இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Saturday, 9 October 2010

துளி - க் - கடல்



கசிந்துருகும் சுனை நீராய் - மழலை


அணிதிரண்டு உருண்டோடிடும்  - பிள்ளைப் பருவம்


அடிபுரண்டு அருவியாய் நீண்டு
பேரிசை முழக்கத்தோடு 
திருவிழா காணும் - இளமை

தறிகெட்டுத் திரிந்து
தத்தளித்து..
தன் பாதை கண்ட பின்
பண்  பாடிடும் பக்குவ - மத்திமை

மெல்லிசை பாடி வழிந்தோடி
பாறையிடத்து வளைந்தோடிடும் - முதுமை

மௌனப் பயணியாய் கடல் சேர்ந்து..

பேரிருப்பில் வீடற்று..பேரற்று..பெரு(ம்)ங் - கடல்நீராய்  வீடுபேறு. 

****

1 comment: