இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Thursday, 9 September 2010

காட்சிப் பிழையோ.. தோற்ற மயக்கமோ..

வட்ட நிலா.
வழிந்தோடும் நீர்வீழ்ச்சி..
கைகோர்த்து  குதூகளிக்கும்  காதலர்கள்,
ஊஞ்சலில்  விளையாடிடும் குழந்தைகள்,
மென்னலை  கொண்ட நீரோடை..
தியானிக்கும் வயோதிகம்,  
கண் சிமிட்டும் மழலை,
பிரகாசிக்கும் பனிமூட்டத்தினூடே   
வெள்ளொளி பாய்ச்சும் நிலவு,
மெல்லிசை  ஊரும் அந்தி..
துள்ளி குதிக்கும் டால்பின்கள்,
பூத்துக் குலுங்கும் பூஞ்சோலை..

கி ரீ ச் சி டு ம்   இரும்புக் கதவு  
சட்டெனப்  படரும் இருள்..

Sir. Closing Time.
Raahat Plaaza Showcase - ஐ பார்த்தபடி 
திடுக்கிட்டுத் திரும்பும் நான்.

1 comment: