👄 சதிலீலாவதி 👄
பாலுமகேந்திரா என்னும் மனிதரின் வாழ்க்கை காமிராவாலும் பெண்களாலும் ஆனது. அவர் படங்கள் பேசும் 'Morality' ஐ தன் வாழ்வில் கடைபிடிக்கவில்லை அந்த கலைஞன்.
'தனி மனித ஒழுக்கம் என்பது சாமான்யனுக்கு மட்டுமே. கலைஞன் அதற்கெல்லாம் அப்பாற்பட்டவன்' என்ற வாதம் அவரையும் ஆட்கொண்டது.
'மனிதனின் முழு முற்றான நோக்கம் மனிதனாவதே '. கலைகள் யாவும் மானுடத்தின் மேன்மைக்கே. 'Man is a social animal' - இக்கூற்றை எப்படியும் கையாளலாம்.
"Nature is Amazing டா. What a lovely arrangement it is..! இந்த' Pleasure ' - ங்கற சமாச்சாரம் மட்டும் இல்லேண்ணா 'Reproduction' - எங்கறதே இல்லாமப் போயிடும் இல்ல.."
அவரின் இந்த சிந்தனை அடுத்தகட்ட பாய்ச்சலுக்கு சென்றிருக்குமானால் பாலுமகேந்திராவின் படைப்புகள் உலக ஞாம்பவான்களின் பட்டியலில் இடம் பெற்றிருக்கும். அந்த ஆதங்கம் எங்கள் அனைவருக்குமே உண்டு.
இயக்குனர் பாலா வெற்றிமாறன் முதலிய அவரின் பெரும்பான்மையான சிஷ்யர்களுக்கு அவர் கதைகளில் உடன்பாடு இருந்ததில்லை. மாறாக அவரின் திரைமொழி ஆளுமையாலும் செய் நேர்த்தியாலும் கட்டுண்டவர்கள் தான் அனைவரும். ஒரு கடிதம் 'DTP' செய்துமுடிக்க ஒருவாரமாகும் எங்களுக்கு. 'comma' முதல்கொண்டு அனைத்தும் கச்சிதமாக இருக்க வேண்டும் அவருக்கு.
இயக்குனர் பாரதிராஜா என்னிடம் கூறினார்,
"என் படமும் ஒங்காளு படமும் எப்படி இருக்கும்னா..நான் ஒரு கத்திய தண்ணிக்குள்ள விட்டா அது 'கலக் பொலக்'குனு உள்ள போகும். அதே கத்திய பாலு விட்டா அப்டியே நேரா போய் 'சதக்' னு இறங்கும்'.
அந்த ஒழுங்கு தன் தனிப்பட்ட வாழ்க்கையில் கைகூடாமல் போனது துரதிருஷ்ட்டமே.
எவ்வளவு தளர்ந்திருந்தாளும் அவரை சிலிர்ப்படைய வைக்க ஒரு காமிரா போதும். அடிட்கடி சொல்வார்,
''without a camera am nothing.''
Not only camera..
"If a woman sleeps alone it puts a shame on all men. God has a very big heart, but there is one sin he will not forgive. If a woman calls a man to her bed and he will not go." - ZORBA.
என் மொபைலில் ரிங் டோனாக ' ZORBA THE GREEK' இசை வைத்துள்ளேன். ECR - ல் உள்ள 'தக்ஸனசித்ரா' சென்று திரும்பும்போது,
"நல்லாருக்கே,என்ன மியூசிக் ? " என்று கேட்டார்.சொன்னதும் துள்ளியபடி..
"OH..! ANTONY QUINN..! What a performer.. What a character.. ZORBA.!!"
பாலு மகேந்திராவும் ANTONY QUINN- ம் ஒரே சாயல்.
"சார். என் பேர 'ZORBA' - ன்னே வெச்சுக்கலாம்னு இருக்கேன். அடுத்த நாள் என்னை அழைத்து,
" Zorba , Come to school. We ll go for Lunch.." என்றார்.
" Sir..! Am happy. But.. தமிழனுக்கு ஏன் கிரேக்கப் பேரும்பாங்க. அதான்.."
" அவங்க கெடக்கறாங்க.. 'ANTONY' -க்கும் 'அந்தோணிக்கும்' என்ன சம்பந்தம்.." என்றார்.
பாலுமகேந்திராவும் ஒரு 'ஜோர்பா' தான்.
"A man needs a little madness, or else.. He never dares cut the rope and be free.."
- ZORBA
இந்த சுதந்திரத்தை எக்கண்ணோட்டத்தில் பார்க்கிறோம் என்பதில் பொதிந்துள்ளது வாழ்க்கை.
அவருடன் சண்டை போட்டு ஒரு வருடம் பார்க்காமல் பேசாமல் இருந்தேன். 'நான் கடவுள்' இசை வெளியீட்டு விழாவில் சந்தித்த போது வெண்முரசு பூத்த முகத்தோடு இருந்தார். விழா முடிய பழைய கோவங்களும் மறைய கூட்டத்தினுள் நடந்தவாறே ,
" ஹலோ சார்.." என்றேன்.
மெதுவாகத் திரும்பியவர்,
" டேய்.. எங்கடா பொயிட்ட இத்தன நாளா..? Phone நம்பரையும் மாத்திட்டயா..? எத்தனப் பேரப்பா விசாரிக்கறது நானு."
( இதில் பாதி நிஜம். மீதி, ஹி..ஹி..!)
" என்ன சார் இது கோலம்.."
வெண் முரசுக்கு மத்தியில் கருப்பு அவலட்சணமாய் மீசை.
" Why.. நல்லா இல்லையா.."
" முதுமைக்கு அழகு நரை சார்."
அடுத்து அவரை சந்திக்கும் போது முழுமையாக இருந்தார்.
**
பாலு மகேந்திராவின் அடையாளமாக தொப்பி கூலர்ஸ் ஸ்கார்ப் கன்னத்தில் கை.. இப்படி ஒவ்வொன்றும் அவர் ஆளுமையை பறைசாற்றும் கூறுகளாக விளங்கின.
இறந்த பின்பும் அந்த அடையாளங்களுடனேயே மறைந்தார். விஜயா மருத்துவமனையில் இருந்து உடலை சினிமா பட்டறைக்கு எடுத்து செல்ல அனைவரும் ஆயத்தமாக.. இயக்குனர் பாலா அவரின் தொப்பியை எடுத்து வரச்சொன்னார். இயக்குனர் செந்திலும் நானும் எடுத்து வந்து அணிவித்த பின்பே பொதுமக்கள் பார்வைக்கு காட்டப்பட்டார்.
சிறு வயதில் அவர் வாழ்ந்த மட்டக்களப்பில் இயக்குனர் 'David Lean' 'The bridge on the river kwai' படப்பிடிப்புக்காக வந்துள்ளார். அதை வேடிக்கை பார்க்கச் சென்ற பெஞ்சமின் மகேந்திரன் அந்த இயக்குனரின் ஆளுமையை கண்டு சிலிர்த்திருக்கிறார்.
'அவர் Rain என்னதும் மலை வந்ததுடா.. Back ground என்னதும் ஆட்கள் இயங்க ஆரம்பிச்சாங்க.. Action ன்னு சொன்னதும் நடிக்கறாங்க Cut சொன்னதும் எல்லாம் நின்னு போச்சி. அந்த ஆளும என்ன பிரமிக்க வெச்சது. That was the first spark. அப்ப முடிவு பண்ணேன். நாமளும் ஒரு நாள் இதே மாதிரி Action ன்னு சொன்னதும் எல்லாம் இயங்கனும்னு..'
பாலுமகேந்திரா என்ற கலைஞனின் ஆளுமை இவ்வாறே தொடங்கியிருக்கிறது.
(End of Part - 4)
****
No comments:
Post a Comment