இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Saturday, 1 June 2019

"I may be a vulgar man. But my art is not !".

- மொஸார்டின் அந்த புகழ் பெற்ற வாக்கியத்தை தன் வயோதிகத்தில் அடிக்கடி சொல்லியபடி இருப்பார் பாலு சார்.

படைப்பையும் படைப்பாளியையும் பிரித்தறிவது சரியா அல்லது இரண்டும் வெவ்வேறாக இயங்க இயங்கலாகாதா என்னும் தொடர் கேள்வியிலிருந்த எனக்கு 'பாலு மகேந்திரா ' என்னும் ஆளுமையை அருகிலிருந்து பார்த்த போது இது சார்ந்து பல சமயங்களில் பல்வேறு பரிமானங்களை பார்க்கலானது. அத்தேடலில் இருந்தபோது ஒரு நாள் இறந்து போனார் எங்கள் ஆசான்.

பயணம் எப்படியிருப்பினும் அவரின் முடிவு போற்றத்தக்கதாகவே அமைந்தது. தன் வாழ்வையும் கலையையும் இணைக்கும் மகுடமாக ஒரு இறுதி நிகழ்வு.'தலைமுறைகள்' படத்தில் இறப்பதற்க்கு முன் மழையில் நனைந்தவாறு உணர்ச்சிப்பெருக்கில் கூத்தாடி நடித்தவர் சட்டென உறைந்து நின்றபடி தன் பேரனிடம் பாலுமகேந்திரா பேசிய கடைசி வசனம்,

"தமிழ மறந்துடாதே. இந்த தாத்தாவ மறந்துடாதே."

ஆசானின் கடைசி இரு நாட்கள் பற்றிய எமது குறிப்புகள் 'சந்தியா ராகம்' இம்மாத படச்சுருளில்.

**

No comments:

Post a Comment