இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Thursday, 8 December 2011

..ப்ச்..

 பாலு சார வச்சி 'SCRIPT' எழுதிட்டிருக்கும் போது அவருக்கு EYE CHECK UP பண்ண போனா
CATARACT . நான் ஒடஞ்சே  போனேன். மனுஷன் தளர்ந்துட்டாரே. இவர நாம கலர் கலரா யோசிச்சி வச்சிருக்கோமே. Again the Oscillation starts as usual.

'Road script' - க்கு தாவிடுவோமா ?

 ராஜா கேட்ட கேள்வி ஞாபகத்துக்கு வருது.

" நீங்க யேன் Script - அ ரெண்டு நாளைக்கு ஒருவாட்டி மாத்தறீங்க? " 

" 'தெர்ல'யே ராஜா..! "

எதுலயும் நெலைக்கவே முடியலே. 30 th வேனுவோட பிறந்த
நாளன்னைக்கு 'Tidel park' Road - ல Stills எடுத்துட்டிருந்தப்ப ( அவர இல்ல. ரோட்ட.!) Night Duty முடிஞ்சி வந்தவர  வழியிலேயே வாழ்த்திட்டு  போட்டா புடிச்சேன்.( ரோட்ட.!!)

அவரு கேட்டாரு..

" என்ன.. ரோட்ல..? "


" ஏனோ 'தெர்ல ' வேணு.. Road - ல தான் Comfort - ஆ Feel - பண்றேன். ஒரு எடத்துல என்னால இருக்க முடியறதில்ல.எப்பவோ வசந்த்தோட 'Train Travel ' பண்ணப்போ அவன் கிட்டே இதையே சொன்னேன்.

" Movement - ல ஒவ்வொரு Moment - ம் மாறிட்டே இருக்கறதால அடுத்தடுத்த Scenerio, Fresh - ஆவே பதியும் கண்ணுலேயும்,மனுசலேயும். ' BEING IN PRESENT ', Thoughts - க்கு வேலையே இருக்காது."

இதுவாவும் இருக்கலாம். இல்ல தொடர்ந்து ஒரு நெலையில இருந்தா வர்ற பயந்தான் காரணமா? 'தெர்ல'. ஆனா யார் என்ன சொன்னாலும் பாலு சார் கிட்ட இருந்து அவர அருகாமையில பாத்ததில ஏதோ புரிஞ்சிகிட்டேனோ என்னவோ 'தெர்ல'..

அவர பத்தின அந்த Script -ல பரவசமாயிட்டேன்.

But, ராஜா கேட்டாரு..

" பரவசத்த Express பண்ணிட்டீங்கனா அத எப்படி
'Observe' பண்ணுவீங்க? "

" 'Express'  பன்றோம்கற 'Awareness' இருக்கும்."

எம்.டி.முத்துகுமாரசாமி, ' பயித்தியக்காரத்தனத்துக்கும் அறிவாளித்தனத்துக்கும் நடுவுல ஊசலாடும் போதுதான் கலையும் எழுத்தும் பிறக்கும்'- ன்னு  எழுதியிருந்தாரு.

ராஜா எனக்கு அப்படி நேர்ந்திருக்கான்னு கேட்டப்ப..
பாலு சார் Script - ல 'Oedipus Complex'  எழுதின அனுபவத்தச் சொன்னேன்.

" எழுத ஒக்காரும்போது அந்த 'Idea' - வே  இல்ல. ஆனா அது அமைஞ்சது. இது MDMK சொல்றமாதிரியான்னு 'தெர்ல.."

" தெரியலேன்னா.. 'Watch' பண்ணலையா? "

சில நேரங்கள்ல, 'Breath Watch' பண்றேன்னு அவர் சொல்லும் போதெல்லாம் நமக்கு சங்கடமாத்தான் இருக்கும்.
(Unusual Mask like appearance in contrast to usual hyperexpressiveness.) But.. He is a Gem.

So, அன்னைக்கு வேலையெல்லாம்( வீட்டுக்கு Tablets - அ courier பண்ணி..) ஒரு வழியா முடிச்சி ரூமுக்கு வந்தேன் களைப்பா.

