அது ஒரு கணாக்காலம் 👫
"I MAY BE A VULGAR MAN. BUT, MY ART IS NOT..!"
- மொஸார்டின் அந்த புகழ் பெற்ற வாக்கியத்தை தன் வயோதிகத்தில் அடிக்கடி சொல்லியவண்ணம் இருப்பார் பாலு சார்.
படைப்பையும் படைப்பாளியையும் பிரித்தறிவதே சரி அல்லது இரண்டும் வெவ்வேறாக இயங்க இயலாது என்னும் விவாதத்தை சற்றே ஒதுக்கி வைத்து விட்டு 'பாலு மகேந்திரா ' என்னும் மனிதருடன் எனக்குண்டான பரிட்சயம் தந்த அனுபவத்தினை அசை போடுகையில் அவரிடமிருந்து நான் கற்றவை பெற்றவை பல.
இறப்பதற்கு முந்தய தினம் அவரை பார்க்கச் சென்றிருந்தேன்.சமீப காலமாக திறந்தே வைக்கப்பட்டிருக்கும் அறையினுள் நுழைந்ததும் உடைந்த குரலில் பேசினார் மனிதர்.
" Pasu.. am not well da.. am feeling sick.."
இத்தனூண்டு உடம்புக்குள்ள இருபத்தேழு மருந்த ஏத்தறாங்கடா ..?!"
அவர் கூறும் முன்னரே அவரெதிரில் அமர்ந்தேன். அவ்வுரிமையை அவர் கொடுக்கவில்லை. நானும் எடுக்கவில்லை. அது நிகழ்ந்தது.
சினிமா தான் என் தொழில் என முடிவெடுத்தப் பின் நான் சினிமா பழக தேர்ந்தெடுத்த பள்ளிக்கூடம் "பாலு மகேந்திரா ". அவரை நான் முதன் முதலாய் பார்த்தது மார்ச் 2004 - ல் இளையராஜாவினுடைய 'திருவாசகம்' இசை வெளியீட்டின்போது மியூசிக் அகாதெமியில். தொப்பி, coolers, ஜீன்ஸ் சதம் ஒலிபெருக்கியில் தன் கம்பீரக் குரலில் பேசிக்கொண்டிருந்தார்.
அதன் பிறகு Chennai Film Chamber - ல் 'சுவாஷ்' என்ற மராத்திப் படம் அவருடன் பார்த்தேன். அவருடைய உதவியாளர் ரவி மூலம் அவருக்கே தெரியாது அவர் அப்பொழுது எடுத்துக் கொண்டிருந்த 'அது ஒரு கனாக்காலம்' படப்பிடிப்பில் பாடம் பயில ஆரம்பித்தேன்.
நான்கு வருடங்கள் இலக்கியம் உலக சினிமா என எனைத் தயார் செய்த பிறகு ஒரு நாள்( 11.11.2005) அவரை சந்திக்கச் சென்றிருந்தேன். செந்தில்(தனுஷ் நடித்த 'கொடி' பட இயக்குனர்) மட்டுமே அலுவலகத்தில் இருந்தார்.
" சாரப் பாக்கணும்.."
" என்ன விஷயமா..?"
" கனாக்காலம் படத்தப் பத்திப் பேசணும்.."
வரவேற்ப்பறையில் அமர்த்தப் பட்டேன். சிறிது நேரத்தில் அறைக்குள்ளிருந்து வந்தவர்,
" யாரப்பா நீ.. ஒன் பேரென்ன ? "
'கனாக்காலம்' படத்தைப் பற்றி ஒவ்வொரு காட்சி ரீதியாக கதை ,கதாப்பாத்திரங்கள், ஒலி மற்றும் ஒளி பயன்படுத்தப் பட்ட விதம் குறித்து பேச ஆரம்பித்தேன். சமையலறையில் 'Vegetable Soup' செய்துக் கொண்டிருந்த செந்திலை அருகில் வந்தமரச் சொன்னார்.( தன் உதவி இயக்குனர்கள் பலருக்கும் தான் விரும்பும் சமையல் கலையை கற்றுத் தருவார்.) பேச்சு முடிவில் எழுந்தவாறு,
" இந்த மாதிரி Detail - ஆ Criticize பண்ணாத்தானே Creators- க்கு Energetic- ஆ இருக்கும். Whether it's good or bad express your view points honestly. எங்க.. நேர்மையா ஒரு படைப்ப விமர்சிக்கிறப் பழக்கமோ பக்குவமோ இப்ப யாருக்குமே இல்லப்பா..It's too bad.. Anyway what you have talked so far is very encouraging.." என்றவாறு அறைக்குள் சென்றவர் சற்றே திரும்பி,
" ஒன் பேரென்னப்பா சொன்ன..?" - முதல் நம்பிக்கைக் குறி.
