீ உன் அருள்..அன்பு.. அதெல்லாம் இங்க 'Apply' பண்ணி பாக்கக் கூடாது."  என்றான் டிஜி.

அந்தக் காட்டுப் பாதையில்  இரு சக்கர வாகனத்தை தள்ளியவாறே நடந்து சென்று 'ஏற்காடு'  சேர்ந்தோம்.

தொடர்ந்து பெய்த மழையால் ஒரு ஒற்றை கூரையின் கீழ் நின்றுகொண்டு மிளகாய் பஜ்ஜியும் தேநீரும் அருந்தினோம்.

            அருகில் இருந்த ஒரு 'Transform'- ல் தீப்பொறி தெறிக்க,  பயந்து நடுங்கிய பயணி ஒருவரைப் பார்த்து  'பொறி' விற்கும் பாட்டி துள்ளி குதித்து சிரிக்க.. நானும் டிஜியும் புரியாமல் விழித்தோம். அடிக்கடி தீப்பொறி தெறிக்க அப்பயணி அலற பாட்டி வயிற்றைப் பிடித்து சிரித்தார் .




" இந்த திரான்ஷ்பாம் எப்பவுமே இப்படி தான். அரமணி நேரங்கூட எறிஞ்சி கிட்டே இருக்கும். இதுக்குப் போயி.."  சிரிக்கிறார்.

நாங்களும் சிரிக்கிறோம்.

பாட்டியின் உள்ளம்  கனிந்த சிரிப்பை ரசித்த அதே சமயம் மலை வாழ் மக்களின் துயறையும் அதை அவர்கள் இயல்பென கொள்வதையும் நினைத்து உள்ளம் கனத்தது.

" இந்த 'Dress' - அ  'Change' பண்ணாம  இங்கிருந்து  கெளம்ப  முடியாது.."

" அப்ப  சேலம்  கெளம்பலாமா....? "


புறப்பாடு :

                 மழையில் நனைந்தவாறே இரண்டு மணி நேரம் மலையை விட்டு இறங்கினோம்.
மாலை ஐந்து மணி. சாலை எங்கிலும் படர்ந்த பனி பாதையை மறைக்க உறை குளிரில்  நடுங்கியவாறு  வண்டியின் 'Head light'- ல் மெதுவாகச் சென்றோம் . ஒரு Bike- ல் ஐந்து வயது சிறுவனை குடைக்குள் அமர்த்தி ஓட்டிச் சென்றார் ஒருவர். அவருக்கு வழி செய்யும் பொருட்டு என்னை சற்றே முன்னாள் செல்லச் சொன்னான் டிஜி. நாங்கள் மெதுவாக செல்வதை கிண்டல் செய்தார்கள் சக பயணிகளான வாலிபர்கள்  இருவர்.

" அநாகரிகம்  இல்லடா  இது.."

" சரி விடு. Enjoy பண்றாங்களாம்.."

சிறு அருவியில்  நின்றவாறு இருவர் உறைபடம் எடுத்துக் கொண்டிருந்தனர்.

" இயற்க்கைய எங்கடா ரசிக்கறாங்க இவங்க.."

" அவங்க சொன்னாங்களா ? 'Photo' எடுக்கத்தான் அவங்க மலைக்கே வந்திருக்காங்க.."

" ஹ.. ஹ.. ஹ.."

" பெரும்பான்மையான குடும்பங்கள் 'Vacation'- ல 'Trip' போறதே 'Snaps' எடுக்கத்தானே.."

" டேய் நிறுத்து.." என்றான் டிஜி.

பாதி மலையை கடந்த இடத்தில்,  இருள்சூழ் வானில் மேகத் திவலைகள் விலக ஓர் கரும் பேரிருப்பு  முகிழினூடாக வெளிப்பட்டது. வளைவில்  வந்து கொண்டிருந்த வண்டி உறைந்து நின்றது. அது முழுவதுமாக தெரியும் வரை நாங்களும் உறைந்திருந்தோம்.
மேகம் விலக..  தெளிவாகத் தெரிந்தது ஒரு 'மலைக்குன்று'.
பிறகே, எங்கள் உடல் தளர்ந்தது.

" 'Shock' ஆயிடுச்சிடா.." என்றேன்.

" ம்ம்.. ஆழிப்பெருங்கூத்து- போல.." - டிஜி.

" அதே தான். ஒரு மணி நேரம் Sustain ஆச்சினா மலையில ஆடனவனல்லாம் அடங்கிடுவான். அப்புறமா வெளகிடுச்சினா ஒழுங்கா வாழ்வானில்ல.." 

" நீ வேற.. ' EAZY ' - ன்னு சொல்லிட்டு திரும்ப அளப்பறைய Start  பண்ணிடுவானுங்க.."

நான் சிரிக்க.. அவன் சிரிக்க..

" TOTAL- ஆ 'Collapse' ஆயிடுச்சிடா இந்த TRIP."

நான் பேசவில்லை.

தன்னை உயிர்ப்பிக்க, ஊக்கப்படுத்த மலையை தேடி வந்தவன்,  இயற்கையுடன் இயலமுடியாமையால் துவண்டு போனது உண்மையே.  ஆனால், எனக்கு... எப்பொழுதும் 'ஆசானாக', 'பிதாமகனாக',  உற்ற 'நண்பனாக' விளங்கும்  டிஜிட்டல் ஆத்மாவுடனான இக்குறிஞ்சிப் பயணம் தந்த அனுபவம் எப்பொழுதும் போல சற்றே முக்கியமானதே .

கொண்டையூசி வளைவில் மனம் ஒருமித்ததொரு மெளனம் சுமந்து பயணிக்கையில்..

" ஒரு நிமஷம்டா.." என்றான் டிஜி.

இறங்கி மலையை சுற்றிலும் பார்வையிட்டான்.

'3D - Images' ஆக,  உணர்ச்சிகளைத்  தவிற்த்தே பார்த்திருக்கக்கூடும்.

CLICK...!    CLICK...!    CLICK...!

" போலாம். "

பயணித்தோம்..

*  இன்னைக்கி Full- ஆ Fruits தான்...

*  யாரையும் குறை பேசக்கூடாது...

*  சுய தரிசனம்...

*  இயற்கையோட கலக்கணும்...

*  சரணாகதி...

                                 திட்டமிட்ட எதையும் செய்யவில்லை நாங்கள்.
ஆயினும்,  ஒவ்வொரு  பயணமும் மனிதனுக்கு ஏதோ  ஒன்றை  போதித்த படியே தான் உள்ளது..

                                                            *******

No comments:

Post a Comment