இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Wednesday, 29 September 2010

DOLLAR பயணம் - பிற்பகுதி

உங்களை அன்புடன் வரவேற்கிறது

  ... பயணம் தொடர்ந்தது...
  " செம பசி விமல் .எங்கயாவது கட இருந்தாப் பாரு."
  " OK.. MASTER..! "  Accelerator - ஐ முறுக்கினான்.
(ஏனோ அவனுக்குத்தான் தெரியும்.)
                            
  செங்கல் சூளை


  செங்கல் தயாரிக்கும் இடத்தில் அவர்களின் செய்முறையினை 

 பார்த்து அவர்கள் அனுமதியுடன் CLICK செய்ய.. ஓடி வந்து என் முதுகுக்குப்  பின்னால் நின்று MONITOR - ஐ மோப்பம் பிடித்தால் ஒரு நங்கை. அவளின் சுவாசம் என் இடக்காது மடல்களை வருட, நடக்காது என்பது போல தலை அசைத்தான் மர்மன்.  அவளின் அருகாமை கிளர்ச்சியும் நெகிழ்ச்சியும் கலந்து என்னை ஏதோ செய்தது.
(பெண் எப்பொழுதும் ஒரு புதிரே..?! )
      மௌனமாகப் பயணிக்க..
    " கவித யோசிக்கறீங்களா..? "
    " எப்படி விமல்...?! "
    " இதுக்..கூடத் தெர்லனா..அப்பறம் நான் என்ன....? "
    " வர மாட்டுதே விமல்.."
    " வர..வர.. எழுத்துப் பித்து ஆயிட்டீங்க.."
    " பித்து...நல்ல விஷயந்தானே.."
    " என்ன சொல்றீங்க..சமநிலை தான் எப்பவுமே நமக்குத் தேவைன்னுச் சொல்லுவீங்க."
    " கண்டிப்பா விமல். ADDICTION and AVERSION, ரெண்டுமே Abnormality -த்தான். But..நம்ம  Addiction பத்தின ' Continuous Passive Awareness ' - நமக்கு இருக்கற பட்சத்தில Addiction - ங்கறது Healthy - யான விஷயந்தான். "
    " இது ஏதோ சால்ஜாப்பு மாதிரியே இல்லைங்...மாஸ்டர்..? "
    " நீ உண்ணும் வளரனும் தம்பி.."
    " எப்ப்டி...' Addiction ' ஆவுற அளவுக்குங்களா..? "...........,

   , ..............வண்டி குண்டும் குழியுமான சாலையில் தடுமாறியபடி சென்றுக் கொண்டிருக்க..நெடுஞ்சாலைத் துறை ஊழியர்கள் கிராமத்துச் சாலைகளைச் சரி செய்து கொண்டிருந்தார்கள். கிராமத்தின் முன்னேற்றங்கள் முழிபிதுங்க வைத்தது. விசாரித்ததில்..'நெடுஞ்சாலைத்  துறை' கிராமங்களை புதுப்பிப்பதில் முனைப்போடு தான் செயல் படுகிறதென்பது தெரிந்தது.  மகிழ்ச்சி.
           
 
  ஊத்தங்கரை ஊழியர்

                                                       

போட்ட்ருவன் பாத்துக்க..
 அவர்,கைபேசி எண்ணைக் கொடுத்து செய்தித்தாளில் அச்சிட்டவுடன் தெரிவிக்கச் சொன்னார்.


    " நான் நல்லாத் தெரியறனா ? " வெகுளியாக் கேட்டா விமல்.
      ...ச்சே.. எனக்கு நெகிழ்ச்சியா இருந்துச்சி விமல்."
    " எனக்கு ஒரே அயற்ச்சியா இருக்குங்.. மாஸ்டர் .!.எங்கயாவது  டீ குடிக்களாங்களா..? "
     "  FULL MEALS - ஏ சாப்படலாம் வா.."
      " பரவசத்துல இருக்கீங்கில்ல ..? "
      "  பரம பசில இருக்கறேன் . ஆமா பணம் வெச்சிருக்க இல்ல..? "
      துவண்டு போனான் மர்மன்.
      " TREAT இல்லீங்களா  ? "
        " இந்தா வா வெக்கிறேன் ட்ரீட்டு. ஏதோ என் பக்கத்தலையும் ஒரு பொண்ணு வந்து CLOSE - ஆ நின்னு பரவசப் பட வெச்சிட்டாலேன்னு ஓங்கிட்ட சொன்னா அப்பத்தான்  இவருக்கு பசிக்குமாம் ..! ' மருதிப்பட்டிக்கு' எத்தன வீட்டப் பாத்த நீ.. இது வரைக்கும்..?  "

        " மாஸ்டர் இது வன்முற..ல்ல. அவ ஒங்கப்  பின்னாலத்தான  நின்னா. என் பின்னால இல்லையே.?!...கலையில அந்த மஞ்சத்தொட்டத்து  புள்ளகிட்ட கூட என்ன வுட்ல நீங்க. இப்ப வந்து பெருசா....."

        " விமல். போதும் .போதும்..விமல். இதுக்கு மேல நீ எதுவும் பேசாத. காலைலேந்து உன்ன நான் காயப்படுத்திருக்கேன் இல்ல.. இதுக்கு நீ எனக்கு என்ன தண்டன வேன்னா குடு விமல். குடு.."

    " சரி.. சரி.. வாங்க எங்கயாவது போய் சாப்படலாம். போர் அடிக்குது ஒங்க சிவாஜி Modulation - ன்னா கேக்கறீங்களா..! "
" அந்த பில்லு...?"
" நீங்க Modulation - அ Change பண்ணுங்க, நான் Bill - அப் Pay பன்றேன்."
வண்டி மெல்ல ஊர்ந்தது..................,

குன்னத்தூர்

            மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் சாலையில் அலைந்து கொண்டிருந்தார்கள்.Rhesus Time. சாலை ஓரத்தில் கயித்து கட்டிலில்  சாக்குப்பை போட்டு முறுக்கு , நிப்பட்டு, இலந்தைப்பழம், நெல்லி, கொய்யா அதனருகில் Lays வகையறாக்கள் என விற்றுக் கொண்டிருக்கும் பாட்டி. மாணவர்கள் சாலையோரத்தில் ஒண்ணுக்கடித்து அரட்டை அடித்தவாறு திறிந்துக் கொண்டிருந்தார்கள். பார்க்க ஆனந்தமாகத்தான் இருந்தது.

