இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Thursday, 28 June 2018

ஆதார் (Aadhar and politics of surveillance )

This or that particular person. ஆதார் அட்டை கட்டாயமாக்கப்பட்ட சூழலில் தனி மனிதனின் நிலை குறித்து சுபஸ்ரீ கிருஷ்ணன் என்ற இயக்குனர் எடுத்த இந்த ஆவணப்படம் சென்னை max mueller bhavan ல் திரையிடப்பட்டது. டெல்லியைச் சேர்ந்த வழக்கறிஞரும் கட்டுரையாளரும் ஆய்வாளருமான உஷா ராமனாதன் அவர்கள் சிறப்புறையாற்றினார். இவர் ஆதாருக்கு எதிராக ஆதாரப் பூர்வமாகவும் தீவிரமாகவும் ஆரம்பத்திலிருந்தே பேசி வருபவர். அதிர்ச்சி அளிக்ககூடிய பல தகவல்களை பகிர்ந்தார். சிறந்த ஆளுமை.

அரசாங்கம் இரத்தமும் சதையுமான பிரக்ஞையுள்ள தன் குடிமக்களை வெறும் எண்களாக மட்டுமே (Bar code) பார்க்கிறது. நமக்களிக்கப்பட்ட ஆதார் அட்டைக்கு எந்த மதிப்புமில்லை. அதிலுள்ள எண்களே நாம். நம் கைரேகையானது நிரந்தரமானதல்ல. காலப்போக்கில் சிறுசிறு மாற்றங்கள் ஏற்படும். அதுபோன்றே கண்களிலுள்ள ஒளித்திரையும். இவற்றில் ஏதேனும் சிக்கலென்றால் 'நான்' என்று ஒரு தனி மனிதன் நிரூபிக்க ஏதுமில்லை.

உயிரற்ற மாயக்கோடுகளில் வாழ்கிறோம் நாம். அதுவே நிஜம். நடமாடிக்கொண்டிருக்கும் நாம் நாமல்ல. 'நான்' நானல்ல.

இந்த ஆதார் முறைப்படி ஒரு மனிதனை இரண்டாக்கலாம். போலியாக்கலாம். இல்லாமலாக்கலாம். க்கலாம். லாம். ம்.

Jio sim தொலைந்ததால் duplicate சிம் வாங்க Reliance சென்றிருந்தேன். ஆதார் அட்டையை காட்ட பணியாளர் " அத நீங்களே வச்சிக்கங்க. விரல நீட்டுங்க" என்றார். பதட்டத்துடனேயே சிவப்பு லைட்டில் விரல் வைத்தேன். நல்ல வேளை. நான் இருந்தேன்.

உஷா ராமநாதனின் பேச்சைக் கேட்கையில் முதலில் அதிர்ச்சியும் பிறகு பயமும் பிறகு சோர்வுற்று தனி மனிதனான நான் என் அடையாளத்தை வாழும் உரிமையை தக்கவைக்கவோ பாதுகாக்கவோ செய்வதற்க்கு ஏதுமில்லை என்ற கையறு நிலையில் தளர்ந்திருக்கையில் செய்ய வேண்டிய செயல் திட்டத்தை அவரே வழங்கினார்.

தனி மனிதனின் நலனில் அரசாங்கம் அக்கறை செலுத்த தவறுகையில் அத்தனிமனிதர்கள் கூட்டாக சேர்ந்து அரசாங்கத்திற்கு அதன் கடமையை கற்றுத்தற வேண்டும்.

"The state should learn from its citizens" என்றார்.

ஆதாருக்கெதிரான ஒரு பிரகடணத்தை ஆங்கிலத்திலும் தமிழிலும் அச்சடித்திருந்தார்கள். அரங்கிள் கூடியிருந்த சிறுவர் முதல் அனைவரும் கையொப்பமிட்டார்கள்.

'தமிழ்' படிவத்தில் யானும் எனை காக்க.

**

Saturday, 23 June 2018

The unbearable being of lightness

Documentary film

The unbearable being of lightness. Documentary film by Ramachandra PN on Rohit vemula's suicide note and the protest by the students then.

ரோஹித் வெமுலாவின் தற்கொலைக் குறிப்பை பின்னணியாகக் கொண்டு பூனே திரைப்படக் கல்லூரியைச் சேர்ந்த இராமச்சந்திரா PN எடுத்த ஆவணப்படம் நேற்று மாலை டிஸ்கவரி புத்தக நிலையத்தில் திரையிடப்பட்டது.

ஆனந்த் பட்வர்த்தன் முதலியோரின் ஆவணப்பட மொழியிலிருந்து மாறுபட்ட திரைமொழியுடன் திகழ்ந்த இது போன்ற படங்களை புரிந்து கொள்ள நேற்று அஜயன் பாலா அருண்மொழி உள்ளிட்டோருடன்  நடந்த கலந்துரையாடலில் விவாதிக்கப்பட்டதைப் போன்று நிச்சயம் பார்வையாளர்களுக்கு முறையான பயிற்சி வேண்டும்.

