இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Saturday, 23 June 2018

The unbearable being of lightness

Documentary film

The unbearable being of lightness. Documentary film by Ramachandra PN on Rohit vemula's suicide note and the protest by the students then.

ரோஹித் வெமுலாவின் தற்கொலைக் குறிப்பை பின்னணியாகக் கொண்டு பூனே திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த இராமச்சந்திரா PN எடுத்த ஆவணப்படம் நேற்று மாலை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் திரையிடப்பட்டது.

ஆனந்த் பட்வர்த்தன் முதலியோரின் ஆவணப்பட மொழியிலிருந்து மாறுபட்ட திரைமொழியுடன் திகழ்ந்த இது போன்ற படங்களை புரிந்து கொள்ள நேற்று அஜயன் பாலா அருண்மொழி உள்ளிட்டோருடன்  நடந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டதைப் போன்று நிச்சயம் பார்வையாளர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும்.

ஆசான் பாலுமகேந்திரா தொடர்ந்து வழியுறுத்தியதைப் போல நம் பள்ளிகளில் திரைப்பட அவதானிப்பிற்கென்று ஒரு பாடப்பிரிவை அமைக்க வேண்டும்.

இது போன்ற படங்கள் திரைப்பட விழாக்களில் பங்குபெற தணிக்கைச் சான்றிதழ் பெற வேண்டும். அத்துறை படைப்பாளிகளுக்கு அளிக்கும் சுதந்திரம் நாம் அறிந்ததே. தனிக்கையைத் தவிர்த்து ஜான் அப்ரகாமின் அக்ரகாரத்தில் கழுதை' யைப் போல ஊர் ஊராக சென்று திரையிட்டு வருகிறார் இராமச்சந்திரா.

நெகட்டிவ்வில் படமெடுத்த காலக்கட்டங்களில் processing கிற்கே தணிக்கை  சான்றிதழ் பெற்றாக வேண்டிய நிலை இருந்தது. மக்களிடம் இது போன்ற கருத்தாக்கங்கள் சென்று சேறுவதே அடிப்படை தேவையாகையால் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு நன்றி.

***

No comments:

Post a Comment