இன்னா தம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
Sunday, 10 October 2010
ஞாயிறு தூற்றுதும்.. ஞாயிறு போற்றுதும்..
ஞாயிறு தூற்றுதும்..
ஒத்தி வைத்த அத்தனை
சந்திப்புகளையும் நிகழ்த்திவிட
பொத்தி வைத்திருந்தேன் இந்த ஞாயிறை.
கூப்பிட்ட அத்துனைப் பேரும்
குடும்பத்துடன் குதூகலிக்க
குப்புறப் படுத்து
குமுறுகிறது
என் ஞாயிறு.
- 10 மணி {காலை}
ஞாயிறு போற்றுதும்..
பெரும் போராட்டத்திற்குப் பிறகு
உணர்வுகளை ஒ(து)டுக்கிவிட்டு
உள்ளூரப் பயணிக்கத் திட்டமிட்டிருந்தேன்.
ஓரக் கண்ணால் எட்டிப் பார்த்தது பற்று.
சலநித்தத் தருணம் மரணித்தது
உள்ளொளிப் பயணம்.
சொல்லி வைத்தார் போல்
தேடிச் சென்ற அத்துனைப் பேரும்
ஓடி ஒழிய
நாடிச் சென்றேன் மீண்டும்
எனை நானே.
எதிர்பாரா தத்தருணம்
எட்டிப் பார்த்த தனிமை என்னைப் பற்றி..
..என்னைப் பற்றி பலப்பல ஆச்சர்யங்களை
எனக்குணர்த்த
உருகியோடிய தனிமையின்
நீரோட்டத்தில் நீந்தியவாறு
கழிந்தது - இந்த ஞாயிறு.
- 10 மணி {இரவு}
****
Labels:
கதையாய் கவிதை
Subscribe to:
Post Comments (Atom)
உள்ளொளிப் பயணம்...உள்ளூரப் பயணம்...பசு...ம்ம்ம்ம்...எங்கயோ போயிட்டீங்க...
ReplyDeleteபேசுவதற்கு யாருமற்ற இப்பெருநாளில்
ReplyDeleteகடைவீதியிலும்
உணவகத்திலும்
நெடுஞ்சாலையிலும்
தனி அறையிலும்
தனிமையை மட்டுமே
உணரும் இந்த
வாரத்தின் விடுமுறை நாளில்
மனம் தன் இருப்பை
மௌனத்தில் மொழிந்திடும் இந்நாளில்
முகவாயை
முன்கால்களுக்கு இடையில் வைத்துக்கொண்டு
கண்ணிமைகளை மட்டும்
உயர்த்தி பார்க்கும்
நாய் போல
அமைதியாய் நாள்முழுதும்
அறையில் படுத்துக்கிடக்கிறது என் செல்போன்.
கவிதைக்கு Comment-ஆ கவிதைய போட்டு என் கவிதைய காமெடி பீசாக்கிட்டீங்களே மொட்ட தலையாரே..! Anyway.. நன்றி வேணு.. நன்றி றாஜா..
ReplyDeletenallarukkuthunga pasupathi...
ReplyDeleteநன்றி நாகராஜ்..
ReplyDelete