இப்படத்தின் ஜீவனை கட்டமைத்தவர்களில் கூத்துப்பட்டறையைச் சேர்ந்த ஆசிரியர் எழுத்தாளர் Rajanayahem R.p. முக்கியமானவர். பன்முகக் கலைஞரான இவர் 'சினிமா பதிவுகள்' 'தூரலாய் சாரல்' என்று புத்தகங்கள் எழுதியுள்ளார். சேக்ஸ்பியர் இலக்கியத்தை போதிப்பதோடு அபாரமான நடிப்பாற்றல் மிக்கவர். இவரின் transformational acting ஐ நேரில் பார்ப்போர் அவரின் தனித்துவத்தை உணர்வர். இப்படத்தில் நடித்த 94 வயதுடைய பெரியவருக்கு இவர் குரல் கொடுத்தது அக்கதாபாத்திரத்திற்கு முற்றிலும் புதுப்பரிமானத்தை அளித்துள்ளது. ஆடுகளத்தில் கவிஞர் நடிகர் வ.ஐ.ச.ஜெயபாலனுக்கு டத்தோ ராதாரவியின் குரல் எப்படியோ அப்படியே இப்படத்தில் இவரின் குரல். சிங்கப்பூர் திரையிடலில் சீனர்களும் மலாய் மக்களும் அதை உணர்ந்து பாராட்டினர்.
வரும் சனியன்று (16.02.19) நிழல் பதியம் சார்பாக திரு அரசு அவர்கள் நிகழ்த்தவிருக்கும் திரையிடலில் இவருடன் கலந்துரையாடலாம்.
**
No comments:
Post a Comment