அங்கிங்கெனாதபடி எங்கெங்கிளுமுள்ள திரைப்படங்களைத் தேடித் தேடிப் பார்த்து தேவைகளை சேகரித்து, ஆவணங்களைக் கொண்டு நெய்த ஆடையினை உடுத்திப் பார்க்கிறேன் பரவசத்தில். அழகாய் தான் இருக்கிறது அணிந்த ஆடை. ஆனால் மனம் தான் அம்மணத்தை நாடியே பயணிக்கிறது. என் அம்மணத்தின் அடியாழத்தில் புதைந்து கிடக்கும் போக்கீஷங்களை, பிறவி சூட்சுமத்தை கடைந்தெடுக்க முனைகிறேன். நான் கண்ட படங்களின் மூலம், 'என் மூலம்' அறிய முற்பட்டு முனைப்போடு இயங்க இருண்டதோர் பொந்திடை தடைபட்டு விழுகிறேன். பிரபஞ்ச சிருஷ்டியின் சூட்ச்சுமம் புதைந்து கிடக்கும் மனிதனின் எல்லாக் கேள்விகளுக்குமான விடையை பிணைந்து வெய்த்திருக்கும் அவ்விருலினை தகற்த்தெறிந்து மையம் தொட்டு ஐயம் விளக்க விளையும் அனைத்து ஜீவராசிகளின் வழியே யானும் கை கோர்க்கிறேன்.
திரைப்பட விழா :
உலகை சுற்றும் வாகனமாக நான் பயன்படுத்துவது. இம்முறை சற்றே தெளிவுடனும். கற்ற கல்வியாலும், உற்ற உறவுகளாலும், பெற்ற பக்குவப் பார்வையின் வாயிலாக உலகை சுற்ற.. அணி வகுத்து நிற்கிறது மானுட வாழ்வின் ரகசியம் களைய முனையும் கலைப்படைப்புகள். பல நாடுகள், பல மனிதர்கள், பல வாழ்முறைகள்
என பார்த்த, வெகுவாக பாராட்டப்பட்ட அனைத்துப் கலைஞர்களின் ஒரே நோக்கம் - 'இருளினுள் புதிந்துள்ள ஒளியினை அறியும் வேட்கை'.
பூட்டிய பூட்டினுள் புதைந்து கிடக்கும் சாவியின் சூட்சுமம் சுமந்து நிற்கும் பேரிருப்பாய் படர்ந்து விரிந்து எங்கெங்கிலும் வியாபித்திருக்கிறது இப்பிரபஞ்ச வெளி.
CRAB TRAP :
கனடாவின் சலனமற்ற இளைஞன் ஒருவனைக் கண்டேன். கணத்தை முழுமையாக வாழ்கிறான். மானுடம் விதித்த கட்டுப்பாடுகளை எல்லாம் களைந்து காமப் பசிக்கிரையாய் கண்ட அவளை புசித்து காமத்தீயினில் கனன்று, தன்னை இழந்து, தன்னை மீட்டெடுத்து தனியனாய் படகினில் தவழ்ந்து செல்லும் இளைஞன். [தாமரை இலைமேல் நீர் போல..] பக்கத் துணையாய் சிறுமி நின்று கையசைத்து வழியனுப்ப விடை பெறுகிறான். அச்சிருமிக்கும் அவனுக்குமான அற்புதமான 'உறவு' மானுடம் இயங்குவதற்கான அடித்தளம்.
THE DREAMERS :
செய்து வைத்த வேலிகளைக் கடந்து அண்ணனும் தங்கையும்,
அவர்களுடன் சேர்ந்து கொள்ளும் அமெரிக்க இளைஞனும் வாழும் முப்பது நாட்கலும்,
அது ஊதும் அபாயச் சங்கும், கடைசியில் வீடு திரும்பும் பெற்றோரின் 'மெளனம்' நம் அகக் கேள்விகளாக விரிகிறது.
காமத்தின் பால் எழும் புதிர்களை காட்டிவிட்டு லாவகமாக விடை பெறுகிறார் இயக்குனர்
'BERNALDO BERTOLUCCI' .
