இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 1 November 2019

குறும்பட பயிற்சிப் பட்டறை

நடந்து முடிந்த குறும்பட பயிற்சிப் பட்டறையில் ஐந்தாம் நாள் மூன்று குறும்பட படபிடிப்பு மிகவும் வெற்றிகரமாகவும் திட்டமிட்டபடியும் அமைந்தது . பட்டறையில் பங்கெடுத்த ஐம்பது பேரின்  கதைக்கருவில்  மூன்றை இறுதியாக நானும் எடிட்டர் லெனின் சாரும் தேர்வுசெய்தோம்   கூட்டாளி, , கன்னிராசி மற்றும் வாட்ஸப். இதில் ஒன்றை நான் இயக்க மற்ற இரண்டு படங்களையும் இயக்க ஆள் தேடிய போது நினைவுக்கு வந்தவர்கள் இரண்டுபேர்  ஒருவர் மருதன் பசுபதி  பாலுமகேந்திரா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரிடம் பணிபுரிந்துவிட்டு இயக்குனராக முயற்சி செய்து வருபவர் . அவருடைய  பிரேக் டவுன் குறும்படம்  பாலுமகேந்திரா நூலகம் சார்பாக   திரையீடு செய்த ஒரே குறும்படத்தை இயக்கிய பெருமைகுரியவர் .   இன்னொருவர்  தரணி ராஜேந்திரன்  ஞானச்செருக்கு எனும் தன்னாட்சி திரைப்படம்  மூலம் பல  உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்ற நெருமைக்குரியவர் 
இவர்கள் இருவரும் என் அழைப்பை ஏற்று மறுநாளே வந்து பங்கேற்பாளர்களூடன்  ஒன்றாக் கலந்து  பயிற்றுவித்து படப்பிடிப்பிலும் அவர்களைன் சந்தேகங்களுக்கு பதில் சொல்லி  தங்கள் சொந்த  படம் போல  இயக்கி ஒரே நாளில்  இயக்கித் தந்த்னர் அவர்கள் இருவருக்கும் பாலு மகேந்திரா நூலகம் சார்பாக  என்  சிறப்பு நன்றிகள்.

- அஜயன் பாலா. ( August 18 FB)

No comments:

Post a Comment