இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Monday, 30 August 2010

எல்லாம் தலை

நுனிப்புல் பனிபோல்  நிலையுடை வாழ்விது

வையத்துள் எல்லாம் தலை.

பிறவிப்பினி

சுழல்தனில்  சிக்குண்ட  துரும்பா  யிப்பிறவி
தான்தனில்  தங்கி  விடல். 

கடவுள் கடுப்பாகி..

Shit !
என்னடா Life  இது ?

கடவுளின் அவள்  சலித்துக்கொள்ள..
"Just a moment darling"  என்று ,
தன் தண்டட்டியை கழற்றி
சுண்டிவிடும் பகவன்..
சுழன்றியவாறு   நிச்சலனமற்ற
தெள்ளிய வெளியில்
 விழுகிறது அது.
முதல் சலனம். 
 ஒன்று மற்றொன்றாக  Multiply  ஆகி ..
மடையுடைய கடைவரை தடை தகர்த்து  Travel ஆக ,
தறிகெட்டுத்  திரியும்  On the way                                                                    
அட்டுழியங்கள்  அளப்பரையை துவக்க
ஆரம்பமாகிறது   One-day Match ..!                   !

Bowler பிரம்மா  மானுடப்  பந்தை 
எச்சில் தடவி,
தொடையிடுக்கில்  polish செய்து
கச்சிதமாகப்  பிடித்து Kiss அடித்து
மட்டயாளன் நோக்கி  செமையாக வீச ..

காத்திருந்த Batsman கச்சிதமாக  விளாச,
விசில்கள்  தெறிக்க பறக்கிறது  மானுடத் தலைகள்..!
  
Tension னுடன்  Match  பார்க்கும் கடவளுடைய அவள்..

Human Balls  பறந்து  விழுந்தது  Parliment ல்..
"ஐயகோ ! Dirty பந்தை Beauty செய்."
Punch விடும் எதிர் கட்சி..
"Budget  உதைக்கிறது"
Bulb வாங்கும் ஆளுங்கட்சி.
மாறி மாறி தூக்கி  வீச
நாறிப்  போனது மானுடத்  தலைகள்.

நாற்றம்  தாளாமல் நாடாளுமன்றம் சென்ற
ராப்பிச்சைக்காரன் ,
பந்தை எடுத்து Public Toilet ல் சுத்தம் செய்ய ..

பளபளக்கும்  Human Balls ன்  கொட்டையடிக்கும் :

காவி வேட்டிகள்.. கதர் சட்டைகள்..
ஆட்டையைப்  போடும் அம்பானிகள்..
அவசர அறிவாளிகள்..
Fast Food கள்.. Foreign சரக்குகள்..
LIfe Insurence.. Wife Arrogance..
Sugar, சுக்கு காப்பி, BP, Beauty Parlour....என,
டாப் கியரில் Take-off  ஆக..

"ஏய் .. எண்ணிய வெச்சி காமிடி கீமிடி  பண்ணலையே ?"
Doubt ஆன Human Balls..
Bounce  ஆகி பரலோகம் சென்று,
பகவன்  பக்கத்தில் பாவமாக  அமர்ந்திருக்கும்
பார்வதியின்  கன்னத்தில் Punch வைக்க,

"வேணாம்.. வலிக்குது.. அளுதுருவேன் ..!"
God's Darling  கெஞ்ச ..
வீங்கிய கன்னம் வருடியபடி..
"Anything For You Darling..!"
பகவான் கொஞ்ச..

"ஐயையோ ! ஆலவுட்ரா Underwear கலண்ட
Half-Boil  மண்டயா..!"

பல்டியடிக்கும்  பார்வதி,
பல்லிளிக்கும்  பகவான்.

Sunday, 29 August 2010

ஏக்கம்

ஓடுமுகிழ் வான்போல் வாய்ப்ப நெஞ்சத்

தஞ்ச முறும் எண்ணம்.

வளர் - சிதை மாற்றம்

எனக்கு மெனக்குமான தொடர் போராட்டத்தில்

கரைந்து மறையு மென் வாழ்வு ;

யான் வளர யான் தேய்கிறே

னென்செய் யென் பராபரனே ?

விழிப்பில் கெடு முழுமை

நிகழுங்கன் அறிவதில்லை சிரிப்பதூஉம் அழுவதூஉம்

மழலைகளாய் வாழ்ந்த போழ்து - யான்வளர

நிகழுங்கன் அறிகிறேன் அனைத் துணர்வும்

அத்தருணம் கெடுகிறது முழுமை.

எண்ணக்குவியல்

எண்ணமற்ற கணங்களில் உறைந்திருந்த தருணம்

வந்நகம் கொண்டு வருடும் வளர்ப்புபூனை ;

கல்லிட்ட மையம் தனை நோக்கி

குவியும் என்னைத் திவழைகள் .

ஆத்திச்சூடி- மாத்திச்சூடி

அறம் செய விரும்புஅறக்க பறக்க கெளம்பு

ஆறுவது சினம்
ஆறும் வரை ரணம்

இயல்வது கரவேல்
இயன்றவரை கரப்பேள்

ஈவது விலக்கேல்
ஈரங்காஞ்சா விக்கல்

உடையது விளம்பேல்
உடயதெது விளம்ப ?

ஊக்கமது கைவிடேல்
ஊக்க மது கைவிடேல்

எண் எழுத்து இகழேல்
என் எழுத்து இகழேல்

ஏற்பது இகழ்ச்சி
ஏற்றுப்பார் மகிழ்ச்சி

ஐயம் இட்டு உண்
ஐ எம் ஈட்டிங் பன்

ஒப்புரவு ஒழுகு
ஒன்னுக்கு போனா கழுவு

ஓதுவது ஒழியேல்
ஊதுவது ஒழியேல் ( குறுகி ஆனது )

ஔவியம் பேசேல்
ஔவையிடம் சொல்லேல்

அஃகம் சுருக்கேல்
            ***
அஃதே கிறுக்கல்

Tuesday, 24 August 2010

நானென் முனைப்பு நெஞ்சு

அடிமுதல்  முடிவரை
அணுவணுவாய்   வாய்கொண்டு
விழித்திருந்து
விரைந்தெழுத விரைத்தொழுகிய
நென் நகந்தை .

விடியுங்கால் கால் இடை
தளர்ந்த நடை;

அகம் கண்டது விடை.

தரிசனம்

நானழிந்த தொரு தருணம்
மின்னி மறைந்த திறை ;

சிந்தையுள் தாண்டவப் பறை
கிட்டுமோ மீண்டுமொரு முறை ;

காத்திருந்தேன் கடைசி வரை
காணவில்லை - நான்
உள்ளவரை.

தவம்

எழுவாய் தொழுவாய்
தொழுதழுது விழுவாய் ;

வீழ்ந் தவிழ்ந் தவழ்வாய்
தவப் பயனாய் திகழ்வாய் .

               ****

நாணம்

நாண மிழந்த நங்கையர் காண்
காட்சி யாவும் காணலே.

பாட்டி சொல் கேளீர் :

கடைசி வரைக்கும் எதுவுமே
கெடைக்காதுடி கண்டாரவோளி . .!

                      ****

திடமது நாணல்

மரத்தினுந் திடமது நாணல் என்ப

நானழிந்த தவப் புதல்வர் .

பற்று

பற்றுற்று  இயக்கமுற்று  இயக்க  முற்றி

முற்றிற்று  உற்ற  பற்று.

Monday, 2 August 2010

About BLOG

@..Will Resurrect Soon........... என நம்புவோமாக..!?



@ conditions apply