SILENT SOULS :
காமங்கடந்து மரணம் கடந்து காதலிக்கும் 'அற்புதமாய்' பெண்ணை சித்தரிக்கிறார்
இயக்குனர். ருஷ்ய நாவலை மையமாகக் கொண்டு உருவாக்கப்பட்ட படம். வடமேற்கு ருஷ்யாவின் பாரம்பரியம் தொலைந்ததோர் நகரத்தின் வழி செல்லும் கணவனும், தன் மனைவியை காதலித்தவனும், அம்மண் இழந்த பொக்கீஷங்களின் முக்கியத்துவம் உணர்த்துகிறார்கள்.
THE BLUE BUTTERFLY :
எதையும் வெல்லும் வலிமை, மனிதன் கண்ட அதிநுட்ப உண்மை, என அனைத்தையும் தகர்த்தெரியும் வலிமை இயற்கையிடமே உள்ளது. 'சரணாகதி' - தத்துவத்தை வெளிப்படுத்தியப் படங்கள்..
1. THE BLUE BUTTERFLY,
2. THEMBA - A BOY CALLED HOPE ,
'தன்நம்பிக்கையே கடவுள்' என்பதை உணர்த்துகிறார்கள் இவ்விரு படங்களின் சிறுவர்களும் .
கடவுள் - கட- உள்.., உள்- கட.. உள்ளே கிடந்து தன்னை அறிந்து பின் தன்னை கடந்து செல்லும் எங்கும் பிரகாசமாய் இருக்கும் பேரிருப்பின் ஓர் அங்கமாய் சங்கமிக்கும் வழியினை உணர்த்தின..
1. THE LAST SUMMER OF LA BOUTILA,
2. THEMBA - A BOY CALLED HOPE ,
3 .THE BLUE BUTTERFLY,
4. VELMA,
5. SILENT SOULS, - போன்ற படங்கள்.
THE TREE :
கீதை சொல்லும் 'பற்றறுத்தல்' வழியுருத்திய படம் - THE TREE .
கணவனை இழந்த மனைவியும், தந்தையை இழந்த சிறுமியும் (ஒரே குடும்பம்) அவனின் நினைவாக அவர்களடைய வீட்டில் வளர்ந்த ஒரு மரத்தை பாவிக்க, பிள்ளைகளுக்காக தனக்கேற்பட்ட புது உறவை விட்டு விட்டு ஒரு பெரும் புயலில் அழிந்த வீட்டையும் அம்மரத்தையும் விட்டு வேறு இடம் செல்கிறார்கள் அம்மாவும், பிள்ளைகளும். தியாகத்தின் அழகை காட்டிய படம்.
மெளனம் :
...'ஆதியில் ஒரு சொல் இருந்தது. பின் அது பிரபஞ்சமாக மாறியது'... - வேதம் கூறும் கூற்று இது. பரவலாக இத்திரைப்பட விழாவில் நான் பார்த்த படங்களில் வரும் 'மெளனம்' எனக்குனர்த்தியதும் இதுவே. மெளனம் வெளிப்படுத்தாத எவ்வுனர்வையும் எந்த ஒரு சொல்லும் வெளிப்படுத்திவிடாது. அதனால் தானோ என்னவோ, வேதங்கள் அனைத்தும் சப்தத்தை மையமாகவே கொண்டுள்ளது. [ 'சமஸ்கிருதம்'- தாய் என்றால், 'தமிழ்'- தந்தை அல்லவா..? ] வார்த்தைகளின் வீரியத்தை உணர்த்தியது ஈரானிய இயக்குனர், ABBAS KIAROSTAMI - யின் 'CERTIFIED COPY'. வேறு எந்த ஒரு மொழிக்கும் இல்லாததோர் தனிச் சிறப்பு தமிழ் மொழிக்கு உள்ளதாகவே படுகிறது. என்னளவில், தமிழ் மொழியின் 'உச்சரிப்பு'ஏற்படுத்தும்
அனுபவம் மற்றமொழிகளில் கிடைப்பது இல்லை.ஒரு மொழியின் தன்மைக்கேற்பவே
அந்நிலத்தின் பண்பாடு , நாகரிகம், வாழ்க்கை முறை அமையும் என்பதையே ஒவ்வொரு நாட்டுப் படங்களைப் பார்க்கும் பொழுதும் அறிகிறேன்.
'பாரதி' கூறியதை உணர முடிகிறது.
தமிழன் என்பதால் அல்ல, வேறு எந்த நாட்டில் பிறந்திருந்தாலும் இதையே கூறுவேன்.
