தங்கைக்கு.
மண்ணிப்புக் கடிதம்.
இம்மண்ணில் பிறக்கும் எல்லா மனித உயிர்களும் மகத்தானவைகளே. வளரும் சூழலும் வாழும் முறையுமே தனியொருவனின்/ ஒருத்தியின் ஆளுமையை கட்டமைக்கிறது. அவ்வகையில் தங்கள் வாழ்வின் வளர்சிதை மாற்றங்களுக்கு பெற்றோர் மற்றும் அண்ணன் முதல் காரணமாகிறார்கள்.
அதற்காக முதலில் மண்ணிப்பு கேட்கிறேன்.
வேலு நாச்சியார் கன்னகி போன்ற வீர மங்கையரையும் ஔவை முதலிய ஞானமிகு பெண்களையும் போற்றிப் புகளும் பாரம்பரியமிக்க இம்மண் ஆணாதிக்கக் கூடமாகவும் விளங்குவது வருந்தத்தக்கது.
சிறுவயது முதல் தாங்கள் அணுபவித்து வந்த உளச்சிக்கலை என் தோழி மூலம் அறிந்தேன். அதற்காக ஆண்கள் சார்பாக வெட்கித் தலை குனிகிறேன்.
பல்துறைகளில் சாதித்து வரும் பெண்களை பார்க்கும் பொழுது தங்களின் தனித்திறமையை கண்டறிந்து அதில் பயிற்சியளித்து தன் மகழின் ஆளுமையை வாழ்வை மகிழ்ச்சிகரமானதாக ஆக்கத்தவறிய தங்கள் தகப்பனை( வயோதிகம் காரணமாக ) மண்ணிக்க வேண்டுகிறேன்.
ஆக, உங்கள் வாழ்க்கையில் இன்று நீங்கள் வளர்ந்து நிற்கும் இடத்திற்க்கு காரணம் தங்கள் தாயைத்தவிற வேறொருவருமில்லை. அதற்காக அவர் பாதம் பணிகிறேன்.
நடந்தவை நடந்தவையாக - இனி
நடப்பவை நல்லவையாக வேண்டுகிறேன் வாழ்த்துகிறேன்.
தங்களுள் புதைந்துள்ள ஆற்றலை வெளிக்கொனற புதுப்பொழிவுடனும் உத்வேகத்துடனும் தாங்கள் செயல்பட வருங்காலம் வசந்தமாக
யாமும் யம்மைச் சார்ந்தோரும் இனியெப்போதும் உறுதுணையாக இருப்போமென உறுதியளிக்கிறேன்.
இனியொரு தடையுமில்லை
இருளுள் பிரவேசிக்கும் ஒளி
அருள் கூடி அன்பும் கூடி - தங்கள்
வாழ்வின் பண்பும் பயனும் பெற
திரு அண்ணாமலையில் புது வாழ்க்கை கா(ய்)த்திருக்கிறது. கனியாக கரம் சேருங்கள். கவி பாடுங்கள்.
தங்கள் பாடலுக்கு செவி சாய்க்க காத்திருக்கிறோம்.
இனி எல்லாம் சுகமே..!
நன்றி.
***
அந்த அண்ணன் இக்கடிதம் எழுதி நான்கு மாதம் கழித்து பின்னொரு நாள் அத்தந்தை இறந்து போனார்.
அதற்கு முன் இரவு பேசவும் முடியாது உடல் செயலற்று படுக்கையிலே சிறுநீர் கழித்தவாறு படுத்துக்கிடந்த அந்த இரவு தன் மனைவியும் மகழும் சிலரும் மட்டுமே சுற்றி நிற்க மகனை எதிர்பார்த்தவாறு காத்துக்கிடந்த அக்கண்கள் ஏதோ சொல்ல தவிக்கின்றன.
சுற்றி நிற்போர்க்கு ஏதும் புரியாது ஏதேதோ கேட்கிறார்கள்.
' தண்ணி வேனுமா..'
' வலிக்குதா..'
மங்களாய் தெரியும் ஒற்றைக்கண் பார்வை எதையோ யாரையோ தேடுகிறது.
உள் அறையை நோக்கியவாறு கண்களும் புருவங்களும் துடித்தவாறு
'பீ..பீ..'
என ஏதோ சொல்லத் தவிக்க
மனைவி அருகில் வந்து
'என்ன வேனும்..'
'பீ...பீயோ..'
'என்ன..பிஸ்கேட்டா..'
எடுக்க ஓடுகிறார்கள்.
'இ..ஈய..'
பிஸ்கட் ஊட்ட முற்படுகிறார் மனைவி.