          மாறி விடவில்லை. இன்னும் 'பழைமை' உயிர்ப்புடன் தான் இருக்கிறது. அது நம்பிக்கை அளித்தது.  
    " வா விமல். உள்ள போலாம்."
    " என்ன.. விளையாடறீங்களா.. Schools - லேல்லாம்  Shoot  பன்ன Permission தர மாட்டாங்க மாஸ்டர்."
 " அப்டியா..?! "
 " சொன்னாக் கேளுங்க.. அப்பறம்  HM அவமானப் படுத்திட்டாருன்னு சொல்லாதீங்க.."
" தட புடலா விருந்து வேணும்னா.. வா எங்கூட..HM - கிட்ட சொல்லி பசங்கள எல்லாம் வரிசையா நிக்க வெச்சி 'NATIONAL அந்தம்' பாட உட்டுர்லாம்."
விஷமச் சிரிப்பு சிரிக்கிறான் விமல். நான்கு மாணவர்கள் என்னுடன் நடந்து வர....

" ரகுராம்  சார் இருக்காறாப்பா..? "
" எங்களையுந்தான் எடுங்களேன்.."
" எங்க இருப்பாருன்னு தெரியுமா..? "
" SONY தான சார். என்ன Configuration.? "
மர்மன் அவனை உற்றுப்  பார்க்கிறான் .மற்றொருவன் Handi Cam - ஐத் தொட்டுப் பார்த்து ,
" டேய்..இது 2000 Model - ரா. 1400 Mega Pixels. "
  மகிழ்ச்சி.
மர்மன் அவனையே பார்க்க,
" Computer Room- ல இருப்பாரு சார்."  அவர்கள் கை காட்ட.. ஒருவன் என்னிடம் வந்து மெல்லிய குரலில்,
"அண்ணா..இந்த ரகுராம் சாரு எங்கிருந்து வராரு தெரியுங்களா..? "
" ஏம்ப்பா..? "
" இதுக்கு முன்னால கல்லாவில இருந்தாருன்னு மட்டும் தெரியுங்னா . ஆனா அவரு ஊரு எதுன்னு யாருக்குமே தெர்லண்ணா..!"
" ஆமாண்ணா.. ஒரே மர்மமாத்தான் இறுக்குதுணா..!!" இன்னொருவன்.
 விமல் வயிற்றைப் பிடித்து சிரிக்கிறான்.
 என்னைச் சுற்றிழும்  மர்மர்கள் சூழ, விரைவில் என் HEART - ல் MURMER கேட்பது உறுதி.

 " நானும் அதத் தெரிஞ்சுக்கத் தாம்பா போறேன்..வாங்க அவரையே கேட்டர்லாம்."
" ஐயோ ஆள விடுங்க சார்..!" ஓடிப் போனார்கள்.

 ரகுராம் .
   
   என் பால்ய கால நண்பன். அவனே தன் முயற்ச்சியால் வெறும் 15,000 ரூ.செலவில் M.Sc., B.Ed., முடித்து படிப் படியாக முன்னேறி இன்று ஒரு நல்ல ஆசிரியனாக விளங்குகிறான். ஆனால் அவனும் தன் மாணவர்களுக்கு ஒரு மர்மனாகவே ஆனது அதிசயமே.
   Computer Class - க்குள் நுழைய..
  " யே..வாடா.. ஒக்காரு.." இருமினான்.
     விமலை " வாங்க..உக்காருங்க.." என்றான்.
Chair எடுத்துப் போட்டான் ரகுராம். Computer - ல் ஏதோ நோண்டிக்  கொண்டே
" எப்படா வந்த ..? என்ன Camera - ஓட ..? "
" இங்க Hotel ஏதாவது இருக்காடா..? " நான்.
 " எனக்கு இங்க எதுவுமே தெரியாதே டா.. ! "
 விமல் என்னை முறைக்கிறான்.( Full Meals..!) நான், நமட்டு சிரிப்பு சிரிக்கிறேன்.
" காலையில இருந்து தண்ணிக்  கூட குடிக்கலடா.."
" அத இங்கயே குடி " குடித்து முடித்து,
" சரிடா நாங்க கெளம்பறோம் "
" என்னடா வந்த.. உடனே போறன்ர.."
" இல்ல, நாம சாயங்காலம் பாக்கலாண்டா.."
" ஒடம்பு சரி இல்லடா அதான் .." ரகுராம்.
" நான் Evening ஒங்க வீட்டுக்கு வந்து Anti - Biotics தரேண்டா..சரி.."
(வேறென்ன செய்ய..? இயற்கை மருத்துவம் இயல்பில் ரொம்பவே தூரத்தில் தான் இருக்கிறது.)

     கடுமையான பசி . மர்மன் கடு கடுப்புடன் TVS ஓட்டுகிறான். இருப்பினும் சாலையில் கொட்டி வைத்த நெற்ப்பயிர்களைப் படம் பிடித்தேச் சென்றோம்.

 
சாலையில் போகும் வாகனங்கள் நெற்க்கதிர்களில் இருந்து நெல்லைப்  பிரித்துவிடும்.

        பரவலாக இப்பயணத்தில் நாங்கள் சந்தித்த பெரும்பான்மையோர் வயோதிகர்களே. கிராமத்துக் கலாச்சாரம் சுமந்து நிற்கும் செப்பேடுகள். பாரம்பரியத்தை வெளிப்படுத்தும் கல்வெட்டுகள் கிராமத்து முதியோர்கள்.

