இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 6 August 2017

நேசம் போர்த்திய படுக்கை

பல நாள் கைப்பேசி நண்பர்
ஒரு நாள் எனைத்தேடி வர
இடுக்கு அறையில்
ஒற்றைப் பாயில்
ஒடுங்கிப் படுத்து
நண்பருக்கு நான்  வழி செய்ய
பக்கத்து சுவரில்
பல்லியாய் ஒட்டிக் கொண்டார் நண்பர்.
தூக்கமிழந்து
களைத்த  காலை
மடித்து வைத்த
கலையாத பாயில்     
நேசம் மட்டுமே
நிம்மதியாக உறங்கிக் கிடந்தது.

            ***

No comments:

Post a Comment