இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 3 August 2018

வெயிலும் மழையும்  (Break Down Stories - 4)

Second schedule. மார்கழி பனியில் மூன்று நாட்கள் படம்பிடித்த பின் அடுத்த இரண்டு நாட்களுக்காக இரண்டு மாதம் போராட வேண்டியிருந்தது. இதற்கிடையே இறுதிக்காட்சிக்காக ஒரு நீரோடை தேடி அலைந்தோம். டிசம்பரில் எடுத்த இறுதிக்காட்சியில் camera movement திட்டமிட்டதை விட சற்றே வேகமாக நகர்ந்திருந்தது. தற்போது பிப்ரவரி. இரண்டு மாதத்தில் நாங்கள் பார்த்து வைத்திருந்த ஓடை வற்றிவிட ஏற்காடைச் சேர்ந்த அத்தனை மலைகளில் தேடியும் பயனில்லை. நொந்து போய் மனோவிடம் புலம்பிவிட்டு சென்னை செல்ல மனோ அழைத்தார். இருவரும் ஏற்காடிலிருந்து பைக்கில் இருபத்தைந்து கி. மீ. காட்டுக்குள் சென்று அரைமணி நேரம் பாறைகளைக்கடந்து பார்த்தால் அருவி. பூத்தது மனது. மனோவை கட்டியணைத்து படப்பிடிப்புக்கு தயாராணோம்.

அங்கிருந்து கிளம்பிச் சென்று அசம்பூரில் கிழவரை பார்த்தால் தாடியை சுத்தமாக சவரம் செய்திருந்தார். துக்கம் தொண்டையை அடைக்க
"ஏங்க. சொன்னோமில்ல. சவரம் செய்ய வேண்டாம்ணு.."
"இல்லீங்கய்யா திரும்ப நீங்க வர மாட்டீங்களோண்ணு தான்.. அதுமில்லாம ஒரே நமச்சலு "

வேறு வழி தெரியாது அவரை தாடி வளர்க்கச் சொல்லி சிங்கப்பூரிலுள்ள நடிகரை குறுந்தாடி வைக்கச்சொன்னோம். பதற்றத்துடனேயே காத்திருந்தேன் இரண்டு வாரம்."மனோ..ஆத்துல தண்ணி போகுமா.."
"சொல்லமுடியாது.. கோடை வரப்போகுது. சீக்கரம் பயன் படுத்திக்கறது நல்லது"

"ஒரு குறும்படத்துக்கே இவ்ளவு கஷ்டப்பட வேண்டியிருக்கே. நீ இனிமே பெரியபடம் எடுக்க போராடி..ம்..ஒடம்ப பத்ரமா பாத்துக்கோடா.."என்றார் என் 93 வயது தாத்தா.

"இதெல்லாம் தேவயா இவனுக்கு. காட்லயும் மலைலயும் சரியா சாப்பாடில்லாம தூக்கம் இல்லாம பனில எந்திரிச்சு.. ஒழுங்கா படிச்ச படிப்ப வச்சி சம்பாதிச்சிருந்தா இந்நேரம் ஊடு வாசலு காரு பங்களானு கௌரவமா வாழ்ந்திருக்கலாம்.."

"ந்தா..அதெல்லாம் பேசாத. அவன் அப்படி தான். மனசுக்கு புடிச்ச தொழில பண்றான். என்ன பெருசா கௌரவம் அந்தஸ்து மசுரு.. அதெல்லாம் இருக்கற எல்லாருமே நல்லாவா இருக்கறான். கம்முனு கெடமா. அவன் போக்குல உடு. நல்லா வருவான் எம்பேரன்.."

"ஆமா நீங்க தான் மாமா அவன தலமேல தூக்கி வச்சிகினு ஆடறது.."

பெருமிதத்தை பொய்க்கோபத்தால் மறைத்தவாறு சென்றார் அம்மா.

படப்பிடிப்புக்கு மூன்று நாட்கள் முன்பாகவே ஏற்காடு சென்றேன். இம்முறை வேறு பாதை. சில புது இடங்கள் கானக்கிடைத்தது. மனதுள் பதற்றம். அருவியில் தண்ணீர் வருமா. தாடி. மறுபுறம் சேர்வராயன் மலை சென்று பார்த்தால் கானகமே வரண்டு சில இடங்களில் காட்டுத்தீயால் கருகிக் கிடக்கிறது. கண்கள் கலங்க செய்வதறியாது அப்படியே அமர்ந்து விட்டேன்.

"உன்ன நம்பி தான வந்தேன்.. ம். ஏன் இப்படி பண்ற" காடு காது கொடுத்ததாகவே தெரியவில்லை. கோவமாக கிளம்பினேன். பள்ளத்தில் பைக் off செய்து உருட்டியபடியே செல்ல வருடும் காற்றின் காந்தல் வன்மமாகவே பட்டது.

அசம்பூர் சென்று ஆடு மேய்த்துக் கொண்டிருந்த பெரியவரின் கன்னத்தை தடவினால் பழைய தாடியில் பாதி வளர்ந்த நிலையில் சிரிக்கிறார். sgs சாரை அப்படியே கிளம்பி வரச்சொல்லிவிட்டேன். குறுந்தாடியை இங்கேயே மலித்துக் கொள்ளலாம்.

