எங்கள் ஊர் தியேட்டரில் நீண்ட நாட்களுக்குப் பிறகு 'கில்மா' படம் பார்க்க சென்றிருந்தோம். பதினைந்து வருடங்களுக்கு முன்பெல்லாம் பிட்டுக்காக ஏங்கி தியேட்டர்களுக்கு ரகசியமாய் சென்று பார்ப்போம். அந்த காலம் காலாவதி ஆகி விரல் நுனியில் எல்லாம் கிடைக்க இப்போதெல்லாம் அம்மனத்தை பார்த்தாலும் அதிர்வடைதில்லை . கூகுலை தொட்டாலே குலுங்கி குலுங்கி குதிக்கிறாள்கள். அலுத்துப்போனது அத்தனையும்.
பழைய ஞாபகங்கள் கிளர்ந்தெழ கும்மிருட்டில் குடிகொண்டோம். Welcome என்றார்கள். வணக்கம் வணக்கம் மேல போ..என்றார்கள் குடிமகன்கள். Dont put your legs over the chair. கால்கள் மேலெழும்பின. Do not spit என்றதும் மச்சி அந்த பான் பராக் எடு. நண்பரும் நானும் வேறு இடத்திற்கு தாவினோம். Do not smoke ஓரத்திலிருந்து புகை மண்டலம் சூழ.. மற்றொரு இடத்திற்கு மாறலானோம். ஒரு வழியாக எல்லாம் முடிந்ததென ஆசுவாசப்பட Qube logo வர, ஏய்.. அஷ்வினு, ராஜகோவாலு.. கலாய்த்தார்கள். அதுவும் முடிய இனி தரிசனம் தான் என பரவசமாக.. திடுமென அந்த கட்டளை.
'Please stand to honour our national anthem.' ( please என்ற சொல்லை கட்டளைக்கு பயன்படுத்தலாமென அன்று தான் உணர்ந்தோம்.)
'என்னாங்க இது சோதன..' நண்பர் ஆவேசப்பட்டார். 'ஏங்க. அப்படியே ஒக்காருங்க..இந்த படத்துக்கு கூடவா எழனும். எழுந்ததெல்லாம் போச்சி '.
குபுக்கென சிரித்து விட்டேன். அதற்குள் அதிரடியாய் அனைத்து குடிமகன்களும் வெறப்பாய் எழுந்து நிற்க.. சற்றே பயத்துடனேயே அமர்ந்திருந்தோம்.
தேசிய கீதம் பாட ஆரம்பிக்க அத்தனை பேரும் ராணுவ ஒழுக்கத்தோடு நின்றபடி உதடசைத்து பாடினார்கள். மூட்டை தூக்கும் கிழத் தொழிலாளி ஒருவர் அயர்ச்சியாய் வந்தமர வழுக்கட்டாயமாக நிற்க வைக்கப்பட்டார்.
'..இமாச்சல யமுனா கங்கா..'
"உஸ்ஸப்பா..எப்படா இவங்க தமிழ்நாட்டுக்கு வருவாங்க " அவர் முன்சீட்டில் கையூண்றி நிற்க ஒரு வழியாய் 'ஜெயகே' அமர்ந்தார் அவர். மற்றவரெல்லாம் அவர்கள் இயல்பிற்கு திரும்ப நண்பர் தலை மேல் பொளேரென தட்டினார் பின் சீட்டிலிருந்த அங்கிள்.
" தேசிய கீதம் பாடிட்டிருக்கு. எழுந்தும் நிக்காம பேசிட்டு வேற இருக்கற.."
"ஹலோ.. அது என் இஷ்டம். நீங்க யாரு கேக்க.."
" ஒன் இஷ்டமா..பாத்தீங்களா சார். இந்த மாதிரி ஆளுங்களால தான் நம்ம நாடே நாரிக்கெடக்குது "
"வுடுங்க சார் அவனுங்கள எல்லாம் திருத்த முடியாது. படம் போட்டுட்டான். ஒக்காருங்க " மற்றொருவர் அறிவுரைக்க ஆற்றாமையுடன் அமர்ந்தார் அங்கிள்.
படம் துவங்கியதும் விசில் பறந்தது. லேட்டாக வந்த குடிமகன்கள் smart phone torch ஐ முகத்தில் அடித்த படியே வந்தமர்ந்து நண்பரிடம்,
"சார் போட்டு எவ்ளோ நேரமாகுது.."
கடுப்பான நண்பர்
"இன்னும் போடலைங்க"
திரும்பிக் கொண்டார் அவர்.
சற்று நேரம் சென்றதும் பாதத்தின் மேல் ஈரம் பட குனிந்து பார்த்தால் முன் சீட்டிலிருந்தவர் எச்சில் துப்பிக் கொண்டிருக்கிறார் . கடுப்பாகி,
"ஏங்க எதாவது sense இருக்குதா.. இப்படி துப்பறீங்க "
கண்டுகொள்ளாது படத்தில் தீவிரமாக இருந்தார்.
" ஏங்க ஒங்களத்தான்.."
அனாயசமாக திரும்பியவர், " வெறும் எச்ச தான் துப்பனேன்"
" என்ன பேசறீங்க. அப்ப வெறும் எச்சய துப்பலாமா.."
கடுப்பான அவர் நண்பர்," அதான் சொல்றாரில்ல..படத்த பாருங்க தம்பி. தியேட்டர்னா அப்டி இப்டி தான் இருக்கும்"
" என்னங்க சொல்றீங்க. எச்ச துப்பறவர கேக்காம எங்கள அமைதியா இருக்க சொலறீங்க " என் நண்பர் ஆவேசப்பட,
"யோவ். உன்னால முடியலனா எழுந்து போயா.. எதோ துப்பிட்டாங்களாம். பெரிய லார்டு இவரு"
" ஏய்..மரியாதயா பேசு. எச்ச துப்..."
" அடிங்..ம்மால..என்னாட மரியாத. வாடா வெளியில பாத்தர்லாம் "
"வாடா..வா.."
(தேசிய கீதத்திற்கு நிற்காததால் தலையில் தட்டிய அங்கிள் எவ்வித சலனமுமில்லாது திரையை வெறித்தபடி இருந்தார்.)
ஆபிஸ் ரூம் சென்று மேனேஜரிடம் முறையிட்டால் அவர்,
"சார்.. அதான் தியேட்டரே காலியா இருக்குதே.. உங்களுக்கு புடிக்காட்டி வேற சீட்ல போய் ஒக்காரலாம்ல. படிச்ச நீங்களே இப்டி பிரச்சன பண்ணலாமா "
"எது நாங்க பிரச்சன பண்றோமா. என்ன சார் நீங்க. கால் மேல எச்ச துப்பறாரு இவரு. அவர கேக்காம.."
துப்பியவர் மேனேஜரிடம் சிரித்தவாறு,
" அண்ணே..இவன் இத்தயே தான் சொல்லிகினு கெடக்கறான்"
"நீ போய் ஒக்காரு ண்ணா.."
மேனேஜர் அவர்களை அனுப்பிவிட்டு,
"இவங்களால தான் சார் தியேட்டரே ரன் ஆவுது. இதையெல்லாம் கண்டுக்காதீங்க. 'A' row free ஆ இருக்குது. போய் ஒக்காருங்க.. "
புரிபடாத நிலையில் ஆற்றாமையுடனேயே போய் அமர்ந்தோம். அதே புகை அதே எச்சில் அதே கூச்சல். இருப்பு கொள்ள முடியாது இருவரும் பார்த்துக்கொள்ள
" போலாங்களா.."
" வாங்க.."
தேசிய கீதத்திற்கு வெறப்பாய் எழுந்து நின்று பாடி 'இந்தியா' என்று சொல்லப்படும் நாட்டு முன்னேற்றத்தைப் பற்றி ஆதங்கப்பட்ட குடிமகன்கள் கலகலப்புடன் கில்மா படம் பார்க்க சமன் குலைப்பதாய் குற்றம் சாட்டப்பட்ட நாங்கள் அரங்கை விட்டு வெளியேறினோம்.
வாழ்க ஜனநாயகம்.
வாழ்க ஜன கன மன..
***
No comments:
Post a Comment