        பிள்ளையார் சிலை தெரிந்தது. விநாயகர் சதுர்த்தி முன்னிட்டு அமைக்கப் பட்டது. அதனருகில் ஒரு குடிசையில் கயிற்றுக் கட்டிலில்  ஒரு வயோதிகர் படுத்துக் கொண்டிருந்தார். அருகில் இன்னொருவர் பீடி புகைத்தபடி குக்கி அமர்ந்திருந்தார்.

எங்களை கண்டவுடன் விசாரித்தனர்.........,
           
  " எடுத்துக்கொப்பா.. சாமியத்தானே எடுக்கற, நல்லா எடு "
 " போட்டா புடிச்சி என்னா பண்ணப் போறீங்க..? " அருகில் இருப்பவர்.
  " நம்மூர்ல க்கரத  பத்தி காலக் கதிர்ல போடுவாங்க போலக்குது டா.."
 " போட்டர்லாமே.." விமல்.
நான் CLICK செய்ய..
  " ஆண்டவா இந்த முட்டி தான்.. ஏப் புள்ள.." பாத்திரத்துடன் செல்லும் பெண்ணைக்  கூப்பிடுகிறார் கிழவர் .
  " அடியேய் .. உண்ணத் தாண்டி.."
 " என்னா தாத்தா..? "
"  கூப்பட கூப்பட போய்கினு க்கரவ.. செத்த.. இந்த கால புடிச்சி வுட்டுட்டு போடி. யெம்மா.."
 " க்கும்.. போயா..ஏய். நான் கேவுரு அரைக்கப் போவனும் "
" அட செத்த நேரம் வாடி ம்மா யேய்.. முட்டி நோவு தாள முடியல "
" நான் வேண்ணா பொழுதோட வாறன். இப்ப நீ மொடங்கு. "
" யே.. நோவு ..முடியலடிப் பாப்பா.."
" ஒன்னோட ஒரே ரோதனையாப் போச்சி தாத்தா "

                          கால் பிடித்து விடுகிறாள். உலகின் மொத்த ஆனந்தங்களையும் ஒருங்கே அனுபவிக்கிறார். கோட்டையில் சீட்டு கொடுத்தாலும் " போங்கடா போக்கத்தவைங்களா " என்று சொல்லி விடுவார் பொல. இமை மூடி...
" ஆத்தி.. அங்கத்தான். ஆங்.. என் கொல தெய்வமே..அப்படித்தாண்டி...   யேன்..அங்காளப்பரமேஸ்வரி.."
" க்கும்.. இதுக்கொண்ணும் கொறசல் இல்ல. "
" என்னாடி எம்மா அலுத்துக்கறவ.."
" ஏ.. உடப்பா.. அவளுக்கு அவ ஊட்டுக்காரன் பாடு.." பீடி பிடித்தவாறு அருகில் இருந்த பெரியவர்.
" ஒனக்குக் கூட புரியுது. எங்க தாத்தனுக்கு புரியல பாத்தியாயா.." அவள்.
" என்னான்றான் அவன் ? " கண்மூடியபடி தாத்தா கேட்க..
" ஆங்.. சொரக்காக்கு  உப்பில்லன்றான்.. ஒன்னும் தெரியாத மாறியே கேளு தாத்தா நீயி..!"
" என்னாதான் மாஸ்டர் சொல்லுது அந்த பொண்ணு ? "
" அதான் விமல். சொரக்காக்கு  உப்பில்லன்னு .." அடங்கினான் ஆர்வளன்.
" அவவ.. கோழிக் கூப்பட எழுந்ததுல இருந்து ஓயாம ஒலச்சிகினு.. இவனுக்கு ஆக்கி கொட்டிகினு க்கனும். இவன் ஊரு மேஞ்சிட்டு வருவான். நானு ஒரு வார்த்தக் கூட கேக்கக் கூடாது. மீறி கேட்டா அடிக்கறது , ஒதைக்கறது , எங்க அப்பன் அம்மால வம்புக்கு இழுக்கறது. அவனுக் கெல்லாம் நல்ல சாவே வராது தாத்தா. "

 ங்கொர்...ங்கொர்........,
தாத்தா அயர்ந்து தூங்குகிறார்.

" அவன வுடுயா கண்ணு . நீப்  பாட்டுக்கு ஒன் வேலையப் பாரு . எல்லாம் தன்னால கூடி வரும் " பீடி தாத்தா.
" எங்..ங்க  தாத்தா .. ந்தா காத்தால இந்து ஒரு நிமிஷம் அப்படி அக்கடான்னு ஒக்கார முடியுதாப் பாரு. எனக்கெல்லாம் அலுப்பு சலுப்பே இல்லையா ? எவகிட்டக் கிறானோ. யென்.. 'சாண்ட' எதுக்கு இப்புடி ஊத்திக்கரானோ..தெர்ல.."
  " வுடு கண்ணு.வுடு.அழுவாத. நீ எதுக்கு அழுவற...த்ங்கமாட்டும் பொண்ண இப்புடி நோகடிக்கரதுக்கு அவன் தான் அழுவனும் . நீ வுடு.."

அங்கிருந்து விழகினோம்.

ஆய் போகும் அழகி

TVS - ஐ மேட்டிலிருந்து தள்ளியபடி ஊர்ந்து வந்தான் விமல். மதியம் மணி இரண்டு .ஒரு குடிசை டீக்கடை தெரிய....

" விமல். ரவுண்டு கட்டிரலாம் வா.."
" OK. MASTER."
" இவன் ஒருத்தன். வாடா ,SUICIDE பண்ணிக்கலாம் னாலும் வந்துடுவான் போலருக்கு."
 சிரிக்கிறான். யூகித்திருப்பானோ ..?

உள்ளே நுழைந்தோம்.

       மரம் இழைக்கையில் சிதறி விழும் மரத்திவழைகளைக் கொண்டு அடுப்பெரிய வைத்து 'போண்டா' சுட்டுக் கொண்டிருந்தார் ஒரு வாலிபர். ஒரு மர பெஞ்ச்சில் நாலு பெருசுகள் உலகத்தை கூறு போட்டு அலசிக் கொண்டிருக்க...

