இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Saturday, 9 October 2010

கசிந்துருகும் உறைபிணி


















சொல்லொனாத் துயரங்கொண்டு
நெஞ்சடைத்து சிந்தைக்குள்
சிக்கு விழ..

பேரிடிச் சத்தம்.
பெருமுகிழ்க் கூட்டம்.
இருள் சூழ..
கன மழையின் முன்னோட்டம் கண்டு
கச்சிதமாய் கூடு சேரும் பறவைகள்.

தென்றல் இசைத்திட
தன்னிசையில் தானே ஆடிடும்
பியானோவாய் - தென்னங்கீற்று.

உருண்டோடிடும் நதிநீர்
இடைபட்ட பாறையில் தடைபட்டு
இருபக்கமும் பிரிந்து..

..மறுபக்கம் குவிந்து
ஒருமித்ததொரு சங்கீதம் எழுப்ப

இறுகிப் பிடித்த இதயம்
இளகி
இயல்பாய் இசைத்தது.

படபடத்த நாடி
பதப்பட்டு
பக்குவமாய்
நாளங்களில் நளிந்தோடிட..
உள்ளம் உருகி 
கன்னங்களில் கசிந்தோடியது  
கவலை.

      ****

4 comments:

  1. "இதுவும் கடந்து போகும்" ,
    நீங்க சொல்றது தாங்க மாஸ்டர் இது ,
    அனால் இது தான் உண்மை ...
    இந்த கவலை கவிதைக்கு பிறகு நீங்க நெறைய போஸ்ட் பண்ணிடிங்க,, இன்னும் பண்ணுவிங்க

    ReplyDelete
  2. கச்சிதமாய் கூடு சேரும் பறவைகள்...

    தன்னிசையில் தானே ஆடிடும்
    பியானோவாய் - தென்னங்கீற்று...

    உருண்டோடிடும் நதிநீர்
    இடைபட்ட பாறையில் தடைபட்டு
    இருபக்கமும் பிரிந்து..
    மறுபக்கம் குவிந்து
    ஒருமித்ததொரு சங்கீதம் எழுப்ப...

    கவித்துவமான காட்சிகளை கச்சிதமாய் காகிதத்தில் பதித்துவிட்டீர்கள்......வாழ்த்துக்கள்...

    ReplyDelete
  3. நன்றி றாஜா.நன்றி விமல்.ஆனா, ஒரு வார்த்தைக்கு மேல யாராவது Comment எழுதுனாவே எனக்கு கூச்சம் கூச்சமா வருதுங்களே..

    ReplyDelete