BROUGHT BY THE SEA :
' அன்பின் வழியது உயிர்நிலை ' - என மீண்டும் மீண்டும் நிரூபிக்கும் கலைஞர்களுடன் துருக்கி நாட்டின் இயக்குனர், 'NESLI COLGECEN' - ம் இணைந்துகொள்கிறார்.
அழகிருக்குமிடத்து கனநேரமேனும் கருணை கெட்டால் துவண்டு போகிறது இதயம். அழகில் குடிகொள்ளும் 'அருள்' பாடும் ராகமாய் அவளின் (நாயகி) படைப்பு . இக்கட்டான சூழ்நிலையிலும் அவளிடம், அவள் உடல் நிலையை விசாரிக்கும் அவனுடைய (நாயகன்) கரிசனம் - காதலின் வித்து. அஃறிணை(பந்து) , இணைத்த இதயங்கள்.
HOW I ENDED THIS SUMMER :
விரும்பி ஏற்கும் தனிமை அவனை கடவுள் ஆக்குகிறது.
கோவம், வெறுப்பு, வன்மம் = அருள்.
இருவேறு முரண்களின் சங்கமத்தில் பிணைந்திருக்கிறது 'எல்லாம்'. ஆதியும், அனுபவமும், முட்டி மோத.. களத்தில் ஆடும் ஆட்ட நாயகர்கள் இருவரின் ஆட்டத்தில் பார்வையாளனின் 'அகம்' தரிசிக்க வைத்த ருஷ்ய படம்.
THE WHITE RIBBON :
என் குரு, பிரான்சு இயக்குனர், 'MICHAEL HANEKE' - ன் மேதமையை காட்டிய திரைப்படம். வாழ்க்கையை, ஒரு பற்றற்றப் பார்வையாளனாகப் பார்க்கும் கலைஞர்களுள் முக்கியமானவர் இவர். 'புதிர்' - இவருடைய மைய பலம். எவ்வொரு கலைப்படைப்பும் அதன் ரசிகனிடமே முழுமையடைகிறது..அவ்வகையில் பார்வையாளனுடன் தானும் சேர்ந்து கொண்டு தன் படைப்பு எழுப்பும் புதிரின் விடை தேடி அலையும் கலைஞன்.
முதலாம் உலகப்போருக்கு சற்றே முன்பு ஜெர்மனியிலுள்ள ஒரு கிராமத்தில் பல புதிரான சம்பவங்கள் நிகழ்கிறது. அச்சம்பவங்களைக் காட்டி, அதன் விளைவுகளையும் காட்டியதோடு விடைபெறுகிறார் இயக்குனர். விடை தேடும் பார்வையாளனுள் எழும் பல கேள்விகளோடு பயணிக்கையில் அவனைப் பற்றிய பல உண்மைகள் அவனுக்குத் தெரிய வரும். அவ்வகையில் என்னுள் எழுந்த கேள்விகளை பற்றியபடி தொடர்கிறேன்...
BEAUTIFUL :
THOUGH, COMPLICATED ' LIFE IS BEAUTIFUL..!' - என் வாழ்வில் நான் கடைபிடிக்கும் தாரக மந்திரம். அதனை மீண்டும் நிரூபிக்கும் கலைஞர்களோடு கை கோர்க்கிறார் ஸ்பெய்ன்' நாட்டின் இயக்குனர், ALEXANDRO GONZALEZ INARITTU -வும்.
மரணம் கடந்த வாழ்வின் 'அற்புதத்தை', 'அழகை' காண்கிறோம் நாயகனின் வாழ்வினுள்.
CLOSING CEREMONY :
தமிழ் திரையிசைப் பாடல்களின் நினைவலைகள் அரங்கத்தில் 'ஒலி'யாய்த் தவள..
நான் கண்கள் மூடி அகத்துள் பயணிக்க.. அலையலையாய் அனந்தகோடி
ஆத்மாக்களின் சங்கமத்தில் ஒருமித்ததோர் 'பரிபூரணம்' என்னுள் குடிகொண்டது. இவ்வாறே, ஒரு கூடாரத்தினுள் - உலகை சுற்றி உள்ளுள் உறைந்தேன்.
- 'சுற்றலின் சுற்றாமை நன்று' -
****

No comments:
Post a Comment