 " சூடா போண்டா குடுங்க." விமல்.
  " தம்பி...!.நாங்கெல்லாம் எதுக்கு ஒக்காந்துகினு க்கறோம் ? பொறுப்பா. வேகுதில்ல. நீப் பாட்டுக்கு நேரா வந்து  ஜபர்தஷ்த்து மாறி நின்னுகினு 'போண்டா' கேக்குற. "
பெருசு கலாய்க்கிறார்.
 ( FULL MEALS  திருப்ப்தியாக சாப்பிட்டேன் நான்.)
" நான் என்ன உங்களையா கேட்டேன் . அவரத்தான கேட்டன் "
" ஒரு ஐஞ்சி நிமிஷம் சார். எல்லாருக்குமே தரேன். " கடைக்காரர் .
நான் சிரிக்க மர்மனும் சிரித்தான்.
" அம்பது பக்கோடா குடுங்க " நான்.
" போதுங்களா மாஸ்டர் ? "
" போதும். "
 கடைக்காரர், பக்கோடாவை கையால் அளந்து ஒரு பேப்பரில் இட்டு பெஞ்ச் மீது வைக்கிறார்.விமல் எடுக்க வர.. நான் தூக்கிக் கொண்டேன்.
" போதும்னு சொன்னது எனக்கு. "

காதில் பொறி பறக்கக் காத்திருந்தவன் 'போண்டாவை' பானாலில் போட்டதும் தாவிச் சென்று 'போண்டாவைப்' பற்றி பிய்த்து ஆவி பறக்க வாயில் போட்டு கண் கலங்க என்னை ஓரக் கண்ணால் பார்த்தான்.  
( கடலை மாவில் கொத்தமல்லி, பச்சை மிளகா எல்லாம் போட்டு செய்த போண்டா கிராமங்களில் மட்டுமே கிடைக்கிறது.)

" ஆ..ஆ.. என்னா சூடு.. என்னா டேஸ்ட்டு..! பக்கோடாப்  பழசு  பொல..அங்க..மூஞ்சில ஒரு Reaction -ஐயும் காணோம். "
" பக்குவப் பட்டவனுக்கு பழசு புதுசுன்னுல்லாம் எதுவும் இல்ல. எல்லாமே ஓன்னுத்தான்."  சமாளித்தேன்.

 உள்ளிருந்து சொம்பில் குடிநீர் கொண்டு வந்துக் கொடுத்தாள் ஒரு பெண்.
" அங்க யேன் நெருக்கிகினு ஒக்காந்துகினுக் க்கறீங்க ? இப்படி வந்து ஒக்காருங்க " எனக்கு ஒரு இரும்புச் சேர் போட்டாள் .

" பல்லில்லாதவனுக்குத்தான் பக்கோடாக் கெடைக்குது..! " விமல்
" ஏ.. நீ யாரச் சொன்ன ..? "
" ஆண்டவனைச் சொன்னேன். " சுட்டு விரலை மேலே காட்டுகிறான்.

" ஏ.. நாலு போண்டாக் குடுப்பா நட்ராசு."  முன்பு மர்மனைக் கலாய்த்த பெருசு.
" யோவ்.. போயா. மொதல்ல பாக்கி காச வை. பொறவு கேளு  . ஒனக்குத் தனியாவே செஞ்சித் தரேன். இப்ப எடத்த காலிப் பன்னு " கறாராகக் கூறி விட்டார் கடைக்காரர்.
விமல் பெருசை எகத்தாளமாகப்  பார்க்க.. அவனைக் கண்டுகொள்ளாதவராக..

" ஏய்.. இன்னிக்கி மட்டும் குட்ராப் பையா. நாளைக்கே ஒன் பாக்கி காச குடுத்துர்றேன்."
மறுத்துவிட்டார் கடைக்காரர்.

அலட்டிக்கொல்லாதவராக ..
" போடா எம் மசுரு. ஓங் கடைய வுட்டா எனக்கு வேற கட இல்லையா என்ன ?ஊர்ல உன்து மட்டுந்தான் க்கீதா ? " வெரப்பாக நடந்து சென்றார். கடைக்காரர் சலனமில்லாமல் டீ ஆத்திக் கொண்டிருந்தார்.
எனக்கு, ஏனோ.. தொண்டைக்குள் பக்கோடா இறங்கவில்லை .

    சில்வர் தம்ளரில்  டீ வந்தது.கண்ணாடி கிளாசில் குடிப்பதைப் போல வருமா ? காட்டிக் கொள்ளாமல் குடித்தோம்.வெளியூர் ஆட்கள், நகர வாசிகள் வந்தால் கிராமத்து மக்கள் இப்படித்தான் கெளரவிப்பார்கள். ( அதே.. ஒரு கிராமத்தான் CITY - க்கு வந்தால்...??! )

 குன்னத்தூருக்கு குட்பை சொல்லி கிளம்பினோம்.

" காரப்பட்டா.. சமல்பட்டியா.. எப்படி போலாம் மாஸ்டர் ? "
" ரெண்டு ஊருக்கும் ஒரே Distance தான். காரப்பட்டுக்கு ஒரு எட்டு கிலோமீட்டர். அங்கிருந்து ஊத்தங்கரைக்கு Thirteen Kilometers. நீ இப்படியே போ விமல்.."

காரப்பட்டை நோக்கி பயணித்தோம் .இந்தப் பயணத்தை முழுமையாக்கியச் சாலை.

" என்ன விமல்.. Dry Villages - அத் தேடி வந்து இப்படி ஒண்ணுமேப் பாக்காமப் போறமே.."
" சரி. விடுங்க மாஸ்டர். இது ஒரு நல்ல TRAVEL - ஆ இருந்துச்சில்ல..? "
" அப்ப்டி...........யா..?! "

Accelerator - ஐ முறுக்குகிறான் மர்மன். TVS பறக்கிறது.

பரவலாக இப்பயணத்தில் நாங்கள் சந்தித்த ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் எங்களை,                                                            ஆட்படுத்தியவர்களே.வெகுளித்தனம்..அறியாமை..இயலாமை..சோம்பேறித்தனம்.. பாசம்.. வன்மம்..கனிவு..கருணை.. என கிராமத்தின் அனைத்து வாசமும் சுவாசித்துச் சென்றோம். எல்லாப் பயணத்தின் கடைசித் தருணங்கள் தரும் மென்சோகத்தை இப்பயணத்திலும் சுமந்தவாறேச் சென்றோம்.


என்னன்னு சொல்ல..
       ஒரு கட்டத்தில் சாலை இரு வழிகளாகப் பிறிய..யாரையாவது கேட்கலாமென்று காத்திருந்தோம். தூரத்தில் ஒரு சைக்கிள் மட்டும் நின்று கொண்டிருக்க ..
" நீ அப்படியே ..யாராவது வராங்களான்னு பாத்து வழி கேளு. நான் பிஸ் அடிச்சிட்டு வந்துர்றேன்."
நான் சாலையில் இருந்து சற்றே கீழே இறங்கி பிஸ் அடிக்க,................................??!!

 " ஏ..விமல்.சோளக் காட்டுக்குள்ள எவனோ MATTER பண்ணிட்டிருக்கான். "

கத்தியபடி ஓட..தூரத்தில் ஒரு புளிய மரத்தடியில் TVS - ல் அமர்ந்தவாறு யாரிடமோ பேசிக் கொண்டிருந்தான் விமல் . அவனை நெருங்குகையில்.. சாலையோர புதர்ச் செடிகள் அசைந்தாடியவாறு இருக்க அதனூடாக ஒரு வயாதிகக் கை மட்டும் தெரிந்தது . அருகில் சென்றேன். எண்பது வயது மதிக்கத்தக்க  பெரியவர் கைத்தடியைப் பிடித்தவாறு ஒரு பெரிய பாறாங்கல்லின் மீது அமர்ந்திருந்தார். நான் அவரிடம் பேச முற்ப்பட..

" காது சரியாக் கேக்காது. நீயி.. "
எழுதிக் காட்டச் சொல்றாருங் மாஸ்டர். "
" யே.. அதேல்லாம் ஒன்னும் வேணாம். நீ வா  போலாம். "
நான் அவர் காதருகில் சென்று..
" காரப்பட்டுக்கு இந்தப் பக்கம் போலா....மா......மா...? " கத்துகிறேன்.
மெதுவாக என் பக்கம் திரும்பியவர்..
" காதத்தான் புடுங்கிப் புட்டானே..! ( வானம் காட்டுகிறார்.) அப்பறம் யேன்.. காதுல வந்து ஊதற..? "
" ஊதுறனா..?! "
" எழுதிக் காட்டு ராசா.."
" யே.. அப்படியே ரெண்டு Stills எடுத்துக்க விமல். போலாம் . "

அவரை Stills எடுத்தப் பிறகு.. இருவரும் சென்று வண்டியை Start செய்ய..
" சாப்புட்டீங்களா.......? "
" ஆங்..சாப்புட்.... "   பதிலை எதிர்பார்க்காதவறாக...
" சாப்புட்டுப் போலாம் வாங்கயா.. யெம் பேரமாருங்களா.."
விமல் தன் கணங்களால் நெகிழ்வைக் காட்ட.. வண்டியை நிறுத்தி அவரிடம் சென்று,

" நாங்க சாப்புட்டோம் தாத்தா. ரொம்ப நன்றி. "
" எழுதிக் காட்டுங்க மாஸ்டர். "
பாக்கெட் நோட்டில் எழுத்திக் காட்ட..ஒவ்வொரு எழுத்தாக கூட்டிப் படிக்கிறார்.

" ந...ன்...றி..., நன்றி. நன்றி. " கை கூப்புகிறார்.
விமலைப் பார்த்து.. " வயசென்ன..? "
அவன் விரல்களால் காட்ட.. " ரெண்டு.. நாலு... இருவத்தி நாலா ?
" ஆங்.."
" கல்யாணமாச்சா ? "
தோள்களை குலுக்குகிறான்.
" ஆவலையா..?." என்னிடம் திரும்பி.. " ஒனக்கு..என்ன வயசாகுது..? "
" மூணு.. ரெண்டு.. முப்பத்தி ரெண்டு. ஒனக்கு கல்யாணமாச்சா.. ? "
நானும் தோள்களை குலுக்கி விமலைப் போலவே செய்ய..
" உன்னும் ஆவலையா ? என்னையா பண்ணுவ ? "
" ரொம்ப கஷ்டமாத்தான் இருக்குது தாத்தா . என்ன பண்றது..? "
வாய் விட்டுச் சிரித்தான்  மர்மன்.
(ஒனக்கென்னடா யேன் சோகத்துல மட்டும் அப்படி ஒரு சிரிப்பு..?)
" இது வன்முறை விமல்..?. " 
தாத்தா நோட்டு கேட்கிறார். மெல்ல எழுதுகிறார்.

( பேனாவை வாங்கும் போதும் சரி. எழுதும் போதும் சரி. நிதானமாகவும் நுட்பமாகவும் செயல் படுகிறார். வயோதிகத் தளர்ச்சியால் அல்ல. காது கேட்க்காதவர்களுக்கே உள்ள நுட்பம் என்றும் சொல்ல முடியவில்லை. கணங்களை முழுமையாக ஆளும் அவதாணிப்பு. கவனித்து கற்ற கல்வி போலும் அவருடைய வாழ்க்கை..! )

  அவர் மெல்ல எழுத..
" ஒன்னும் புரியல விமல். "
" தொன்னூத்தி நாலு. தொன்னூத்தி நாலா..?! என்ன தாத்தா சொல்றீங்க..? "
காற்றில் விரல்களை வீசுகிறார். இருவரையும் தட்டி..
" ஒன்னும் வேலைக்காவாது. ஒங்களால முடியாது."
" நிச்சயமாத் தாத்தா . முடியவே முடியாது . " தீர்க்கமாக சொன்னான் மர்மன்.
அவனை நான் உற்றுப் பார்க்க..

