இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Showing posts with label சங்கப் பாடல் போல... Show all posts
Showing posts with label சங்கப் பாடல் போல... Show all posts

Tuesday, 2 November 2010

சரணாகதி

கலைகளில் கரையும் எல்லாத் தருணங்களிலும்
கிட்டுவதில்லை கலையின் உச்சம் ;
என்னுள் நான்கெட நானறியே னத்தருணம்
விளைகிறது கலையின் உச்சம்.

முன்னது நிகழ்த்து கலை.
பின்னது நிகழ்கலை.

                     ****

சுழி

Milky way Galaxy

           உண்டாகி கருவாகி உறுவாகி தருவாகி
                            திருவாகி குருவாகி மருவாகி பருவாகி
                            பல் விழுந்து பாடை சேர்ந்து
                            மண்ணூர்ந்து  புல்வளர்ந்து - மாவிருந்து
                            மடிசுரந்து காம்பூர்ந்து
                            ஊர்ந்து ஊர்ந்து
                            தொடர்ந்திருந்து
                            இருந்து இருந்து
                            இருத்தலில் 
                            இருத்தலாய்
                            விளைகிறதே..

                                    ****

                                   

Saturday, 11 September 2010

Wednesday, 8 September 2010

வற்றாதே அன்பு

தூற்றுவார்  தூற்றினும்  ஊற்றிட  வற்றாதே

ஊற்றுங்கன்  ஊறிடும் அன்பு .

Wednesday, 1 September 2010

தெளிவு

முள்ளெனத்  தைத்திடும்  உண்மையி  னூடு 


 சில்லெனச்  சிளிர்த்திடும்  தெளிவு.

Monday, 30 August 2010

எல்லாம் தலை

நுனிப்புல் பனிபோல்  நிலையுடை வாழ்விது

வையத்துள் எல்லாம் தலை.

பிறவிப்பினி

சுழல்தனில்  சிக்குண்ட  துரும்பா  யிப்பிறவி
தான்தனில்  தங்கி  விடல். 

Sunday, 29 August 2010

ஏக்கம்

ஓடுமுகிழ் வான்போல் வாய்ப்ப நெஞ்சத்

தஞ்ச முறும் எண்ணம்.

வளர் - சிதை மாற்றம்

எனக்கு மெனக்குமான தொடர் போராட்டத்தில்

கரைந்து மறையு மென் வாழ்வு ;

யான் வளர யான் தேய்கிறே

னென்செய் யென் பராபரனே ?

விழிப்பில் கெடு முழுமை

நிகழுங்கன் அறிவதில்லை சிரிப்பதூஉம் அழுவதூஉம்

மழலைகளாய் வாழ்ந்த போழ்து - யான்வளர

நிகழுங்கன் அறிகிறேன் அனைத் துணர்வும்

அத்தருணம் கெடுகிறது முழுமை.

எண்ணக்குவியல்

எண்ணமற்ற கணங்களில் உறைந்திருந்த தருணம்

வந்நகம் கொண்டு வருடும் வளர்ப்புபூனை ;

கல்லிட்ட மையம் தனை நோக்கி

குவியும் என்னைத் திவழைகள் .

Tuesday, 24 August 2010

நானென் முனைப்பு நெஞ்சு

அடிமுதல்  முடிவரை
அணுவணுவாய்   வாய்கொண்டு
விழித்திருந்து
விரைந்தெழுத விரைத்தொழுகிய
நென் நகந்தை .

விடியுங்கால் கால் இடை
தளர்ந்த நடை;

அகம் கண்டது விடை.

தரிசனம்

நானழிந்த தொரு தருணம்
மின்னி மறைந்த திறை ;

சிந்தையுள் தாண்டவப் பறை
கிட்டுமோ மீண்டுமொரு முறை ;

காத்திருந்தேன் கடைசி வரை
காணவில்லை - நான்
உள்ளவரை.

தவம்

எழுவாய் தொழுவாய்
தொழுதழுது விழுவாய் ;

வீழ்ந் தவிழ்ந் தவழ்வாய்
தவப் பயனாய் திகழ்வாய் .

               ****

நாணம்

நாண மிழந்த நங்கையர் காண்
காட்சி யாவும் காணலே.

பாட்டி சொல் கேளீர் :

கடைசி வரைக்கும் எதுவுமே
கெடைக்காதுடி கண்டாரவோளி . .!

                      ****

திடமது நாணல்

மரத்தினுந் திடமது நாணல் என்ப

நானழிந்த தவப் புதல்வர் .

பற்று

பற்றுற்று  இயக்கமுற்று  இயக்க  முற்றி

முற்றிற்று  உற்ற  பற்று.

Wednesday, 27 January 2010

முடிவு

முடிவின்மையே ஓயாத பயணத்தின் முடிவெனில்

நான் செய்யவென வேதேனு முன்டோவெனும்

புதிரின் பிடியில் உரையும் நான்..!