அது மரணம் இல்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடந்த படுகொலை. மரணமா இருந்தா கடந்துவந்துட முடியும். கொலையைப் பார்த்துட்டு எப்படி வர முடியும்? கௌரி லங்கேஷ், துணிச்சலும் சமூக அக்கறையும் கொண்ட நேர்மையான பத்திரிகையாளர். மதவாத சக்திகளைத் துணிச்சலாக விமர்சனம் செய்ததற்காகவே கெளரியை வீட்டு வாசலில் வெச்சு சுட்டுக் கொன்னாங்க. கெளரியோட மரணத்தை என் கையில் தூக்கிச் சுமந்து சவக்குழியில் இறக்கி வெச்சிருக்கேன். கௌரியோட அப்பா, என் குருநாதன் லங்கேஷைப் புதைக்கும்போது அவருக்குப் பிடிச்ச ‘ஸ்டெபிக்ராஃப்’ போட்டோவையும் ஒரு பாட்டில் ரம்மையும் சேர்த்துப் புதைச்சோம். செத்துப்போனவருக்கு இதெல்லாம் போய்ச் சேராதுனு அறிவுக்குத் தெரியும். அது நிறைவான மரணம். ஆனா, கௌரியோட உடலை சவக்குழியில் இறக்கி வைக்கும்போது என் உடம்பும் மனசும் சேர்ந்து நடுங்குது. எங்க அழுகைக்கு நடுவுல அவளைச் சுட்டுக் கொன்னவங்களோட சிரிப்பும் கேட்குது. கௌரியோட சாவைவிட, அவங்களோட கொண்டாட்டம் பயத்தைத் தருது. ‘இதையெல்லாம் அமைதியா வேடிக்கைப் பார்க்கப் போறோமா?’ங்கிற கேள்வி நெஞ்சை அறுக்குது. அந்த வினாடிதான், அவளைப் பொதைக்கலை... விதைக்கிறோம்னு புரிஞ்சிக்கிட்டேன். இந்த உணர்வு எனக்கு மட்டுமில்லை. கௌரியோட இறுதிஊர்வலத்துல கலந்துகிட்ட ஒவ்வொருத்தருக்கும் இருந்துச்சு. கௌரி சாவுக்குப் பதில் கேட்கிறதின் மூலம், என் வாழ்வுக்கும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிற அத்தனை பேருக்கும் பாதுகாப்பு தேடுறேங்கிறதுதான் உண்மை.
- பிரகாஷ்ராஜ்
http://tamil.thehindu.com/opinion/columns/article24071557.ece?homepage=true
- பிரகாஷ்ராஜ்
http://tamil.thehindu.com/opinion/columns/article24071557.ece?homepage=true
No comments:
Post a Comment