இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Thursday, 28 June 2018

ஆதார் (Aadhar and politics of surveillance )

This or that particular person. ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்ட சூழலில் தனி மனிதனின் நிலை குறித்து சுபஸ்ரீ கிருஷ்ணன் என்ற இயக்குனர் எடுத்த இந்த ஆவணப்படம் சென்னை max mueller bhavan ல் திரையிடப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும் கட்டுரையாளரும் ஆய்வாளருமான உஷா ராமனாதன் அவர்கள் சிறப்புறையாற்றினார். இவர் ஆதாருக்கு எதிராக ஆதாரப் பூர்வமாகவும் தீவிரமாகவும் ஆரம்பத்திலிருந்தே பேசி வருபவர். அதிர்ச்சி அளிக்ககூடிய பல தகவல்களை பகிர்ந்தார். சிறந்த ஆளுமை.

அரசாங்கம் இரத்தமும் சதையுமான பிரக்ஞையுள்ள தன் குடிமக்களை வெறும் எண்களாக மட்டுமே (Bar code) பார்க்கிறது. நமக்களிக்கப்பட்ட ஆதார் அட்டைக்கு எந்த மதிப்புமில்லை. அதிலுள்ள எண்களே நாம். நம் கைரேகையானது நிரந்தரமானதல்ல. காலப்போக்கில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். அதுபோன்றே கண்களிலுள்ள ஒளித்திரையும். இவற்றில் ஏதேனும் சிக்கலென்றால் 'நான்' என்று ஒரு தனி மனிதன் நிரூபிக்க ஏதுமில்லை.

உயிரற்ற மாயக்கோடுகளில் வாழ்கிறோம் நாம். அதுவே நிஜம். நடமாடிக்கொண்டிருக்கும் நாம் நாமல்ல. 'நான்' நானல்ல.

இந்த ஆதார் முறைப்படி ஒரு மனிதனை இரண்டாக்கலாம். போலியாக்கலாம். இல்லாமலாக்கலாம். க்கலாம். லாம். ம்.

Jio sim தொலைந்ததால் duplicate சிம் வாங்க Reliance சென்றிருந்தேன். ஆதார் அட்டையை காட்ட பணியாளர் " அத நீங்களே வச்சிக்கங்க. விரல நீட்டுங்க" என்றார். பதட்டத்துடனேயே சிவப்பு லைட்டில் விரல் வைத்தேன். நல்ல வேளை. நான் இருந்தேன்.

உஷா ராமநாதனின் பேச்சைக் கேட்கையில் முதலில் அதிர்ச்சியும் பிறகு பயமும் பிறகு சோர்வுற்று தனி மனிதனான நான் என் அடையாளத்தை வாழும் உரிமையை தக்கவைக்கவோ பாதுகாக்கவோ செய்வதற்க்கு ஏதுமில்லை என்ற கையறு நிலையில் தளர்ந்திருக்கையில் செய்ய வேண்டிய செயல் திட்டத்தை அவரே வழங்கினார்.

தனி மனிதனின் நலனில் அரசாங்கம் அக்கறை செலுத்த தவறுகையில் அத்தனிமனிதர்கள் கூட்டாக சேர்ந்து அரசாங்கத்திற்கு அதன் கடமையை கற்றுத்தற வேண்டும்.

"The state should learn from its citizens" என்றார்.

ஆதாருக்கெதிரான ஒரு பிரகடணத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சடித்திருந்தார்கள். அரங்கிள் கூடியிருந்த சிறுவர் முதல் அனைவரும் கையொப்பமிட்டார்கள்.

'தமிழ்' படிவத்தில் யானும் எனை காக்க.

**

No comments:

Post a Comment