இக்கதையின் துவக்கம் முதல் இறுதி வரையிலுமான எழுத்தாளரின் கதை சொல்லும் ஆளுமையைக் கண்டு மெய் சிலிர்த்துப் போனேன். ஒரு யுத்த பூமியில், ஒரு சாமான்யனின் வாழ்வை, ரணத்தை இவ்வளவு அநாயசமாக பகடியுடன் கூறிய வேறெந்த கதையையும் நான் வாசித்ததில்லை. இக்கதையை முன் வைத்து 'தகவல் பிழை' என்றெல்லாம் சிலர் இணையத்தில் விவாதித்துக் கொண்டிருப்பதாக நண்பர் கூறினார். அது உண்மையே ஆயினும் அவர்களுக்கு என் குருநாதர் திரு. பாலு மகேந்திரா, அவர்கள் கலையை அணுகும் விதத்தை எங்களுக்கு கற்றுக் கொடுத்ததை தெரிவிக்க விரும்புகிறேன்.
" ஒரு படத்தப் பாத்தயினா அது ஒன் மனசுக்குள்ள போய் என்ன
பண்ணுதுன்னு தாண்டா பாக்கணும். சினிமா மொழி, குறியீடு, படிமம், கத சொல்றவனோட அறிவு, அது இதுன்னு மத்ததெதுவும் தேவ இல்லடா. "
எவ்வளவு அறிவாளித்தனமாக கதை கூறியிருந்தாலும், "சோ வாட்..?" என்று அதை வெகு சாதாரணமாக நிராகரித்து விடுவார்.
" மனசத் தொடனும்டா அதான் கலை."
அப்பெரியவரின் வாழ்வை முன்வைத்து ஒரு வரலாற்றை பதிவு செய்திருக்கிறார் கதாசிரியர்.
கதைத்த விதத்தைக் கொண்டு பார்த்தால் ஒரு கலைஞனாக, மனிதனாக தன் சக மனிதன் படும் துன்பத்தையும், துயரையும் கண்டு தன்னுள் எழும்
உணர்வுகளை சமநிலை தவறாமல் கலைஞனுக்குரிய நுட்பத்துடன் அணுகியுள்ளது தெரிய வருகிறது.
கடுந்துயர் வாட்டுமிடத்து அப்பெரியவரின் செயல்பாடுகள் நம்மை நகைக்க வைக்கும் அத்தருணத்திலும்
நம் கன்னம் நனைவதை யாரும் மறுக்க இயலாது.
அவ்வகையில் காலத்தால் அழிக்கவியலா உலக இலக்கிய வரிசையில் இடம் பிடிக்கிறது இக்கதை.
****

No comments:
Post a Comment