ஒளிப்பதிவாளர் ஜிக்கு காமிரா லென்ஸ் tripod எல்லாவற்றையும் தானே சரிபார்த்து அழைத்து வருவதாக சொல்லியிருந்தார். பத்திரப்படுத்தி வைத்த கிழவரின் சால்வை உட்பட எல்லாப் பொருட்களையும் தயார் செய்தார் கலை.

பெரியவரின் தாடி sgs ன் குறுந்தாடி இரண்டுமே continuity க்கு பொருந்தவில்லை. அதுகூட இரண்டு மாதத்தில் காட்டின் வளர்சிதை மாற்றம் எல்லாம் சேர்ந்து சோர்வடையச்செய்தது. நண்பர்கள் தேற்ற "ok பாத்துக்கலாம். ரெடி" என்று அவற்றிற்குத் தகுந்தாற் போல் இரவு முழுக்க திரைக்கதையையும் காட்சி கோனங்களையும் மாற்றி எழுதிக் கொண்டிருந்தேன். படக்குழுவினர் அனைவரும் சரியான உணவு உண்டார்களா என்று பார்த்து அனைவரும் நன்றாக தூங்க ஏற்பாடு செய்தாயிற்று. அது முக்கியம். எல்லா விளக்குகளும் அனைத்த பின் காற்றுக்கு ஒரு ஜன்னல் திறந்து வைத்து hall ல் எழுதிக்கொண்டும் பழைய footages ஐ பார்த்துக் கொண்டுமிறுக்க மணி நான்கு. லைட் போட்டு ஒவ்வொருவரையும் எழுப்ப தயாரானார்கள். திட்டப்படி அதிகாலை பனி வேண்டும். Continuity. ஆனால் விடிய காலையிலேயே வெயில். துயரப்பட நேரமில்லை. அச்சூழலை எவ்விதம் பயன்படுத்த முடியுமோ அதற்கு தயாரானோம்.

திரைக்கதைப்படி கானகத்தினுள் காலம் உறையும் கணத்தை பதிவு செய்ய வேண்டியே macro lens கேட்டிருந்தேன். ஜிக்குவிடம் சொல்ல அவர் camera assistant ராஜேஷை பார்க்க அவர் விழிக்கிறார். "சார் சொல்லலயே சார்" மண்டைக்குள் இரத்தக் குலாய்கள் புடைக்க தலையை பிடித்துக் கொண்டு மரத்தில் சாய்ந்தேன். பல இடங்களில் முயன்றும் பலனில்லை.
" ok ready. Wide போயிடலாம்.double up"

திரைக்கதைகள் திரைப்பட உருவாக்கத்தின் எல்லாத் தளங்களிலும் எழுதப்படுகிறது என்பதே யதார்த்த உண்மை.

sgs காரிலிருந்து இறங்கி வருகிறார். கதைப்படி காலை மணி ஏழு. Tarkoevsky - யின் Solaris மற்றும் Nostalghia தான் inspiration. எல்லோரும் தயாராக சற்றே விலகி பல்லத்தில் இறங்கிப்போய் காட்டை மௌனமாக வெறித்தேன். " ஏன்.. நான் என்ன பண்ணேன். உன்ன நம்பி தான வந்தேன். உன்ன பத்தி தான படம் எடுக்கறேன். அப்பறம் ஏன் இப்படி சோதிக்கற". பதிலேதுமில்லை.

"சார் ரெடி.."
"ஆங்..வந்துட்டேன்"

மனதை தேற்றிக் கொண்டு மேலேறி வந்து " ok..camera.. action." sgs காரிலிருந்து வெளியே வருகிறார். கண் கூசும் வெயில். என்னுள் ஒருவித வெறுமை.

திடீரென அவ்விடம் சூழும் அடர்த்தியான வெண்பனி(Fog).
அக்கணம் என்னுள் மையங்கொண்ட அதிர்வலை உடலெங்கிலும் பரவ

"ஜிக்கு..அங்க பாருங்க FOG.."

அனைவரும் சிலிர்க்க இயற்க்கையின் இக்கொடையை எதிர்கொள்ள முடியாது தத்தளித்தேன். பின் துள்ளி குதித்தேன். லென்ஸ் மாற்றப்பட்டது. கேமரா இடம்மாற கடும் பனிசூழ் கானகத்துள் கால் பதிக்கும் sgs அப்பரவசத்தை அப்படியே வெளிப்படுத்தினார். என்னையும் அறியாது என் கரங்கள் கானகத்தின் முன் கூம்பின.

"Thanks. ரொம்ப thanks. காலம் முழுக்க ஒங்கிட்ட நான் சரண்."

Sg சார் சொன்னார் "காலைல பிரார்த்தனையப்ப வள்ளலார் கிட்ட கேட்டேன் பசு. இந்த படம்புடிக்கறவன் ரொம்ப feel பண்றான். கொஞ்சம் பனிய கொடுத்திடுங்கன்னு. அவர் கருண தான் இது "

ஆசான் பாலு மகேந்திரா 'மூன்றாம் பிறை' உச்சகாட்சி எடுக்க மழை தேவைப்பட்டதாம். கேட்டாராம். வந்ததாம். கடைசிப்படமான 'தலைமுறைகளு'க்கு புயல் தேவைப்பட்டது. வந்தது.

If a person really desires to acheive something, all the universe conspires to help that person to acheive his dream.- Paulo Cohelo

நன்றி.

***

No comments:

Post a Comment