படத்தையும் இயக்குனரையும் நாம் எல்லோரும் பாராட்டிக் கொண்டிருக்கும் இவ்வேலையில் இந்த படத்தின் தயாரிப்பாளர் நணபர் விஜய் சேதுபதியைப் பற்றி பேச வேண்டியிருக்கிறது. 'பீட்ஷா' வுக்கு முன்பு நண்பன் ஈட்டி பட இயக்குனர் ரவிஅரசு மூலம் அறிமுகமானவர் விஜய். 'களரி' (தற்போது கிருஷ்னா நடித்து ஓடிக்கொண்டிருக்கும் படமில்லை) என்ற கதையை அவரிடம் சொன்னதும் "இது உலகத்தரங்க. இதுக்குள்ள காமெடி வைங்கன்னோ இல்ல வேற எதாவதோ சொல்லியோ நான் கெடுக்க விரும்பல. எனக்கு என் அப்பா ஞாபகம் வருது" என்று கூறியவர் அடுத்த சில மாதங்களில் பெரிய உயரத்திற்கு சென்று விட்ட போதிலும் முதல் சந்திப்பில் எப்படி பேசினாரோ அப்படியே சில வருடங்கள் கடந்த பின்பும் பேசுகிறார். வெவ்வேறு இடங்களில் சந்திக்கும் போதும் அதே தன்மையுடன் உண்மையாக பேசுகிறார். "ஆமா என்ன ஆச்சி அந்த கத. வேற எதும் மூவ் பண்ணீங்களா" வெற்றி சாரின் தயாரிப்பில் எடுக்க இருந்த கதையைக் கேட்டு கருத்து கூறுவார். ஊக்குவிப்பார். தனி அறையில் பார்த்த அதே மனிதனைத் தான் மேடைகளிலும பார்க்கிறேன்.
இன்று இப்படத்தை தயாரித்து பார்த்த பிறகு தனக்கு பிடிக்கவில்லை என்றும் ஆனால் எல்லோரும் பார்த்து பாராட்டும்போது தன்னுடைய ரசனையையும் அறிவையும் மறுபரிசீலனை செய்ததாகவும் இம்மேடையில் பேசுகிறார். இந்த குணமே விஜய் சேதுபதி. வியாபாரிகள் தங்களுக்கு எது நம்பிக்கை அளிக்கிறதோ அதையே மக்களிடம் கொண்டு சேர்ப்பார்கள் என்கிறார் தயாரிப்பாளர் விஜய். இது மிக முக்கியமான கருத்து. இப்படம் எடுப்பதிலும் வெளிவருவதிலும் இருந்த நெருக்கடிகளையே இப்படி கூறுகிறார் சேது. தமிழ் நாட்டில் இப்பண்புகளுடன் நடிகர்களும் தயாரிப்பாளர்களும் இருப்பார்களேயானால் பல பிரம்மாக்கள் கோபி நயனார்கள் லெனின் பாரதிகள் மூலம் தமிழ் சினிமா உலகத் தரத்தை அடையும்.