இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 29 August 2010

ஆத்திச்சூடி- மாத்திச்சூடி

அறம் செய விரும்புஅறக்க பறக்க கெளம்பு

ஆறுவது சினம்
ஆறும் வரை ரணம்

இயல்வது கரவேல்
இயன்றவரை கரப்பேள்

ஈவது விலக்கேல்
ஈரங்காஞ்சா விக்கல்

உடையது விளம்பேல்
உடயதெது விளம்ப ?

ஊக்கமது கைவிடேல்
ஊக்க மது கைவிடேல்

எண் எழுத்து இகழேல்
என் எழுத்து இகழேல்

ஏற்பது இகழ்ச்சி
ஏற்றுப்பார் மகிழ்ச்சி

ஐயம் இட்டு உண்
ஐ எம் ஈட்டிங் பன்

ஒப்புரவு ஒழுகு
ஒன்னுக்கு போனா கழுவு

ஓதுவது ஒழியேல்
ஊதுவது ஒழியேல் ( குறுகி ஆனது )

ஔவியம் பேசேல்
ஔவையிடம் சொல்லேல்

அஃகம் சுருக்கேல்
            ***
அஃதே கிறுக்கல்

1 comment:

  1. ச்சூ... ச்சூ... சூடி
    சூப்பரா படி. ---R

    ReplyDelete