இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 3 March 2019

Sincerely yours, Dhaka

பதினொரு குறும்படங்களின் தொகுப்பாக ஒரு வங்கத் திரைப்படம். வங்காள தேசத்தின் தற்போதைய சமூகச் சூழலை வெளிப்படுத்தும் விதத்தில் பதினொரு புதிய இயக்குநர்களின் கதைகளைத் தேர்ந்தெடுத்திருக்கிறார் இப்படத்தின் கிரியேடிவ் தயாரிப்பாளர் அபு சாகித் எமான். ஆஸ்திரேலியாவில் சினிமா கற்ற இவர் 1974 ல் வெளியான வங்காள தேசத்தின் முதல் சுயாதீனத் திரைப்படமான '11' ம் கிர்க்கட் மற்றும் சாசர் விளையாட்டின் விளையாட்டு வீரர்களின் எண்ணிக்கையான பதினொன்றும் இந்த எண்ணிற்கான காரணமென வேடிக்கையாக சொல்கிறபோதும் அடிப்படையில் அக்கதைகளை அவர் வரிசை படுத்தியிருக்கும் விதத்தை விவரிக்கும் பொழுது உலக அரங்கில் தங்கள் நாடு எந்த அளவிற்கு கேளிக்கைகளும் கொண்டாட்டங்களும் நிறைந்ததாக பார்க்கப்படுகிறதோ அதற்கினையான பெருநகரங்களுக்கான சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருப்பதை காட்சி படுத்த நினைத்ததாகச் சொல்கிறார். இப்படம் முடிந்தபோது தோன்றியது இப்பிரச்சனைகள் 'தாக்கா'விற்கானது மட்டுமல்லாது சென்னைக்கும் பிற பெருநகரங்களுக்குமான பொதுத்தன்மை வாய்ந்ததெனவேப் பட்டது.

கையறுநிலையில் களவுபுறிய நினைப்பது பற்றிய படம் இரண்டாம் உலகப் போருக்குப் பின்பான இத்தாலியின் பொருளாதார நெருக்கடி மற்றும் வேலையில்லாத் திண்டாட்டத்தை வெளிப்படுத்தும் விதத்தில் எடுக்கப்பட்ட ' பை சைக்கிள் தீவ்ஸ்' காலம் தொட்டு இருத்தலியல்வாதப் படங்களான 'டாக்ஸி டிரைவர்' 'ஃபாலிங் டவுன்' போன்றப் படங்களின் நீட்சியாகவே இருக்கிறது. குறும்படங்களை இணைப்பதன் மூலம் பல திறமைசாளிகள் ஒரே படத்தில் அடையாளப்படுவது சாத்தியமாவது மட்டுமல்லாது குறும்படங்களைக் காட்டிலும் முழுநீளப்படங்களாக வெளியிடுவதன் மூலம் தயாரிப்பு முதலீட்டை மீட்பதும் எளிதாகிறதென்கிறார் அபு சாகித் எமான். அவர் கணித்தது போன்றே வங்காள தேசத்தில் ஏழு வாரங்கள் ஓடியிருக்கிறது இப்படம். ஸ்பெய்ன் நாட்டின் படமான ' The wild tales' அந்நாட்டின் சமூக கூட்டு மனோபாவத்தை மனித மனதின் இருளை வெளிச்சம் போட்டுக் காட்டியதைப் போல இந்த புதுவித முயற்சி சினிமாவின் மற்றொரு சாத்தியத்தை அறிமுகம் செய்திருக்கிறது.

சென்னை சுயாதீன திரைப்பட விழாவில் அபு சாகித் எமானுடன் கலந்துரையாட நேர்ந்தது.

Friday, 1 March 2019

Swarnavel on BD

Swarnavel Eswaran, Asso. professor of film studies and creative writing in Michigan state university shared his comments on our short, 'Break down'.

SE : Congratulations. Just now I watched the film. The theme is topical, the cinematography is apt and the location (Yercaud) and acting apt and very good. Music is also an asset. The pace is also in consonance with the narrative about ecology and environment in the context of globalization! Manamaarndha Vaazhthugal!

The important thing is that we do feel that the protagonist had his share of rite of passage. The scenes where he gradually enjoys being there with nature does not come of as contrived.

As you know, your film is driven by the philosophy of a brief moment of realization about the futility of running, and stopping to meditate on life and its futile rush to get ahead. Such projects will have to be paced slower and deeper, as you have done. One could therefore, easily say that the plot does not progress fast or the pace is slow. But your subject needs the pace to posit your protagonist amidst nature so that a moment of realization becomes possible. Except for the oranges falling into water, particularly the later segments look realistic and well directed. The old man has done well, and you have handled him very well as the director. All the Best, SE

**

Sunday, 24 February 2019

Gurvinder singh


The director of 'Alms for a blind horse' 'Chauthi koot' 'Infiltrater' and others came to IFFC. We had discussed the current climate of films the changes n challenges which r in front of sincere film makers. He is an independent film maker who lives in the foot hills of himalayas. He reflects the film language of the avant grade film maker mani koul his mentor who was a student of the legend ritwik ghatak and admirer of robert bresson. Both these contrast artists influence gurvinder.This chain will continue grow n nurture the next gen who r all in love with this art of film making seriously n ceaselessly.