உதறித்தள்ளிவிட அதை வாங்கி மகள் ஊட்ட முயற்சிக்க அவளை வெறித்தபடி
கசிகின்றன கண்கள்.
திடுமென உள்ளே பார்வையை சுழற்றி
'பீயோ..' என பிதற்ற
'பீரோவா..'
மனைவி கேட்க கண்கள் விரிகிறது.
பாதி பாரம் இறக்கி வைத்த திருப்தி.
'பீரோல என்ன..' மகள் கேட்க
'டை..டையீ..'
'டைரியா..'
'ஆ..ஆங்..' என மகளை சுட்டும் விரல்.
எடுத்து வர ஓடுகிறார்கள். மகளுக்கு தரச்சொல்லி மனைவியிடம் சைகை செய்ய
'இப்ப ரொம்ப முக்கியமா..'
மனைவி சலித்துக்கொள்ள
ஆ..ஆ.. ஓலம் மேலெள மகளைப்பார்த்தவாறு மயங்கிவிடுகிறார்.
பின் ஊரிலிருந்து மகன் வர நினைவு திரும்பியவராய் அவனிடமும் ஏதோ சொல்ல அருகே அழைக்கிறார். வழக்கம் போல் அவன் விரைப்பாகவே நிற்கிறான்.
தன் உணர்வை வெழிப்படுத்த முடியாத ஏக்கத்துடனும் ஏதோ குற்றவுணர்வுடனுமே நினைவிழந்து போனவர் அடுத்த நாள் நீண்ட தூரப்பயணத்திற்குப் பின் மருத்துவமனையில் மரணித்தார்.
பதினொரு நாட்கள் கழித்து காரியம் முடிந்து உற்றார் உறவினரெனும் மாயை அனைத்தும் மறைந்த பின் வெருமை சூழ் வீட்டினுள் அம்மாவும் மகளும் மாலை அணிவித்த அப்பாவின் சிரித்த படத்தின் முன்பு செயலற்றவர்களாய் அமர்ந்திருக்க முட்டி மோதி வந்து மாலையிட்டு தங்கள் இருப்பை பதிவு செய்து காணாமல் போன பலர் போலல்லாது உண்மையாய் ஆருதல் தேவைப்படும் சமயம் தாமாக தேடி வந்த சிலருள் ஒருவர்
'இப்டியே ஒக்காந்துனு கெடந்தா ஆகுமா. ஆக வேண்டிய வேலய கவணிங்கமா.. அந்த மனுஷன் ஆசப்பட்டத எல்லாம் நெறவேத்தனும். அப்ப தான் அந்த ஆத்மா சாந்தி அடையும். எழுமா..எழுந்துரு..'
மெல்ல இயல்பு நிலைக்கு திரும்ப முயற்சிக்கிறது வீடு.
ஏதோ எடுக்க பீரோவை திறக்கும் அம்மா நினைவுற்றவராய்
'ஆமா அன்னைக்கி இவ கிட்ட கொடுக்க சொல்லி எதோ சொல்ல வந்தாரே..'
என பழைய டைரியை எடுத்து திறக்க.. அதில் எப்போதோ வைத்த ஆயிரம் ரூபாய் நோட்டுகள் சலவை செய்தாற்போல் இருக்க
இனம்புரியா உணர்வால் உள்ளம் நிறைந்தவராக கண்ணீர் மல்க தன் மகளை அழைத்து காட்டுகிறார்.
' இங்க பாருடி.. இதத்தான் அன்னைக்கி உங்கிட்ட தரச்சொல்லி சைக காட்டிருக்குது உங்கப்பா..'
அதைப் பார்த்ததும் உடைந்தவள் ஓடிச்சென்று
தந்தையின் உருவ படத்தின் முன் தளர்ந்து சரிய கண்கள் வழிகிறது.
**
ஒரு மாதம் கழிந்தும் வீட்டின் இருக்கம் கலையவில்லை.
உதகை செல்ல இருவரையும் ஆயத்தமாகச்சொல்லி அலைபேசுகிறான் அண்ணன்.
தந்தையின் படத்திற்கு செம்பருத்தி பூக்கள் வைத்து விளக்கேற்றிக் கொண்டிருக்கிப்பவள் எத்தயக்கமும் இல்லாமல் நிதானத்துடன் சொல்கிறாள்
' வீட்ல அப்பாவ தனியா விட்டுட்டு நாம மட்டும் எப்டிணா போறது..'
அதுவரையில் சலனமுற்று எரிந்து கொண்டிருந்த தீப ஒளி சட்டென நிலைத்து பிரகாசிக்க அச்சோதி வழி மேலெழும்பிச் செல்கிறது ஏதோவொன்று.
****
No comments:
Post a Comment