இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Monday, 1 April 2019

மகேந்திரன்

'ஜானி'. படத்தின் இந்த ஒரு காட்சி நால்வரின் கலைத்திறனை பறை சாற்றுகிறது. முதலில் ஸ்ரீதேவியின் நடிப்பு. பிறகு ரஜினி. ராஜாவின் இசை. உச்சமாக மகேந்திரன் அவர்களின் இயக்கம்.  ஆசான் பாலுமகேந்திராவிடம் கூறினேன். 'இது போல் ஒரு காதல் காட்சியை எழுதி இயக்கிவிட்டால் அதற்குப் பிறகு காதல் படங்களை இயக்குவதை விட்டுவிடுவேன்'.

பொருமியவர், "என்ன பெரிய மகேந்திரன். 'முள்ளும் மலரும்' படத்த நான் தான்டா படமாக்கனேன். Just emotion ஆ ஒரு கதையோட வந்தார் மகேந்திரன். Screenplay shot divisions ன்னு i only did everything you know."

நான் மௌனம் காக்க பார்வையை திருப்பிக் கொண்டார் குரு.

**

மற்றொரு சமயம் மகேந்திரன் அவர்களின் கடைசிப் படமான 'சாசனம்' பார்க்க பாலு சார் ஆதவன் தீட்சண்யா மற்றும் நான் மூவரும் சத்யம் திரையரங்கு சென்றோம்.
பாதியில் நான் நெளிந்து,

"சார். Rest Room போயிட்டு வர்றேன்.."
சற்று நேரத்தில் ஆதவன் தீட்சண்யா வர்றார். இருவரும் சிரித்துக்கொள்கிறோம்.

படம் முடிந்து Tic-Tac சென்று DVD வாடகைக்கு எடுத்துக்கொண்டு
Woodlands - Drive In நோக்கிப் பயணிக்கையில்,

"என்னடா.. ஒண்ணுமே பேச மாட்டேங்கிற.. நானே கேட்கணுமா.."

"இல்ல சார்.."

"அப்ப சொல்லு.. எப்படி இருந்துச்சி படம்..?"

"No sir.. It's like.."

"பிடிச்சிருக்கு. பிடிக்கல.. இவ்ளோதானே.. இத சொல்ல ஏண்டா இவ்ளோ பீடிக..!"

"சார். கண்ண மூடி பத்து நிமிஷம் படத்த கேட்டேன். எனக்கு புரிஞ்சிச்சி..அதான்.."

"Cinema is basically a Visual Art. நான் தான் சொன்னேன். இல்லேங்கள. ஆனா ஒரு படம் எந்த ஒரு உணர்வ சொல்ல வந்ததோ அந்த உணர்வ பார்வையாளனுக்கு கடத்திட்டா அது நல்ல சினிமா தாண்டா. அதுக்கு 'Grammer' முக்கியமில்ல. இயக்குநரோட பார்வை தான் முக்கியம்."

நீண்ட மௌனத்திற்குப் பிறகு அழுத்தமாகச் சொன்னார்,

'Never underestimate mahendran'.

**

No comments:

Post a Comment