'சிங்கப்பூர்' திரைப்படம்
சிங்கப்பூர் என்றதும் பிரமிப்பும் பரவசமும் தானகவே தொற்றிக் கொள்ளும். 'Little red dot' என்று உலக வரைபடத்தில் இந்நிலப்பகுதியை குறிப்பிட்டு இங்கிருந்து 190 நாடுகளுக்கு வீசா இன்றி பயனிக்கும் அந்தஸ்தை சாதாரனமாக அடைந்து விடவில்லை இந்நாடு. லீ க்வான் யூ என்னும் தனி மனிதர் 1965 ல் விதைத்த வைராக்கியத்தால் வளர்ந்த நாடு இது. எவ்வித இயற்கை சார்ந்த அனுகூலமும் வாய்க்கப்பெறாத போதும் பணத்தை விதைத்து பணத்தை வளர்த்து பணத்தை அறுவடை செய்து பெற்ற பேர் தான் சிங்கப்பூர்.
பல்லினக்குழு பல்லினக் கலாச்சாரம் இணைந்து இயங்கும் சிங்கையில் மனித வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்ற கேள்வியை தொடர்ந்த தேடலின் விளைவாய் ஒரு திரைப்படம் உருவானது.
ஒரு பயணியாய் இந்நாட்டை பார்த்த போது உணர்ந்ததை அங்கு வாழும் நண்பர்களுடன் எழுத்தாளர்களுடன் உரையாடிய போது புரிந்து கொண்டதை திரைக்கதையாக்கி இருக்கிறோம். மலாயர்கள் சீனர்கள் தமிழர்கள் என அந்நாட்டில் வாழ்பவர்களே நடித்திருக்கிறார்கள்.நேற்றுடன் படப்பிடிப்பு முடந்து அடுத்தகட்ட பணிக்கு ஆயத்தமாக இன்று தமிழ்நாடு திரும்புகிறோம்.
விரைவில் படத்தின் முன்னோட்டம்.
**

No comments:
Post a Comment