" முடியாதுங் மாஸ்டர்..! "
" ஆமாமா..முடியாது தான். " பயந்தவனாக  நானும் வழிமொழிந்தேன்  .
கலகலவென சிரித்தவர் , " செரி வாங்க சாப்புடலாம். "
" சத்தியமா சாப்புட்டோம் தாத்தா. "
" செரி எழநியாவது குடிக்கறீங்களா ? "
" விமல் இவரு TORTURE தாங்க முடியலையே.."
" வேணாம் தாத்தா. கெளம்பறோம். " விமல்.
இருவரின் சட்டையையும் தூக்கி வயிற்றை  தடவிப் பார்க்கிறார். எனக்கு DOUBT.

(சென்னை  அனுபவங்கள். ) ( நமது எண்ண ஓட்டத்தினை தீர்மானிப்பது நம் சுற்றமும் சூழலும் தான். )

" த்தானா சாப்புட்ட வவுறு.வயசு பசங்க நல்லா கிண்ணுனு க்கறதில்ல..? "
( விமல் கண்களில் பொறி..!.)
 " பூவுடன் சேர்ந்த நாரும்..........! "
" சரி..சரி.. ADJUST பண்ணிக்க.."
" வாங்க யப்பா.. டீ யாவது குடிக்கலாம். " கிழவர் திரும்ப நச்சரிக்க..
" விட்றா  கெழவா.. TORTURE  பண்ணாத ."
அவர் தோள்களைப் பற்றி குலுக்கி கத்துகிறேன்.

( COMEDY என்ற பெயரில் இந்த கேவளத்தை நான் அடிக்கடி செய்வதுண்டு.)

" ஏங். ங் . மாஸ்டர்.. "  விமல் ஒரு கண்ணியவான்.பெரும்பாலும் பக்குவமாக நடந்து கொள்வான்.

" எங்கிருந்து வர்றீங்க..? "
நான் மெட்ராஸ் என்றும் அவன் ஊத்தங்கரை என்றும் எழுத..
" த்தா.. இங்க ஐஞ்சி மயுலு. எப்படி ரெண்டு பேரும் சேந்தீங்க..? "
நான் சாலையைக் காட்டி ஏதோ சொல்ல வருபவன் பொல தலையாட்ட.. விமல் என்னை உற்றுப் பார்க்கிறான்.
( சத்தியமாக நான் எதுவும் சொல்ல வரவில்லை.)

"அப்புடியே சுத்தும் பொது கூடிக்கினீங்களா..? " தலையாட்ட..
" என்ன வேல செய்யறீங்க..? "
நான் முழிக்க... திரும்பச் சிரிக்கிறான் கிறாதகன்.
" வேல இல்லியா..? சோத்துக்கு என்ன செய்வீங்க.. ? "
" அத எங்கப்பன் போட்றான். "

( விமலை சிரிக்க வைக்கவே..அவ்வப்பொழுது எனக்குப் பிடிக்காத
Comedy - களையும் செய்வேன் . அப்படியாவது பல்லைக் காட்டுறானே..! )
" வேல இல்ல.. கண்ணாலம் ஆகல.. என்னடா நீ.. எப்படி அப்பறம்..? "
எனக்கு வெறி ஏறுகிறது.
" சரி தாத்தா. நாங்க போறோம். "
ஏனோ எங்களை விடவே இல்லை கிழவர். பேச்சுத் துணைக்கு யாரும் இல்லையோ..இல்லை. இவர் பேசி இவரே கேட்க முடியாத  மௌன உலகில் வாழ்வதால் யாரும் இவரை கண்டு கொள்வதில்லையோ தெரியவில்லை. எங்களை போக விட மனம் வரவே இல்லை அவருக்கு. எனக்கு கனிவும் கடுப்பும் கலந்தே வந்தது.

அவரைப் பிடித்து உளுக்கி , " வரட்டுமா.." என்றேன்.

" 63 வருசமாவுது........"

நாங்கள் விழிக்க..
" சோந்தரம் வாங்கி .. கலியுகம் இது."
ஒரு கையில் ஊன்றுகோல் பிடித்து.. மறு கையை வெறுமனே காற்றில் அசைத்து உதடு பிதுக்குகிறார்.
" காந்தி, ஜவகர்லால் நேரு, சுபாஸ் சந்திர போசு... அப்பறம் ஆங்.. மறந்துடுச்சே..
எம் ஜி ஆரத்  தெரிமா..? "
" அது யாரு..? " பிட்டைப் போட்டேன்.
கட்டையை பிடித்தவாறு குலுங்கி ஆடியவாறு  ..
" இந்த ஆட்டக்காரன். ஜெயலலிதாவோட ஆடீனு கெடப்பானே.. "
விமல் செமையாக சிரிக்க..
" அப்பத்தான் இந்த பர்மால.. என்னா நாடது.. தெர்லயே கருமாந்தரம்.. அங்க போயிட்டு வந்தேன் . ரெண்டு வருஷம்... வெள்ளக் கார தொறைங்க போட்டது இந்த ரோடெல்லாம் . மவராசங்க.. அத்தோட செரி. பொறவு ஒருத்தனையும் காணல. "

நாங்கள் தலை சொரிய..

" மவராசங்க.. ரொட்டி குடுப்பாங்க.. அத்த, இந்த மிலிடிரி காரங்களுக்குக் குடுத்தா தூக்கி போட்டுருவானுங்க..நான் எடுத்து தின்னுவேன். எல்லாருமேவா கெட்டவங்க..? "

வரிக்கு வரி தொடர்பின்றி பேசினாலும் தீர்க்கமாகவே  பேசினார்.
சற்றே மூச்சி வாங்கியவர்......,
எங்களைப் பார்த்து,
" யேன் பேரன் மாருங்கயா நீங்க.."
என்று கன்னம் வருடினார். முரட்டுக் கை. அக்காலக் கட்டை.
" என்னடா ஜாதி..?! "
  நான் அவரிடம் இதை எதிர்பார்க்கவில்லை.
" சொல்லு என்னா ஜாதி..? "
கடுப்பாகிறேன். என் முகம் மாறுவதை விமலும் கவனிக்கிறான். அவரைப் பற்றிய மதிப்பு குறைந்து..நான் என் கண்கள், மூக்கு , வாய், கை கால்களைக் காட்டி  " அவ்வ்ளோத்தான். " என்றேன்.
அவர் விழிக்க..
" புறியாதா விமல் இந்தாளுக்கு.." திரும்பிக் கொண்டேன்.

" மோளம் அடிக்கறவங்களா ..ரெட்டியாரா.. கவுன்டமாருங்களா.. ? "
அவர் அடுக்கிக் கொண்டேப் போனார்.
நான் நோட்டில் எழுதிக் காட்ட ..
" மெதுவா எழுதுய்யா.. ஆங்.. அப்படி .. கொட்ட கோட்டயா எழுதறே டா. என்னால முடியலையே.."
{ ஜாதி இல்ல .வெறும் மனுஷன். நான். }
நான் கோவத்தில் கிறுக்க என் கை எழுத்தை மாற்றினார்
( நிதானம் இவ்வளவு அழகோ.?)

" சரி காசு குடு. "

 இவரிடம் இனிமேல் என்ன பேசுவது. எரிச்சலின் உச்சத்தில் நான்
" எல்லாம் பேசிட்டு கடைசீல பாரு விமல். சரி. ஏதாவது சில்லற இந்தா குடுத்துட்டு வா விமல்." நானும் அவனும் சில்லறைகளைத்  தேடிக் கொடுக்க..
" 2 ரூபா .. 1 ரூபா.. 3 ரூபாய்க்கி டீ வருமா..? "

" விமல். ஆமா விமல் . உன்னம் ஒரு ரெண்டு ரூபா இருக்குதாப்  பாரு .."
.
கொடுத்த பிறகு, ஐந்து ரூபாய் என உறுதி செய்து, இருவரையும் மாறி மாறிப் பார்க்கிறார்.
அத்தருணம் அவருடைய கண்களை புரிந்து கொள்ள முடியவில்லை.

" யேன் ராசா ..வாங்கையா யென்  பேரமாருங்களா...! "

 கைத்தடியை தள்ளி விட்டு தன்னுடைய இரண்டு கைகளாலும் எங்களை அள்ளி அணைக்க..அவர் கைகளில் இருந்த சில்லறைக் காசுகள் தெறித்து மண்ணில் விழுகிறது.

நிலை குலைந்து போனோம். அவரை கைத்தாங்களாக தூக்கிப் பிடிக்க..

" காசாயா குடுக்கறீங்க.. ஒங்க தாத்தனுக்கு? யேன் சாமிங்களா. எனக்கு எதுக்குய்யா காசு. நீங்க தான்யா...எனக்குக் காசு. "

இருவரின் கண்களும் கசிந்தோட நாத்தழுதழுக்க பேச முடியாமல் தத்தளித்தோம்.enna சொல்லியும் விவறிக்கவியலா கணங்கள் அது. கோவம், வெறுப்பு, ஏளனம், எள்ளல் என அணைத்து உணர்வுகளும் அடி பிளந்து கணத்தில் சரிந்தது. கூனிக் குறுகிப் போனேன் நான் .

 " வாங்க எப்பா செத்த காப்பி தண்ணி குடிச்சிட்டுப் போலாம். வாங்கையா. "

அவர் கை பற்றி கால் தடங்களை பின் தொடர்ந்தேன்.

அவருடைய கைத்தடி, சிதறிக் கிடந்த சில்லறைகளை எடுத்துக் கொண்டு விமல் பின்னால் வருகிறான்.

இனம் புரியாத இறுக்கம். செயலற்றவனாக நடந்துச் செல்கிறேன். கன்னம் வழிய.. எண்ணமற்ற கணங்களில் வெறித்துப் பார்க்கிறேன். சுற்றிலும் தென்னை, வைக்கோள்,  மாடுகள், களனித் தண்ணீர். அவற்றின் வாசம் என்னுள் அதிர்வை ஏற்ப்படுத்துகிறது.

அவற்றைக் கடந்து சென்றால் ஒரு மெத்தை வீடு. அதனருகில் ஒரு குடிசை.
மெத்தை வீட்டு திண்ணையைத் தட்டி,

" யெம்மா.. யேய்.. எங்கடிமா போய்ட்ட ? கொல்லைக்கேது போய்ட்டாளா ..வந்துருவா இருங்க.. எனுக்கு காசாயா குடுக்கறீங்க..மவராசங்களா.."

அறுவது  வயது கொண்ட பாட்டி வீட்டினுள் இருந்து கரண்டியோடு  வருகிறார்.

எங்களைப் பார்த்து,
" யாரு..? "
" வணக்கம் பாட்டி.. நாங்க இப்படியே காரப்பட்டுக்கு போனோம். தாத்தாவ வழி கேட்டோம். "
" அவரு கூட்டிகினு வந்துட்டாரா..? " சிரித்தார் பாட்டி.
 " நீங்க பாட்டி ..? "
" அவ எம்மருமோவ.." விமல் விழித்தான்.
" பாப்பா. யேன் பேரங்கயா.. காப்பித்தண்ணி போட்டு கொண்ணா.. போ.. "
அப்பாட்டி என்ன சொல்வாரோ என எண்ணி நானே முந்திக்கொண்டு ,
"அதெல்லாம் ஒன்னும்.. வேணாம் பாட்டி.நாங்க கெளம்பறோம். "
" இல்ல கண்ணு. சாப்புட்டுப் போலாம் ."
" ஐயோ. பரவால்லப் பாட்டி. "
"  தண்ணியாவது குடிச்சிட்டுப் போங்க.."

