தனிமையில் நான்.
பிரங்ஜையற்றதொரு தருணம்
என்னுள் பிரபஞ்சம் முழுதும்
அணி திரண்டு
எனைத் திரட்டி
பேரிருப்பாய்
உச்சத்தில் எனை நிருத்தி
அச்சத்தில் நான் உறைய
அனைத்தும் மறைந்தது.
மீண்டும் ஒற்றையாய்
தனிமையில்
நான்.
{ முதன் முதலாக கஞ்சா புகைத்த போது உணர்ந்தது }
****
இன்னா தம்ம இவ் வுலகம்;
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.
( பக்குடுக்கை நன்கணியார்)
சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்
இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.
(கணியன் பூங்குன்றன்)
Saturday, 30 October 2010
Sunday, 17 October 2010
ஏக்கப் பேரெதிரொலி
வீட்ட மாத்துங்கமா
பொண்ணுக்கு வரன் தானா கூடி வரும்..
வாஸ்த்து சரியில்ல சார்..
உன்னும் ஒரு வீடில்லையா
என்ன சார் வாழ்ந்தீங்க..?
வழியே இல்லாமல்
வாழ்ந்த வீட்டை விட்டு
வேறு வீடு செல்ல வேண்டி வந்தது.
மொத்தப் பொருட்களையும்
லாரியில் ஏற்றி
கடைசியாக ஒருமுறை
தரையில் அமர்ந்தேன்.
அவ்விடத்தில் அக்கோனத்தில் அப்பார்வை புதிது.

நீண்டப் பெருமூச்சிழுத்து
வாழ்ந்த நாட்களின் வனப்புகளுக்குள் திளைக்க
வண்டி கெளம்புதுடா
அப்பாவின் குரல் என்னை எதார்த்தத்திற்கு
இழுத்து வந்தது.
ஆங்..வற்றேன்..என்றேன்.
வற்றேன்..வற்றேன்.. என்றது வீடு..!
சட்டென எழுந்து
வேகமாக வெளியேறி
திரும்பிப் பார்க்காமல் பயணித்தேன்..
****
பொண்ணுக்கு வரன் தானா கூடி வரும்..
வாஸ்த்து சரியில்ல சார்..
உன்னும் ஒரு வீடில்லையா
என்ன சார் வாழ்ந்தீங்க..?
வழியே இல்லாமல்
வாழ்ந்த வீட்டை விட்டு
வேறு வீடு செல்ல வேண்டி வந்தது.
மொத்தப் பொருட்களையும்
லாரியில் ஏற்றி
கடைசியாக ஒருமுறை
தரையில் அமர்ந்தேன்.
அவ்விடத்தில் அக்கோனத்தில் அப்பார்வை புதிது.

நீண்டப் பெருமூச்சிழுத்து
வாழ்ந்த நாட்களின் வனப்புகளுக்குள் திளைக்க
வண்டி கெளம்புதுடா
அப்பாவின் குரல் என்னை எதார்த்தத்திற்கு
இழுத்து வந்தது.
ஆங்..வற்றேன்..என்றேன்.
வற்றேன்..வற்றேன்.. என்றது வீடு..!
சட்டென எழுந்து
வேகமாக வெளியேறி
திரும்பிப் பார்க்காமல் பயணித்தேன்..
****
Sunday, 10 October 2010
ஞாயிறு தூற்றுதும்.. ஞாயிறு போற்றுதும்..
ஞாயிறு தூற்றுதும்..
ஒத்தி வைத்த அத்தனை
சந்திப்புகளையும் நிகழ்த்திவிட
பொத்தி வைத்திருந்தேன் இந்த ஞாயிறை.
கூப்பிட்ட அத்துனைப் பேரும்
குடும்பத்துடன் குதூகலிக்க
குப்புறப் படுத்து
குமுறுகிறது
என் ஞாயிறு.
- 10 மணி {காலை}
ஞாயிறு போற்றுதும்..
பெரும் போராட்டத்திற்குப் பிறகு
உணர்வுகளை ஒ(து)டுக்கிவிட்டு
உள்ளூரப் பயணிக்கத் திட்டமிட்டிருந்தேன்.
ஓரக் கண்ணால் எட்டிப் பார்த்தது பற்று.
சலநித்தத் தருணம் மரணித்தது
உள்ளொளிப் பயணம்.
சொல்லி வைத்தார் போல்
தேடிச் சென்ற அத்துனைப் பேரும்
ஓடி ஒழிய
நாடிச் சென்றேன் மீண்டும்
எனை நானே.
எதிர்பாரா தத்தருணம்
எட்டிப் பார்த்த தனிமை என்னைப் பற்றி..
..என்னைப் பற்றி பலப்பல ஆச்சர்யங்களை
எனக்குணர்த்த
உருகியோடிய தனிமையின்
நீரோட்டத்தில் நீந்தியவாறு
கழிந்தது - இந்த ஞாயிறு.