ஆசான் பாலுமகேந்திரா தொடர்ந்து வழியுறுத்தியதைப் போல நம் பள்ளிகளில் திரைப்பட அவதானிப்பிற்கென்று ஒரு பாடப்பிரிவை அமைக்க வேண்டும்.

இது போன்ற படங்கள் திரைப்பட விழாக்களில் பங்குபெற தணிக்கைச் சான்றிதழ் பெற வேண்டும். அத்துறை படைப்பாளிகளுக்கு அளிக்கும் சுதந்திரம் நாம் அறிந்ததே. தனிக்கையைத் தவிர்த்து ஜான் அப்ரகாமின் அக்ரகாரத்தில் கழுதை' யைப் போல ஊர் ஊராக சென்று திரையிட்டு வருகிறார் இராமச்சந்திரா.

நெகட்டிவ்வில் படமெடுத்த காலக்கட்டங்களில் processing கிற்கே தணிக்கை  சான்றிதழ் பெற்றாக வேண்டிய நிலை இருந்தது. மக்களிடம் இது போன்ற கருத்தாக்கங்கள் சென்று சேறுவதே அடிப்படை தேவையாகையால் டிஜிட்டல் தொழில் நுட்பத்திற்கு நன்றி.

***

Saturday, 16 June 2018

சாதி

தமிழ் சமூகத்திலிருந்து சாதியை ஒழிக்க நாம் செய்ய வேண்டியது என்ன. தருமபுரி சம்பவம், இளவரசன், கோகுல்ராஜ், சுகன்யா பூபதி, சங்கர் கௌசல்யா தற்போது கச்சநத்தம் என தொடரும் இந்த சாதிய வன்முறைகளும் அதையொட்டி அந்நேரம் நடக்கும் கண்டனக் கூட்டங்களும் என நீளும் இப்பிரச்சனை எப்போது தீரும். தெரியாது. ஆனால் இது போன்ற கண்டனக் கூக்குரல்களால் ஆக்ரோஷமான மேடை நிகழ்வுகளால் மட்டுமே பெரும்மாற்றம் நிகழ்ந்துவிடாது. வரலாறும் அதுவே.

உண்மையான மாற்றம் உடனடியாக நிகழ்வது சாத்தியமற்றது. இரு தலைமுறைகளுக்கு பின்பாவது சிறு மாற்றம் நிகழ வேண்டுமாயின் நம் பிள்ளைகளின் கல்வியில் துவங்க வேண்டும். அதை விட முக்கியம் நம் வீடுகளில் சாதி கேள்விக்குட்படுத்தப்பட வேண்டும். நான் செய்கிறேன். என் வீட்டிலுள்ளவர்களின் பன்புகள் எவை. சாதி மதம் போன்ற கருத்தியல் பற்றிய அவர்களின் பார்வை எவ்வாறுள்ளது. சகமனிதனை மனித மாண்போடு நோக்கும் நேசிக்கும் தன்மை வாய்ந்தவர்களா அவர்கள் என்பதை கவணிக்க வேண்டும.வீட்டிற்குள் வந்தவர் தாழ்த்தப்பட்டவர் எனத் தெரிகையில் அவர்களின் பேச்சிலோ உபசரிப்பிலோ உடல் மொழியிலோ ஏற்படும் சிறு கீறலை நாம் கவணிக்கத் தவறிணோமாயின் பிறகு இச்சமூகத்தில் நாம் செய்வதற்கு ஏதுமில்லை.

நம் வீட்டாரிடம் உறவினரிடம் சந்திக்கும் நண்பர்களிடம் தொடர்ந்து இது சார்ந்து பேசவேண்டும். தாழ்த்தப்பட்டோரே அவர்கள் உரிமைக்காக போராடியது போதும். இனி அம்பேத்கர்கள் ஆணவக்குடிகளிலிருந்து உருவாக வேண்டும்.

மனித மாண்பை நம் பிள்ளைகளுக்கு பயிற்றுவிக்கத் தேவையில்லை. வாழ்ந்து காட்டினாலே போதும். பார்த்துப் பயிலும் ஆற்றல் மிக்கவர்கள் குழந்தைகள். தன்னால் வளர்வார்கள்.

முதலில் நம் வீட்டை மாற்றுவோம். நாடு தன்னால் மாறும்.
சரி. நாடுன்னா.. அந்த கத அப்பால..

***

Tuesday, 5 June 2018

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்டெர்லைட் ஆளையை எதிர்த்தோம். கடும் போராட்டத்திற்குப் பிறகு உயிர்பலி கொடுத்து இதோ மூடியுள்ளோம். அது நிரந்தரமா என்னும் சந்தேகம் ஒருபுறமிருக்க நம்மை சூழ்ந்துள்ள எல்லா பிரச்சனைகளையும் உணர்வெழுச்சியில் மட்டும் எதிர்க்கிறோமா அல்லது அறிவியல் கண்கொண்டு புரிந்து கொள்கிறோமா என்பதை யோசிக்க வேண்டும்.

தூத்துக்குடி மக்களை சூழ்ந்துள்ள சுகாதாரக் கேடுகள் என்னென்ன? மூடிய ஆளையோடு எல்லா பிரச்சனைகளும் முடிந்ததா? சூழலியல் ஆய்வை மேற்கொண்டு வரும் இந்த இளைஞர்கள் சமகால அரசியலை அறிவியல் ரீதியில் அணுகுவது போற்றுதற்குறியது.

இவர்களின் ஆய்வில் வெளிப்படும் அதிர்ச்சிகரமான தகவல்கள்.. மறைக்கப்பட்ட உண்மைகள்..

Welcome boys. You guys are really rocking. We salute.

***https://youtu.be/ZqG90jzu2QE

Religious Fundamentalism

For the attention of our religious fundamentalists regardless of whatever religion they belong to. This article analyze the religious minds scientifically.

Scientists have established a link between brain damage and religious fundamentalism.
A study published in the journal Neuropsychologia has shown that religious fundamentalism is, in part, the result of a functional impairment in a brain region known as the prefrontal cortex. The findings suggest that damage to particular areas of the prefrontal cortex indirectly promotes religious fundamentalism by diminishing cognitive flexibility and openness—a psychology term that describes a personality trait which involves dimensions like curiosity, creativity, and open-mindedness.

I think this is the right time to be aware of it in this so called country, INDIA.


https://www.rawstory.com/2018/03/scientists-established-link-brain-damage-religious-fundamentalism/#.WqvOi6NG73w.facebook

Sunday, 3 June 2018

அது மரணம் இல்லை. கருத்துச் சுதந்திரத்துக்கு எதிராக நடந்த படுகொலை. மரணமா இருந்தா கடந்துவந்துட முடியும். கொலையைப் பார்த்துட்டு எப்படி வர முடியும்? கௌரி லங்கேஷ், துணிச்சலும் சமூக அக்கறையும் கொண்ட நேர்மையான பத்திரிகையாளர். மதவாத சக்திகளைத் துணிச்சலாக விமர்சனம் செய்ததற்காகவே கெளரியை வீட்டு வாசலில் வெச்சு சுட்டுக் கொன்னாங்க. கெளரியோட மரணத்தை என் கையில் தூக்கிச் சுமந்து சவக்குழியில் இறக்கி வெச்சிருக்கேன். கௌரியோட அப்பா, என் குருநாதன் லங்கேஷைப் புதைக்கும்போது அவருக்குப் பிடிச்ச ‘ஸ்டெபிக்ராஃப்’ போட்டோவையும் ஒரு பாட்டில் ரம்மையும் சேர்த்துப் புதைச்சோம். செத்துப்போனவருக்கு இதெல்லாம் போய்ச் சேராதுனு அறிவுக்குத் தெரியும். அது நிறைவான மரணம். ஆனா, கௌரியோட உடலை சவக்குழியில் இறக்கி வைக்கும்போது என் உடம்பும் மனசும் சேர்ந்து நடுங்குது. எங்க அழுகைக்கு நடுவுல அவளைச் சுட்டுக் கொன்னவங்களோட சிரிப்பும் கேட்குது. கௌரியோட சாவைவிட, அவங்களோட கொண்டாட்டம் பயத்தைத் தருது. ‘இதையெல்லாம் அமைதியா வேடிக்கைப் பார்க்கப் போறோமா?’ங்கிற கேள்வி நெஞ்சை அறுக்குது. அந்த வினாடிதான், அவளைப் பொதைக்கலை... விதைக்கிறோம்னு புரிஞ்சிக்கிட்டேன். இந்த உணர்வு எனக்கு மட்டுமில்லை. கௌரியோட இறுதிஊர்வலத்துல கலந்துகிட்ட ஒவ்வொருத்தருக்கும் இருந்துச்சு. கௌரி சாவுக்குப் பதில் கேட்கிறதின் மூலம், என் வாழ்வுக்கும் கருத்துச் சுதந்திரத்தை ஆதரிக்கிற அத்தனை பேருக்கும் பாதுகாப்பு தேடுறேங்கிறதுதான் உண்மை.

- பிரகாஷ்ராஜ்

http://tamil.thehindu.com/opinion/columns/article24071557.ece?homepage=true
தமிழர் மேல் இந்திய அரசாங்கம் தொடுக்கும் இந்த இன அழிப்புப் போரை நாம் எதிர்த்து வரும் அதே சமயம் நம்முள் நிகழ்ந்து கொண்டிருக்கும் சாதிய ஏற்றத்தாழ்வுகளையும அதன்பால் செய்யப்படும் வன்கொலைகளையும் கண்டித்தாக வேண்டியுள்ளது. ஒன்றிணைவோம்.

**