நான்கு வருடப் பயிற்சிக்குப் பின், ஒரு மாத தவ வாழ்க்கையின் பயனாக அந்த ஒலியை என்னுள் பரவவிட்டு நகர்வலம் திரிந்தேன்.
கோவா சர்வதேச திரைப்பட விழாவிற்குச் சென்று அவ்வனுபவங்களை ஒரு நீண்ட பயணக் கட்டுரையாக அவரிடம் சமர்ப்பித்தேன். சில பக்கங்களை புரட்டியவர்,
" Why don't you become a Literary Writer..?" என்றார்.
" I wanna become Film maker Sir."
" What's the difference between two. Both are Arts."
" No sir. It's different. எழுத்து மூலமா ஒரு உலகத்த சொல்றத விட காட்சி மூலமா அத காட்டும் போது என்னால இன்னும் தீர்க்கமா பகிர முடியும்."
இரு கைகளையும் குவித்து கன்னம் ஊன்றியவர் நீண்ட மௌனத்திற்குப் பிறகு..
" Ok.. see you later.." என்றார்.
" Sir. I wanna become your Asst. director.." என்றேன்.
கொஞ்சமும் அலட்டிக்கொள்ளாதவராக,
" இல்லப்பா.. இப்ப vacancy இல்ல. நீ நெறைய படி.. படம் பாரு.. பாக்கலாம்.."
" இல்ல சார். அதத்தான் இத்தன வருஷமா செய்துட்டிருந்தென். I need practical knowledge hereafter."
" அதான் சொன்னனேப்பா ..இப்ப முடியாது.." வெடுக்கென சொல்லிவிட்டு உள்ளே சென்றார்.
நிலைகுலைந்து போன நான் செய்வதறியாது பைக்கில் நகரைச் சுற்றித் திரிந்து மெரினா பீச் சென்று 'அசோகமித்திரன்' படித்துக்கொண்டிருந்தேன். அலுவலகத்தில் இருந்து செந்தில் அழைத்தார். விரைந்தேன். கையில் ஒரு புத்தகத்தோடு அமர்ந்திருந்தார் பாலு சார். தாவிச் சென்று அவர் காலடியில் அமர்ந்தேன்.
" இந்த புத்தகம்..."
" கல்மரம் சார்."
" இது..."
" இந்த வருஷம் சாகித்ய அகாடெமி விருது வாங்கி இருக்குங் சார்."
" இது..."
" கட்டடத் தொழிலாளர்களப் பத்தினது சார்."
ஏறெடுத்துப் பார்த்தவர்..
" இந்தக் கதைய Screenplay Pattern - ல எழுதி கொண்டு வா. Will You..?"
" Sure Sir."
" எத்தன நாள் எடுத்துப்ப.."
" Four days sir.."
மூன்று நாட்களில் சென்றேன். அவரின் குளிரூட்டப்பட்ட அறைக்குள் சிஷ்யர்கள் ரவி, செந்தில், அமர்நாத், கிருஷ்ணகுமார் மூர்த்தி
சார் முன்னிலையில் 'கல்மரம்' கதை சொன்னேன்.எவ்வித வெளிப்பாடுமின்றி,
" Ok.. ஒரு டீ சாப்பிடலாம்பா.."
அனைவரும் களைய, என்னை அருகில் அமர்த்தி டேபிள் drawer - ல் இருந்து ஒரு பேப்பர் எடுத்து,
" இது தான் கதை நேரத்துக்காக எடுத்த ஒரு Short Film -ஓட One Line."
தேநீர்( Black-Tea ) அருந்தியவாரு,
" ஒரு ஊர்ல ஒரு பாட்டி வட சுட்டுட்டு இருந்துச்சாம்... இந்த வாக்கியத்த பிரி. ஒரு ஊருண்ணா அது எப்படிப்பட்ட ஊர் ? நகரமா.. கிராமமா..? சாலையோரமா..கடற்புறமா..? ஒரு பாட்டியிண்ணா அந்த பாட்டி எப்படி இருப்பா ? சேலை கட்டிட்டா..ஜாக்கெட் பொட்டிருப்பாளா..மாட்டாளா..?அவள் தமிழா, வடக்கத்தியா..?இந்த ஒவ்வொரு கேள்விக்கான விடையும் ஒரு 'SHOT' .
" சரி நாளைக்குப் பாக்கலாம்."
நான் வெளியேறும் பொழுது,
" I Liked Your Narration..!"
சிறகடித்துப் பறந்தேன். அதற்குப் பிறகு அவர் என்னை எத்தருணம் தன் உதவியாளனாக சேர்த்துக் கொண்டார். நான் எப்பொழுது அங்கீகரிக்கப்பட்ட சிஷ்யனானேன் என்பது இருவருக்குமே தெரியாது. 👫
(End of part - 1)
***
No comments:
Post a Comment