Wednesday, 20 February 2019


  • 'இந்திய ஆன்மாவின் வங்க முகம்'- மிருணாள் சென். வங்க சினிமாவின் மும்மூர்த்திகளில் ஒருவரான மிருணாள் சென் பற்றிய எமது கட்டுரை ஜனவரி மாத அயல் சினிமாவில்.

Sunday, 17 February 2019

உடைந்து போதல் - ராஜ சுந்தர்ராஜன்

“Break down” என்றொரு குறும்படம். பார்த்துக்கொண்டு இருந்த என் கண்களில் நீர்கோர்த்திருக்க படம் முடிந்திருந்தது. நகரைவிட்டு வெளியேறுகிற ஒருவர், கார் பழுதுபட, இடைவழி மலைப்பகுதியில், ஆட்டிடையர் ஒரு கிழவரோடு ஒரு நாள் உடனிருக்க நேர்கிறது. அவ்வளவுதான் கதை. கதை அவ்வளவுதான், ஆனால் ஒரு திரைப்படத்தைக் கதையாகவும் காட்சிகளாகவும் பார்க்கிறோம். காட்சியளவில் இது, மூன்றில், முதல் ஒருபகுதி இடர்ப்பாடும்; பின்னிரண்டு பகுதிகள் ஈடுபாடு + வேறுபாடு பார்க்காத ஈரமுமாக வெளிப்படுகிறது. நகரவாழ்க்கையில் வந்து சிக்கிக்கொண்ட எவர்க்கும், இதுபோல் ஒரு நாட்டுப்புற வாழ்வின்பால் ஏக்கம் இருக்கும். இதிற்போலவே அது வாய்க்குமாயின் நகரத்தை விட்டும் போகலாம்தான். ஆனால், ‘வால்டன்’ அனுபவத்தை எழுதிய ஹென்றி டேவிட் தோரோ, “இரண்டாம் ஆண்டும் முதல் ஆண்டைப் போலவே routine-ஆக இருந்ததால், அந்த நாட்டுப்புறத்தை விட்டுவிட்டு நகருக்குத் திரும்பினேன்,” என்று முடிக்கிறான். இந்தியாவில் இது இன்னும் சிக்கல். ஜாதி பார்ப்போம். ஒளிந்து வாழ்கிற நகரத்து வாழ்க்கையில் ஒருவகை நிம்மதி இருக்கலாம், ஆனால் ஒரு கலைஞனுக்கு தன் அடையாளம் வெளிப்பட வேண்டுமே? அதுமுயற்சியில் வந்துறும் பாடுகளை என்ன செய்ய? “Daisy” என்றொரு கொரியப்படம் பார்த்தேன். நகர்ப்புறத்தில் தன் முன் அமர்கிற நபர்களின் முக ஓவியங்களை வரைந்துதந்து பிழைப்பு நடத்துகிற நாயகி, நாட்டுப்புறத்திற்குப் போய் அங்குள்ள இயற்கை அழகையும் ஓவியமாக்கி வருகிறாள். ஒருவன் பணத்துக்குக் கொலைபண்ணுகிறவன், இன்னொருவன் அவனைப் பிடிக்கவந்த பொலீஸ்காரன் என இருவர் அவளைக் காதலிக்கிறார்கள். முட்கம்பி ஆடையில் பட்டாலும் ஆடை முட்கம்பியில் பட்டாலும் முடிவு என்னாகும்? குறும்படத்தின் தலைப்பு, “Breakdown” இல்லை, “Break down”. அதாவது வினைச்சொல். இங்கே, நகரவாழ்க்கையின் வசதியது கோளாறு படுதல். இதைக் கச்சிதமாகச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் பசுபதி. இவர் பாலு மகேந்திராவின் உதவியாளராம். ஒருவேளை, நகர்ப்புற நாட்டுப்புற சாதகபாதக நிலவரங்களையும் கணக்கிலெடுத்து இது முழுப்படம் ஆக்கப்பட்டால் எப்படியிருக்கும்? காய்தல் உவத்தலின்றி அணுகினால் சரியாக வரும். அது வரட்டும். இப்போதைக்கு இந்தக் குறும்படம் பார்த்து நாம் கண் நிறையலாம்.
இன்று மருதன்பசுபதியின்"breakdown"குறும்படம் திரையிடப்பட்டது.இதில்.வ.ஐ.ச.ஜெயபாலன், ராஜநாயகம்,ராஜசுந்தர்ராஜன்,விசாரனை கேமராமேன் ராமலிங்கம்,ஆனந்தகுமரேசன் முதலியோர் கலந்து கொண்டதுடன் கலந்துரையாடலையும் அழகுபடுத்தினர்.



பாலுமகேந்திரா மற்றும் வெற்றிமாறன் உதவி இயக்குநர்.திரு மருதன்பசுபதி அவர்களின் ப்ரேக்டவுன் ஆசான் பாணியில் எடுக்கப்பட்ட குறும்படம் அனுமதிஇலவசம்.அனைவரும்வருக.