 கொஞ்சங்கூட சுவாரஸ்யமே இல்லாம பிறந்த நாளன்னைக்கு ஜடம் மாதிரி தாடிய  சொறிஞ்சிக்கிட்டு ஒக்காந்திருந்தாரு  வேணு.

கொஞ்ச நேரங்கழிச்சி...

அவர் சிரிச்சாரு. நானும் சிரிச்சேன்.

                                                                 ***

இந்த கலியுகத்துல அனுதினமும் சுட்டெறிக்கற சென்ன மாப்பட்டணத்துல விதியேன்னு வேல செஞ்சி
அலையிற லட்சோப லட்ச  மக்க கூட்டத்துல நாம எதுக்கு ஓடறோம் என்ன பண்றோம்கற  ஒரு யளவும் 'தெரியாத' மூணு ஜீவனுங்க ஒண்ணா குடும்பம் நடத்துதுங்க. தெச மாறி இருக்கற செருப்புகளப் பாத்து ராஜா வர்ற நேரத்த கணிச்சிகிட்டு ஒக்காந்திகினு இருக்குதுங்க ரெண்டு.

மூணு ஆஷ்பத்திரிகள்ள  ரெண்டு பேரு
வேல செய்யிறானுவோ. ஒருத்தன் அங்க போனா இன்னொருத்தன் இங்க வர்றான். இவன் அங்க போனா அவன் வேற எங்கயோ  போறான். திடீர்னு ரெண்டு பேரும் கூடி பெசிக்கறானுவோ,

 " மச்சி நான் நாளைக்கு இங்க பாத்துக்கறேன்.
நீ அங்க பாத்துக்க.' நான் இங்க வந்தப்பறம் நீ அங்க போவியாம்."

தன் கண்ணெதிரே நடக்கற இந்த மானுட விளையாட்டுங்க  எதுவும் 'புரியாம' தான் பண்றதும் என்னான்னு 'தெரியாத' குழப்பத்துல  சினிமா எடுக்கறேன்னு திரிஞ்சிகினு இருக்கறான் இன்னொருத்தன். 'Road Script'- ஆ? கோமாளியா? பாலு மகேந்திராவா? 'Crime & Punishment' - ஆ? எதுன்னு முடிவெடுக்க முடியாத நெலையில.. கெடச்ச கேப்புல தம்மபதம், Dostevesky -ன்னு  பிட்டு பிட்டா படிச்சிபுட்டு எதையோ புரிஞ்சிகிட்டாப்புல லைட்டயே உத்து உத்து பாத்துகிட்டு இழுத்து இழுத்து  மூச்ச உள்ளயும் வெளியயும் வுட்டு, நிதானப் பட்டுட்டோம்டான்னு நோட்டெடுத்து
குறுக்கும் நெடுக்குமா நடந்தாப்ல 'Scene' எழுதன திருப்தியில பாய விறிச்சி, Economy - ல A/C போட்டு நண்பர்கள் இல்லாத சுதந்தரத்துல ரெண்டு காலையும் ரெண்டு, கையையும் விறிச்சி
மல்லாக்க படுத்து   எப்டியோ இன்னைக்கு ஒரு வழியா 'ONE DAY MATCH '- ஆடி முடிச்ச திருப்தியில தூங்கப் போறான், தன் பேர 'ஆதவன்', 'கரிகாலன்',' மாமல்லன்'னு மாத்த நெனெச்சி எழுதி பாக்குற கேப்புல அந்த பேர்ல ஒரு சினிமாவே  ரிலீஸ் ஆவுற சூட்சுமம் 'அறியாத' தன் வாழ்க்க  'HIGH SPEED ' -க்கு ( 500 f/s ) மாறி பல வருஷமானத தன் நண்பன் பல வாட்டி போன் போட்டு சொல்லியும் 'புரியாத' புதிரான.. பசுபதி.

இவ்வளவு அளப்பறைக்கு அப்பறமும் ஒரு கேள்வி மட்டும் தொக்கி நிக்குது.

" இதெல்லாம் எதுக்கு..? "

உன்னியும் ஒரு நாப்பது வருஷம் கழிச்சி இதே கேள்விய கேட்டீங்கனாலும் நான் தோள்  குலுக்கி ஒதடு  பிதுக்கி தெளிவா சொல்வேன்...

" ....ப்ச்....?! "

                                                                    ***

No comments:

Post a Comment