தூக்கி எறிய காரணங்கள் பல காத்திருக்கிறது வாழ்க்கையை. புற அழுக்குகள் மட்டுமின்றி அக அழுக்குகளும் அள்ள அள்ள சுரந்தபடியே தான் உள்ளது நாள்தோறும். அற்பமான மானுடர் தம் சொற்பமான வாழ்நாளில் விகள்ப்பமான செயல்களை விட்டொழித்து தேடித் பற்றவே வேண்டியுள்ளது நன்னெறி போற்றும் நயமிகு தோற்றங்களை.
பொல்லாதவன், நெறி நில்லாதவன், ஐம் புலன்கள்தமை
வெல்லாதவன், கல்வி கல்லாதவன், மெய்யடியவர் பால்
செல்லாதவன், உண்மை சொல்லாதவன், நின் திருவடிக்கன்பு
இல்லாதவன், மண்ணில் ஏன் பிறந்தேன் ? கச்சிஏகம்பனே.!
- பட்டினத்தார்.
உத்தமன் என்றெண்ணிக் கொண்டிருக்கும் என்னுள்ளேயே எண்ணிக்கையிலடங்கா குப்பைகள் கொட்டிக்கிடக்க பிறனில் எங்கனம் தேடுவேன் நான் நற்குணங்களை..?!
என்னுள் விரவியுள்ள குப்பைகளைக் களைந்து, உள்ளுள் உறைந்துள்ள இறையே, உன் திருவடிகளில் நான் 'என்னை' சமர்ப்பிக்கிறேன். திரை விளக்கி உன் திருமுகம் தனை நான் காண அருள்வாய்..!
கல்லாப்பிழையும் , கருதாப்பிழையும், கசிந்துருகி
நில்லாப்பிழையும், நினையாப்பிழையும், நின் அஞ்செழுத்தைச்
சொல்லாப்பிழையும், துதியாப்பிழையும், தொழாப்பிழையும்
எல்லாப்பிழியும், பொறுத்தருள்வாய் கச்சிஏகம்பனே.!
- பட்டினத்தார்.
அண்ட சராசரத்தின் சாராம்சம் அனைத்தும் அடங்கியுள்ள இப்பிண்டத்தினை அறியும்
பக்குவம் அருள்வாய், என்னுள் உறை இறையே..!
****
தன்னை அறிந்தவன் முழு மனிதனாகிறான்.
சொடுக்குக :
1. http://www.youtube.com/watch?v=7G-7-ZiiM-o
( Jiddu Krishnamoorthy - Who am I ? )
2. http://www.youtube.com/watch?v=SNXM4Sq-GIA
( Ramana magarishi - Abide as the SELF )
3. http://www.youtube.com/watch?v=Cs1zwzKQTj8
( முழு மனிதனாவது எப்படி? - (வள்ளலார் வழி) சேலம் குப்புசாமி. )
****
No comments:
Post a Comment