மலையாள இயக்குநர் கெ.ஜி.ஜார்ஜ் அவர்களை சிறப்பிக்கும் இம்மாத படச்சுருள் இதழுக்கான எமது கட்டுரையின் தலைப்பாக 'கனவினூடே ஒரு பயணம்' என்று எழுதி கொடுத்திருந்தேன். ஆனால் அச்சாகி வெளிவந்திருக்கும் இதழில் தலைப்பிற்கடுத்து எழுதப்பட்ட ஜார்ஜின் மேற்கோளையே தலைப்பாக வைத்துள்ளார்கள். 'ஸ்வப்னாடனம்' என்ற அவரின் முதல் திரைப்படத்தின் மொழிபெயர்ப்பே 'கனவினூடே ஒரு பயணம்'. அவர் பற்றிய கட்டுரைக்கும் அதுவே பொருத்தமாக இருக்கும். மேலும் 'கனவினூடே' என்ற தமிழ் சொல்லின் உச்சரிப்பு மலையாளத்துக்கும் பொருந்துவதால் இத்தலைப்பு. வாசிப்போர் இத்தலைப்பை நினைவில் நிறுத்தி வாசித்தல் நன்று.
**
No comments:
Post a Comment