இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 1 November 2019

சிங்கப்பூர் - திரைப்படம்

'சிங்கப்பூர்' திரைப்படம்

சிங்கப்பூர் என்றதும் பிரமிப்பும் பரவசமும் தானகவே தொற்றிக் கொள்ளும். 'Little red dot' என்று உலக வரைபடத்தில் இந்நிலப்பகுதியை குறிப்பிட்டு  இங்கிருந்து 190 நாடுகளுக்கு வீசா இன்றி பயனிக்கும் அந்தஸ்தை சாதாரனமாக அடைந்து விடவில்லை இந்நாடு. லீ க்வான் யூ என்னும் தனி மனிதர் 1965 ல் விதைத்த வைராக்கியத்தால் வளர்ந்த நாடு இது. எவ்வித இயற்கை சார்ந்த அனுகூலமும் வாய்க்கப்பெறாத போதும் பணத்தை விதைத்து பணத்தை வளர்த்து பணத்தை அறுவடை செய்து பெற்ற பேர் தான் சிங்கப்பூர்.

பல்லினக்குழு பல்லினக் கலாச்சாரம் இணைந்து இயங்கும் சிங்கையில் மனித வாழ்க்கை எவ்வாறு உள்ளது என்ற கேள்வியை தொடர்ந்த தேடலின் விளைவாய் ஒரு திரைப்படம் உருவானது.

ஒரு பயணியாய் இந்நாட்டை பார்த்த போது உணர்ந்ததை அங்கு வாழும் நண்பர்களுடன் எழுத்தாளர்களுடன் உரையாடிய போது புரிந்து கொண்டதை திரைக்கதையாக்கி இருக்கிறோம். மலாயர்கள் சீனர்கள் தமிழர்கள் என அந்நாட்டில் வாழ்பவர்களே நடித்திருக்கிறார்கள்.நேற்றுடன் படப்பிடிப்பு முடந்து அடுத்தகட்ட பணிக்கு ஆயத்தமாக இன்று தமிழ்நாடு திரும்புகிறோம்.

விரைவில் படத்தின் முன்னோட்டம்.

**

குறும்பட பயிற்சிப் பட்டறை

நடந்து முடிந்த குறும்பட பயிற்சிப் பட்டறையில் ஐந்தாம் நாள் மூன்று குறும்பட படபிடிப்பு மிகவும் வெற்றிகரமாகவும் திட்டமிட்டபடியும் அமைந்தது . பட்டறையில் பங்கெடுத்த ஐம்பது பேரின்  கதைக்கருவில்  மூன்றை இறுதியாக நானும் எடிட்டர் லெனின் சாரும் தேர்வுசெய்தோம்   கூட்டாளி, , கன்னிராசி மற்றும் வாட்ஸப். இதில் ஒன்றை நான் இயக்க மற்ற இரண்டு படங்களையும் இயக்க ஆள் தேடிய போது நினைவுக்கு வந்தவர்கள் இரண்டுபேர்  ஒருவர் மருதன் பசுபதி  பாலுமகேந்திரா மற்றும் வெற்றிமாறன் ஆகியோரிடம் பணிபுரிந்துவிட்டு இயக்குனராக முயற்சி செய்து வருபவர் . அவருடைய  பிரேக் டவுன் குறும்படம்  பாலுமகேந்திரா நூலகம் சார்பாக   திரையீடு செய்த ஒரே குறும்படத்தை இயக்கிய பெருமைகுரியவர் .   இன்னொருவர்  தரணி ராஜேந்திரன்  ஞானச்செருக்கு எனும் தன்னாட்சி திரைப்படம்  மூலம் பல  உலக திரைப்பட விழாக்களில் பங்கேற்ற நெருமைக்குரியவர் 
இவர்கள் இருவரும் என் அழைப்பை ஏற்று மறுநாளே வந்து பங்கேற்பாளர்களூடன்  ஒன்றாக் கலந்து  பயிற்றுவித்து படப்பிடிப்பிலும் அவர்களைன் சந்தேகங்களுக்கு பதில் சொல்லி  தங்கள் சொந்த  படம் போல  இயக்கி ஒரே நாளில்  இயக்கித் தந்த்னர் அவர்கள் இருவருக்கும் பாலு மகேந்திரா நூலகம் சார்பாக  என்  சிறப்பு நன்றிகள்.

- அஜயன் பாலா. ( August 18 FB)

Wednesday, 7 August 2019

வால்டர் சாலஸின் சாலைகள்

ப்ரேஸிலிய இயக்குநர் வால்டர் சாலஸின் படங்கள் வாயிலாக..















Saturday, 1 June 2019

"I may be a vulgar man. But my art is not !".

- மொஸார்டின் அந்த புகழ் பெற்ற வாக்கியத்தை தன் வயோதிகத்தில் அடிக்கடி சொல்லியபடி இருப்பார் பாலு சார்.

படைப்பையும் படைப்பாளியையும் பிரித்தறிவது சரியா அல்லது இரண்டும் வெவ்வேறாக இயங்க இயங்கலாகாதா என்னும் தொடர் கேள்வியிலிருந்த எனக்கு 'பாலு மகேந்திரா ' என்னும் ஆளுமையை அருகிலிருந்து பார்த்த போது இது சார்ந்து பல சமயங்களில் பல்வேறு பரிமானங்களை பார்க்கலானது. அத்தேடலில் இருந்தபோது ஒரு நாள் இறந்து போனார் எங்கள் ஆசான்.

பயணம் எப்படியிருப்பினும் அவரின் முடிவு போற்றத்தக்கதாகவே அமைந்தது. தன் வாழ்வையும் கலையையும் இணைக்கும் மகுடமாக ஒரு இறுதி நிகழ்வு.'தலைமுறைகள்' படத்தில் இறப்பதற்க்கு முன் மழையில் நனைந்தவாறு உணர்ச்சிப்பெருக்கில் கூத்தாடி நடித்தவர் சட்டென உறைந்து நின்றபடி தன் பேரனிடம் பாலுமகேந்திரா பேசிய கடைசி வசனம்,

"தமிழ மறந்துடாதே. இந்த தாத்தாவ மறந்துடாதே."

ஆசானின் கடைசி இரு நாட்கள் பற்றிய எமது குறிப்புகள் 'சந்தியா ராகம்' இம்மாத படச்சுருளில்.

**

Thursday, 16 May 2019

நிழல் போன்ற நீண்ட வரலாறுடைய அமைப்பிடமிருந்து பெறும் இவ்விருதால் மகிழ்ச்சியடைகிறோம். தவிர்க்கமுடியாத காரணத்தால் விழாவில் பங்கேற்க முடியவில்லை. விருதுபெற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். நன்றி திருஅரசு லெனின் பாரதி பா.ரஞ்சித் பதியம் கூகை மற்றும் உழைத்த அனைவருக்கும்.

விழாவில் பங்கேற்க முடியாமல் போனபோதும் இப்படி ஒரு மேடை அமைந்தது பெருமகிழ்ச்சி. Thank you my dear mentor Mr. Ray. 😃

**