இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 24 September 2010

அடைக்கலம்
















ஞ்சு தோல் போர்த்திய
பிஞ்சு நாய்க்குட்டி.
அடைக்கலம் தேடி
அங்கு மிங்கும் அலைய

மேகம் சூழ்ந்து இடி முழங்க
துடிதுடித்து
மரத்தடி மண் புதைய
செய்வதறியாது தவிக்கிறது.

சாலையோரம் நின்றிருந்த லாரி.
பாத்திரம் கொண்டு சமைக்கும் Cleaner.
Mobile - ல் பேசிக்கொண்டிருக்கும் Driver.

ஓடோடிச் சென்று
முன்சக்கரம் வருட..

இதமான கதகதப்பு.
படுத்து உருண்டு
ஓடி ஆடி விளையாடி
ஆடி அடங்கி
சக்கரத்தின் தோல் போர்த்தி
கதகதப்பில் கண்ணயர

" கெளம்பிட்டேன் சார்.."
லாரியை
Start செய்யும் Driver..!

            ***

1 comment: