கால நிலைகள் மாறிப்போய்
கண்ட நேரத்தில் பெய்கிறது
மழை.
பரபரப்புடன் வெழியே செல்ல..
ஆரவாரத்துடன் சிறுவர்கள்.
பற்றிக் கொண்டது மனது.
ஆமாண்ணா..!
தென்னங் குச்சியை வளைத்து செய்த
தூக்கில், தூக்கிட..
நழுவி ஓடிடும் ஓணான் .
வேலிக்குள் கை நுழைத்து
வாலைக் கவ்விடும் சிறுவன்,
நுனிவால் பிடித்து சுற்ற..
சுற்றி நிற்கும் அத்துனைப் பேரும்,
ஏ..ஏ.. எனக்குடா..!
தலைகீழாய் சிறுவர்கள் தொங்க,
ஊஞ்சலாடிடும் ஓணானை ,
தேங்கிக் கிடக்கும் குட்டையினுள்
தூக்கி எறிய..
அலைகள் அடங்கும் வரை
அமைதி காத்து
குக்கி உக்காந்து குரூரமாய்ப் பார்க்கும்
குள்ளநரிகள்.
ப்ளக்.. ப்ளக்..
நீர்க்குமிழிகள் வெடிக்க..
ஏ.. உன்னியும் சாவ்லடா..!
பெருங்கல் ஒன்றை
குட்டையினுள் எக்கி எறிகிறான் ஒருவன்.
தெறித்த சேற்றுநீர் சிறுவர்களை நனைக்க..
தாவிச் செல்கிறேன் பின்னால்.
வெள்ளைச் சட்டை ; வேறென்ன செய்ய ?
ஓணான் மேல் ஒன்னுக்கடிக்கும் ஒருவன்,
குச்சி வைத்து வாலைத் துண்டிக்கும் ஒருவன்,
எகிறிச் சென்று எறுக்கம்பால் கொண்டு
கச்சிதமாக கண்ணுக்குள் கசக்கி..
தார்த் தகரத்தில் தாளம் போட...
...தாண்டவமாடிடும் ஓணான் .
துடிதுடிக்கும் அஃறினை.
துள்ளி குதிக்கும் உயர்தினை.
வேட்கை நிறைவேறி
வேறு விளையாட்டு கூடி ஆடிட..
" யேன் சாவடிக்கறிங்க..? தப்பில்லையா..?
அதும் ஒரு உயிரில்ல..? வலிக்குமில்ல..? "
" போ..யா..யா... குறமா..! "
பால்யத்தில் ..
பாழடைந்த கட்டிடத்தில்..
பால் குடிக்கும் பூனையின் தலையை
கல்லால் நசுக்கிக் கொன்று
தெறித்த ரத்தம் பார்த்து
சிரித்த ஒலி சிந்தையை உழுக்க..
அறிவுரைக்க நினைத்து அமைதியானேன்.
வேடிக்கையாய் விபரீதங்களை நிகழ்த்தும்
குழந்தைப் பருவ குரூர வேட்கைகளின்
வேர் அறிய முயன்று
வானை வெறித்துப் பார்க்கையில்..
இடித்தவான் முழுதும் முகிழ் சூழ..
இருள்சூழ் வெளியில்
அதிர்ந்தடங்கி வேகமாக நடக்கிறேன் .
*****
அதிர்ந்தடங்கி வேகமாக நடக்கிறேன் .
*****
EXCELLENT ONE...
ReplyDeleteVERY NICE PASUPATHI...
ReplyDelete