இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Monday, 3 January 2011

அசோகமித்திரனின் 'பிரயாணம்' - ஒரு பார்வை


அசோகமித்திரன்

மானுடம் கண்டறியாத பல கேள்விகளுக்கான விடையைத் தேடத் தூண்டும் தருணங்கள் அமையப்பெற்ற கதை அசோகமித்திரனின் 'பிரயாணம்'. தன்னை மிஞ்சிய குரு தானேவெனும் உணர்தலில் இருந்துவரும் எனக்கு இக்கதையும் மற்றுமொரு  உதாரணமே.

 உதவத் திராணியற்ற சதைத் தொக்குப்பாகத் திகழ்ந்தாலும் பிறன் இருப்பு தரும் மனோதிடம், புதிரான ஒன்றே.. இந்த குருவும் அவனுக்கு அப்படியே. மரணம் நெருங்கும் தருவாயில் உயிர்களுள் ஏற்ப்படும் அசாத்திய அசுர பலம் வியப்பிற்குறியதே.

   'நான் நிச்சயமாக இருந்தேன். அந்த ஓநாய்களின் அடக்கமான உறுமல்கூட அப்போது
அப்பிரதேசத்தின் அமைதியோடு பொருந்திவிடக் கூடியதாகவே தோன்றியது.'  - மலைப்பாதைகளில் பிணத்துடன் பயனிப்பவனின் விழிப்புணர்வு , இயற்கையோடு அவனையுமறியாமல் இயந்து போனதின் வெளிப்பாடே இது.

'...கடைசியில் மரணம்-உயிரின் வாழ்வாசை என்ற இரு அடிப்படை இயற்கைச்சக்திகள் மட்டுமே எஞ்சுகின்றன. மிச்சமெல்லாம் வெறும் கற்பனை, வெறும் பிரமை-- என்று எண்ணச்செய்கிறது இந்தக்கதை' - என்னும் திரு. ஜெயமோகன். அவர்களின் கூற்றை வழிமொழிகிறேன்.

  'அதுவரை நிலவிய அமைதி, நியதிக்குட்பட்ட கட்டுப்பாடு எல்லாம் நொடிப் பொழுதில்
சிதறுண்டுபோயின' - என்னும் வரிகள் எண்ணத்தூண்டும் கேள்விகள் பல..

                                                                  ****
பிரயாணம்- சிறுகதையை வாசிக்க இங்கே சொடுக்கவும் :

http://azhiyasudargal.blogspot.com/2010/06/blog-post_25.html


                                                                 ****

2 comments:

  1. அசோகமித்ரனின் "இன்று" நாவல்...தமிழின் மிக முக்கியமான நாவல்...நண்பர் வாசித்திருப்பீர்கள் என நம்புகிறேன்.

    ReplyDelete
  2. விரைவில் வாசிக்கிறேன் துரோணா..

    ReplyDelete