- 10 மணி {இரவு}
****
Saturday, 9 October 2010
மின்னி மறைந்த மறை
சனிதோறும் சாப்பாடு விட்டு
முனீஸ்வரனுக்கு முக்காடு இட்டு
குலதெய்வத்துக்கு கும்பாபிஷேகம் நடத்தி
அனாதைகளுக்கு அன்னதானம் கொடுத்து
தலையில் நீரிட்டு
தரையில் சோறிட்டு
கால் நடையாக மலை ஏறி
தெய்வத்துக்கு மந்திரம் ஓதி
எப்பாடு பட்டாகினும் அடைவேனென
சாப்பாடு போட்டு கூப்பிட்டும் வராத
கடவுள்
சாக்காடு தன் கூப்பாடு போட..
"ங்கோத்தா எனுக்கு ஒன்னியும் வேணாம்டா.."
கடைசியாக கண் சிமிட்ட
மின்னி மறைந்தது மறை
அகத்தே.
****
கசிந்துருகும் உறைபிணி
சொல்லொனாத் துயரங்கொண்டு
நெஞ்சடைத்து சிந்தைக்குள்
சிக்கு விழ..
பேரிடிச் சத்தம்.
பெருமுகிழ்க் கூட்டம்.
இருள் சூழ..
கன மழையின் முன்னோட்டம் கண்டு
கச்சிதமாய் கூடு சேரும் பறவைகள்.
தென்றல் இசைத்திட
தன்னிசையில் தானே ஆடிடும்
பியானோவாய் - தென்னங்கீற்று.
உருண்டோடிடும் நதிநீர்
இடைபட்ட பாறையில் தடைபட்டு
இருபக்கமும் பிரிந்து..
..மறுபக்கம் குவிந்து
ஒருமித்ததொரு சங்கீதம் எழுப்ப
இறுகிப் பிடித்த இதயம்
இளகி
இயல்பாய் இசைத்தது.
படபடத்த நாடி
பதப்பட்டு
பக்குவமாய்
நாளங்களில் நளிந்தோடிட..
உள்ளம் உருகி
கன்னங்களில் கசிந்தோடியது
கவலை.
****
துளி - க் - கடல்
| கசிந்துருகும் சுனை நீராய் - மழலை |
![]() | ||||
| அணிதிரண்டு உருண்டோடிடும் - பிள்ளைப் பருவம் |
![]() |
| அடிபுரண்டு அருவியாய் நீண்டு பேரிசை முழக்கத்தோடு திருவிழா காணும் - இளமை |
![]() |
| தறிகெட்டுத் திரிந்து தத்தளித்து.. தன் பாதை கண்ட பின் பண் பாடிடும் பக்குவ - மத்திமை |
![]() |
| மெல்லிசை பாடி வழிந்தோடி பாறையிடத்து வளைந்தோடிடும் - முதுமை |
![]() |
| மௌனப் பயணியாய் கடல் சேர்ந்து.. |
![]() |
| பேரிருப்பில் வீடற்று..பேரற்று..பெரு(ம்)ங் - கடல்நீராய் வீடுபேறு. **** |
DOLLAR பயணம் - உரை காட்சிகள்
DOLLAR பயணம் - கட்டுரையின் தொடர்ச்சியாக நாங்கள் பயணத்தில் கண்ட காட்சிகளை இங்கே வழங்குகிறோம்
| உங்களை இனிதே வரவேற்கிறது |
| மாட்டு வண்டிக்கு REST.. |
| தென்னை வேர் |
| இடிந்த குடிசை |
| Satelite - உம் எட்டிவிடும் தூரம் தான் |
| பாரம்பரிய வைத்தியம் போற்றும் கிராமம் |
| Cement வீடு |
| ஒட்டு வீடு |
| வைக்கோல் போர் |
| பழைய ஒட்டு வீடு |
| கிராமத்தில் தாவணி உடுத்திய ஒரே பெண் |
| நெருஞ்சி முள் |
| ஆலம் விழுதும் தென்னை ஓலையும் |
| தக்காளித் தோட்டம் |
| வாழைப் பூ |
| கத்தாளை |
| பன்னாடை |
| செங்கல் சூளை |
| செங்கல் சூளை |
| செங்கல் சூளை |
| செங்கல் சூளை |
| நெல் பிரிக்கும் ஆளை |
மருத்திப்பட்டி திரைப்படத்திற்காக தேடிய கிராமங்கள்/வீடுகள்
| ஆலயம் |
| ஆலயம் |
| எல்லைச்சாமி |
| எல்லைச்சாமி |
| எல்லைச்சாமி |
| மஞ்சள் தோட்டம் |
| CONVENT BUS வரப்போவுது.. |
| CORN FLAKES அறியாத கட்டழகர் |
| DAIRY MILL |
| விறகு மண்டி |
| பண்ணை வீட்டு சமாதி |
| நாங்க வாஸ்த்து வீட்டுக்குப் போயிட்டோம்க.. |
| நெற்பயிர் காயப்போடும் இடம் |
| மரவட்டை |
| உலகமய ZATION |
| ஈமச் சடங்கு |
| இறந்தவரின் ஆடைகள் |
| தென்னையை வெட்டி.. |
| சாலையோரம் போட்டு விடுகிறார்கள் |
| மர்மன் |
| பயணித்த வாகனம் |
| DOLLAR பயணம் முற்றிற்று **** |
Subscribe to:
Comments (Atom)











