இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 3 March 2019

Sincerely yours, Dhaka

பதினொரு குறும்படங்களின் தொகுப்பாக ஒரு வங்கத் திரைப்படம். வங்காள தேசத்தின் தற்போதைய சமூகச் சூழலை வெளிப்படுத்தும் விதத்தில் பதினொரு புதிய இயக்குநர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் அபு சாகித் எமான். ஆஸ்திரேலியாவில் சினிமா கற்ற இவர் 1974 ல் வெளியான வங்காள தேசத்தின் முதல் சுயாதீனத் திரைப்படமான '11' ம் கிர்க்கட் மற்றும் சாசர் விளையாட்டின் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையான பதினொன்றும் இந்த எண்ணிற்கான காரணமென வேடிக்கையாக சொல்கிறபோதும் அடிப்படையில் அக்கதைகளை அவர் வரிசை படுத்தியிருக்கும் விதத்தை விவரிக்கும் பொழுது உலக அரங்கில் தங்கள் நாடு எந்த அளவிற்கு கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்ததாக பார்க்கப்படுகிறதோ அதற்கினையான பெருநகரங்களுக்கான சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருப்பதை காட்சி படுத்த நினைத்ததாகச் சொல்கிறார். இப்படம் முடிந்தபோது தோன்றியது இப்பிரச்சனைகள் 'தாக்கா'விற்கானது மட்டுமல்லாது சென்னைக்கும் பிற பெருநகரங்களுக்குமான பொதுத்தன்மை வாய்ந்ததெனவேப் பட்டது.

கையறுநிலையில் களவுபுறிய நினைப்பது பற்றிய படம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான இத்தாலியின் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்ட ' பை சைக்கிள் தீவ்ஸ்' காலம் தொட்டு இருத்தலியல்வாதப் படங்களான 'டாக்ஸி டிரைவர்' 'ஃபாலிங் டவுன்' போன்றப் படங்களின் நீட்சியாகவே இருக்கிறது. குறும்படங்களை இணைப்பதன் மூலம் பல திறமைசாளிகள் ஒரே படத்தில் அடையாளப்படுவது சாத்தியமாவது மட்டுமல்லாது குறும்படங்களைக் காட்டிலும் முழுநீளப்படங்களாக வெளியிடுவதன் மூலம் தயாரிப்பு முதலீட்டை மீட்பதும் எளிதாகிறதென்கிறார் அபு சாகித் எமான். அவர் கணித்தது போன்றே வங்காள தேசத்தில் ஏழு வாரங்கள் ஓடியிருக்கிறது இப்படம். ஸ்பெய்ன் நாட்டின் படமான ' The wild tales' அந்நாட்டின் சமூக கூட்டு மனோபாவத்தை மனித மனதின் இருளை வெளிச்சம் போட்டுக் காட்டியதைப் போல இந்த புதுவித முயற்சி சினிமாவின் மற்றொரு சாத்தியத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் அபு சாகித் எமானுடன் கலந்துரையாட நேர்ந்தது.

No comments:

Post a Comment