இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 17 October 2010

ஏக்கப் பேரெதிரொலி

வீட்ட மாத்துங்கமா
பொண்ணுக்கு வரன் தானா கூடி வரும்..
வாஸ்த்து சரியில்ல சார்..
உன்னும் ஒரு வீடில்லையா
என்ன சார் வாழ்ந்தீங்க..?
வழியே இல்லாமல்
வாழ்ந்த வீட்டை விட்டு
வேறு வீடு செல்ல வேண்டி வந்தது.

மொத்தப் பொருட்களையும்
லாரியில் ஏற்றி
கடைசியாக ஒருமுறை
தரையில் அமர்ந்தேன்.
அவ்விடத்தில் அக்கோனத்தில் அப்பார்வை புதிது.



நீண்டப் பெருமூச்சிழுத்து
வாழ்ந்த நாட்களின் வனப்புகளுக்குள் திளைக்க
வண்டி கெளம்புதுடா
அப்பாவின் குரல் என்னை எதார்த்தத்திற்கு
இழுத்து வந்தது.
ஆங்..வற்றேன்..என்றேன்.
வற்றேன்..வற்றேன்.. என்றது  வீடு..!















சட்டென எழுந்து
வேகமாக வெளியேறி
திரும்பிப் பார்க்காமல் பயணித்தேன்..


                         ****

1 comment: