இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Tuesday, 2 November 2010

சரணாகதி

கலைகளில் கரையும் எல்லாத் தருணங்களிலும்
கிட்டுவதில்லை கலையின் உச்சம் ;
என்னுள் நான்கெட நானறியே னத்தருணம்
விளைகிறது கலையின் உச்சம்.

முன்னது நிகழ்த்து கலை.
பின்னது நிகழ்கலை.

                     ****

சுழி

Milky way Galaxy

           உண்டாகி கருவாகி உறுவாகி தருவாகி
                            திருவாகி குருவாகி மருவாகி பருவாகி
                            பல் விழுந்து பாடை சேர்ந்து
                            மண்ணூர்ந்து  புல்வளர்ந்து - மாவிருந்து
                            மடிசுரந்து காம்பூர்ந்து
                            ஊர்ந்து ஊர்ந்து
                            தொடர்ந்திருந்து
                            இருந்து இருந்து
                            இருத்தலில் 
                            இருத்தலாய்
                            விளைகிறதே..

                                    ****

                                   

Monday, 1 November 2010

முடியாத முற்று.

பற்றுகையில்
முற்றுவதைப்போல் தோன்றி
தொற்றுகையில்
தொலைந்து போவதோ உண்மை.

                      ***

Saturday, 30 October 2010

பரமசிவன்

தனிமையில் நான்.
பிரங்ஜையற்றதொரு தருணம்
என்னுள் பிரபஞ்சம் முழுதும்
அணி திரண்டு
எனைத் திரட்டி
பேரிருப்பாய்
உச்சத்தில் எனை  நிருத்தி
அச்சத்தில் நான் உறைய
அனைத்தும் மறைந்தது.

மீண்டும் ஒற்றையாய்
தனிமையில்
நான்.


















{ முதன் முதலாக கஞ்சா புகைத்த போது உணர்ந்தது } 

                                      ****

Sunday, 17 October 2010

ஏக்கப் பேரெதிரொலி

வீட்ட மாத்துங்கமா
பொண்ணுக்கு வரன் தானா கூடி வரும்..
வாஸ்த்து சரியில்ல சார்..
உன்னும் ஒரு வீடில்லையா
என்ன சார் வாழ்ந்தீங்க..?
வழியே இல்லாமல்
வாழ்ந்த வீட்டை விட்டு
வேறு வீடு செல்ல வேண்டி வந்தது.

மொத்தப் பொருட்களையும்
லாரியில் ஏற்றி
கடைசியாக ஒருமுறை
தரையில் அமர்ந்தேன்.
அவ்விடத்தில் அக்கோனத்தில் அப்பார்வை புதிது.



நீண்டப் பெருமூச்சிழுத்து
வாழ்ந்த நாட்களின் வனப்புகளுக்குள் திளைக்க
வண்டி கெளம்புதுடா
அப்பாவின் குரல் என்னை எதார்த்தத்திற்கு
இழுத்து வந்தது.
ஆங்..வற்றேன்..என்றேன்.
வற்றேன்..வற்றேன்.. என்றது  வீடு..!















சட்டென எழுந்து
வேகமாக வெளியேறி
திரும்பிப் பார்க்காமல் பயணித்தேன்..


                         ****

Sunday, 10 October 2010

ஞாயிறு தூற்றுதும்.. ஞாயிறு போற்றுதும்..


ஞாயிறு தூற்றுதும்..




ஒத்தி வைத்த அத்தனை
சந்திப்புகளையும் நிகழ்த்திவிட
பொத்தி வைத்திருந்தேன் இந்த ஞாயிறை.
கூப்பிட்ட அத்துனைப் பேரும்
குடும்பத்துடன் குதூகலிக்க
குப்புறப் படுத்து
குமுறுகிறது
என் ஞாயிறு.

                                 - 10 மணி {காலை}


ஞாயிறு போற்றுதும்..





பெரும் போராட்டத்திற்குப் பிறகு
உணர்வுகளை ஒ(து)டுக்கிவிட்டு
உள்ளூரப் பயணிக்கத் திட்டமிட்டிருந்தேன்.
ஓரக் கண்ணால் எட்டிப் பார்த்தது பற்று.
சலநித்தத் தருணம் மரணித்தது
உள்ளொளிப் பயணம்.
சொல்லி வைத்தார் போல்
தேடிச் சென்ற அத்துனைப் பேரும்
ஓடி ஒழிய
நாடிச் சென்றேன் மீண்டும்
எனை நானே.
எதிர்பாரா தத்தருணம்  
எட்டிப் பார்த்த தனிமை என்னைப் பற்றி..
..என்னைப் பற்றி பலப்பல ஆச்சர்யங்களை
எனக்குணர்த்த
உருகியோடிய தனிமையின்
நீரோட்டத்தில் நீந்தியவாறு
கழிந்தது - இந்த ஞாயிறு.
                      
                                              - 10 மணி {இரவு}


                                       ****

Saturday, 9 October 2010

மின்னி மறைந்த மறை














சனிதோறும் சாப்பாடு விட்டு
முனீஸ்வரனுக்கு முக்காடு இட்டு
குலதெய்வத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தி
அனாதைகளுக்கு அன்னதானம் கொடுத்து
தலையில் நீரிட்டு
தரையில் சோறிட்டு
கால் நடையாக மலை ஏறி
தெய்வத்துக்கு மந்திரம் ஓதி
எப்பாடு பட்டாகினும் அடைவேனென
சாப்பாடு போட்டு கூப்பிட்டும் வராத
கடவுள்
சாக்காடு தன் கூப்பாடு போட..
"ங்கோத்தா எனுக்கு ஒன்னியும் வேணாம்டா.."
கடைசியாக கண் சிமிட்ட
மின்னி மறைந்தது மறை
அகத்தே.

                               ****