குடித்து முடிக்க..
" இம்முட்டு நேரம் சாப்புடாம இருந்தா என்னாத்துக்கு ஆவறது."

அருகிலுள்ள குடிசையினுள் நுழைகிறார் பெரியவர்.

" பாட்டி அவரு..? "
" அவரு யெம் மாமனாரு..அவருக்குக் கொஞ்சம்..."
 என தலையை  காட்டுகிறார் பாட்டி.விமலும் நானும் ஒருவரை ஒருவர் பார்த்துக் கொள்கிறோம். தாத்தா குடிசைக்குள் சென்று ஒரு பழைய தகரப் பெட்டியை உருட்ட..
நான் குனிந்துப் பார்க்கிறேன். சாக்குப் பைக்கு அடியில் இரு பத்து ரூபாய் நோட்டுக்களை எடுத்து வருகிறார்.

கயித்துக் கட்டிலில் படுத்திருந்த பாட்டி ஒருவர் ,
" யாரு..? " என படுத்தபடி கேட்க...
" நம்ம பேரங்கம்மா. எனுக்கு காசு குடுக்கறாங்க.. எஞ் சாமிங்க.."
பாட்டி எழுந்தமர்கிறார். நாங்கள் கை கூப்பி.. " பாட்டி.."  என தலை தாழ்த்த..அவர் விழிக்கிறார்.

" இந்தாயா இத்த எடுத்துகினு போய் சாப்புடுங்க.." பத்து ரூபாய் நோட்டை நீட்ட..

என் முப்பத்தி இரண்டு வருட கால வாழ்க்கையில் நான் கட்டமைத்திருந்த அத்தனை  உள்ளப் படிமங்களும் உடைந்து சிதறி ஏதுமற்ற இருப்பாய் அப்பெரியவரின் முன்னாள் நின்றுருந்தேன். 

 நாத் தழுதழுக்க...

" வேணாம் தாத்தா ."
" நீங்க வைங்க தாத்தா. தேவப்படும். " விமல் விம்முகிறான்.
" எனுக்கு எதுக்குய்யா காசு. நம்ம எல்லாருக்கும் ஆண்டவன் இருக்கான்யா.. "
என் கைக்குள் பணத்தைத் திணிக்க நான் குடிசைக்குள் சென்று,
" பாட்டி. இத..வைங்கப் பாட்டி. "

" ம்ம். தாத்தன், ஆசையாக் குடுத்தது . வேணான்னு சொல்லக் கூடாது. "

" இல்லப் பாட்டி. எங்கிட்ட இருக்குது. இதப் புடிங்க." கைக்குள் திணிக்க..

" ம்ம். தாத்தன் குடுத்தத எங்கிட்ட குடுக்கறது தப்பு.ஒனக்கு வேணான்னா
தாத்தங்கிட்டயே குடு ."அதிர்ந்தேன்.

அவர் விமலிடம் வற்புருத்திக்  கொண்டிருந்தார் .
" சரி பாட்டி நான் வறேன். " குடிசைக்குள் இருந்து வெழியே வர..

" நான் ஒங்கிட்டக் குடுத்தத நீ எதுக்குயா அவளாண்ட குடுக்கற..? "
 ( பிறகு, விமல் என்னிடம் கூறினான். நான் பாட்டியிடம் பணம் கொடுத்ததை பெரியவர் திரும்பியேப்  பார்க்கவில்லை என்று.. )

 அதற்கு மேல் அந்த இடத்தில் எங்களால் இருக்க முடியவில்லை.
" அப்ப நாங்க வரோம் தாத்தா."
" பாட்டி.." என இருவரும் கைக் கூப்ப..
பெரியவர், எங்களையே பார்த்துக் கொண்டிருந்தார் அனுப்ப மனம் வராதவராக .
" வாங்கிக்கொன்னா  கேக்க மாற்றீங்கலேயா..செரி. பத்தரமாப் பாத்து போயிட்டு வாங்க. ரோட்ல பத்தரம்."
" சரிங் தாத்தா.."
 
சடேரெனத்  திரும்பி அக்குடிசையை  விட்டு விழகி சாலைக்கு வந்த பொது நடக்கத் திரானியாயற்று  பெரியவர் அமர்ந்திருந்த கல்லின் மேல் அமர்ந்து மரத்தில் சாய்ந்தேன்.

விமல் சாலையில் கை ஊன்றி சரிந்தான்.இருவரும் வெகுநேரம் பேச்சற்று செயலற்றுக் கிடந்தோம்.........................   
 உணர்வுகள் கட்டுக்குள் வர..இருவரும் எழுந்து ஒருவரை ஒருவர் வெறித்துப் பார்க்க..
" மாஸ்டர்.."
" செத்துட்டேன்  விமல்.."
 " இவரயாங்.. மாஸ்டர் அந்தப் பாட்டி பயித்தியம்னாங்க..?"
"................................"
"அவர் ஏங்..மாஸ்டர் நம்ம கிட்ட காசுக் கேட்டாரு..? "
" ................................."
 {உன்னதங்களையும் , அற்புதங்களையும்  கடவுள்,  இப்படித்தான்  எழிமையாக சாலையோர மரத்தடியில் தூவியபடி இருக்கிறானோ.}

    விமல்,TVS - ஐ START செய்ய , இருவரும் மௌனமாகப் பயணித்தோம்.தெள்ளிய வானம்.. வயல்வெளி.. வழி எங்கிளுமுள்ள மரங்கள், செடி கொடிகள் , ஆடு..மாடு, பறவைகள் எதிர்ப்படும் வாகனங்கள் என அனைத்திலும் அப்பெரியவரே நிறைந்திருந்தார்.

                                                     பெரியவர்




                                                                      
                                            { இதுவும்  கடந்து போகும்...}


                                            { DOLLAR பயணம் - முற்றிற்று }

                                                                 ****

3 comments:

  1. நெகிழ்வாய் முடிந்திருக்கிறது...

    ReplyDelete
  2. payanangal mudivadhillai..

    ReplyDelete