இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 5 August 2018

Break down reviews 2- karthik arunumar

கனவுத்திரை-மூன்றாம் நிகழ்வு

         “கனவுத்திரை” மூன்றாம் நிகழ்வு இனிதே நேற்று நடந்தது.எதிர் பாரத எண்ணிக்கையில் கூட்டம்.சீன,மலாய் சமூக மக்களும் நிகழ்வில் கலந்து கொண்டு நிகழ்வை சிறப்பித்தார்கள்.

                 குறும்படம் “பிரேக்டவுன்” திரையிடப்பட்டது.அதற்கு முன் “அனிமேஷன் திரைப்படம்” குறித்த பார்வையை தமிழாசிரியர் கலைவாணி இளங்கோ  அவர்கள் நகைச்சுவையுடன்,சுவைபட சிறுவர்களுக்கும் புரியும்படி எடுத்துக் கூறினார்.

         அதன் பின் திரு.பாலு மகேந்திரா மற்றும் வெற்றிமாறன் ஆகியோருடன் உதவி இயக்குனராக பணிபுரிந்த  திரு Md.பசுபதி அவர்களின் “பிரேக்டவுன்” குறும்படம் திரையிடப்பட்டது.

         கதையின் “ஒண்லைன்” இதுதான்.உலகமயமாக்கலுக்குள் பின்னிப் பிணைந்த வாழ்க்கை வாழும் ஒருவன்  மனச்சோர்வு மிகுந்த ஒரு பணிச்சூழலில்,பணி  முடிந்து செல்லும் தருவாயில் வழியில் அவனது கார் ப்ரேக்டவுன் ஆகிறது.அதுவும் ஒரு நடுக்காட்டில்.இந்த சூழ்நிலையால் ஓரிரு நாள் அவன்  வாழப்போகும் வாழ்க்கையும், அந்த ஓரிரு நாளில் அவன் வாழ்ந்த வாழ்க்கை மீதான அவன் பார்வையும் என்னவாகிறது, என்பதையும்,கதையின் முடிவில் இயக்குனர் நாம் ஒவ்வொருவரும் நம் மீதே ஒரு கேள்வி கேக்கும் அளவுக்கு கதையை முடித்துள்ளார்.
 
                     மிகவும் எளிய இந்தக் கதையை இரண்டு முக்கிய கதாபத்திரங்களைக் கொண்டு மிக இயல்பாய் பார்வையாளனுக்கு சொல்ல வந்த விசயத்தைக் கடத்தியிருக்கிறார்.S.G.சிவா வின் நடிப்பு பிரமாதம் .அதைவிட அந்த வயது முதிர்ந்த கதாபாத்திரத் தேர்வு மிக அருமை.மிக மிக மிக மிக இயல்பாய் நடித்திருக்கிறார்.கண்டிப்பாக அவர் தொழில் முறை நடிகராக இருக்க மாட்டார் என்று நினைக்கிறேன்.

                   படம் ஆரம்பத்தில் கொஞ்சம் மெதுவாகச் சென்றாலும் அதன் பின் சீராகச் செல்லும் நதியைப்போல் கதையின் போக்கில் சென்று எங்கும் உறுத்தாமல் யதார்த்தமாய் நிறைவடைகிறது.

                                     நிறைய இடங்களில் ஆசான் பாலுமகேந்திரா நினைவுக்கு வருகிறார்.கண்டிப்பாக
வெள்ளித்திரையில் இயக்குனர் பசுபதி அவர்கள் அழகியலுடன் கூடிய நல்ல கதையுடன் வருவார் என்ற நம்பிக்கை இருக்கிறது.
குறும்படம் திரையிடல் முடிந்து,அதே குறும்படத்தின் முதியவர் கேரக்டருக்கு வேறொரு பெரியவரை வைத்து எடுத்த நான்கு நிமிடக் காட்சியைக் காட்சிப் படுத்தினார்கள்.அந்தக் காட்சிகள் எல்லாம் மிக மிக அற்புதம்.அந்தப் பெரியவர் சொக்கலிங்கப் பாகவதரை நினைவு படுத்திச் சென்றார்.அந்த நான்கு நிமிடக்கட்சி மனத்திற்கு மிகவும் நெருக்கமாக இருந்தது.

                                  வாழ்த்துக்கள் இயக்குனர் Md.பசுபதி,S.G.சிவா,ஒளிப்பதிவாளர் மற்றும் படக்குழுவினர் அனைவருக்கும் .

              திரையிடல் முடிந்ததும் கலந்துரையாடல் நிகழ்வில் பலரும் குறும்படம் குறித்தான தங்கள் கருத்துக்களைப் பகிர்ந்து கொண்டார்கள்.நிறைவான நிகழ்வாக கனவுத்திரை மூன்றாம் நிகழ்வு அமைந்தது.

நிகழ்வினை ஒருங்கிணைத்தவர்களுக்கு நன்றி.குறிப்பாக Vijay Sangarramu க்கும் மற்றும் அக்கா  Jaya Letchmi Selvarajuஅவர்களுக்கும்.




No comments:

Post a Comment