இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Sunday, 25 December 2011

" தாகம் மெய்யெனில் தண்ணீர் உன்னை அடையும்..!"

[ 'தமிழரின் சினிமா - காலத்தை மொழிகிற கதைகள்' ,என்ற தலைப்பில்,'காட்சிப்பிழை திரை' (டிசம்பர்' 2011) - தமிழ் திரைப்பட ஆய்விதழில் தங்கவேலவன் எழுதிய கட்டுரைக்கான மதிப்புரை.]

     'FIRSTISM' - என்ற புதியதோர் மெய்ஞான தத்துவ மரபொன்றை..! அறிமுகப்படுத்தி அதன் மூலம் கலைஞனின் அகந்தையொழித்தலின் அவசியத்தை உணர்த்திய அவ்வகத்தை அவர் வழியிலேயே ஆராய்கையில் பலகாலம் தான் கற்ற பெற்றவற்றைக் கொண்டு கலைஞனுக்குத் தேவையான சரித்திரப் பிரக்ஞை, தன் விழிப்பு, மதிப்பீட்டு நுண்மை மற்றும் குணங்களை.. உள்ளுள் ஊறவிட்டு அதன் பலங்களையும் பிழைகளையும் கருத்தில் கொண்டு ஆழ்ந்தாராய்ந்த பின்னரே இவ்வகம் வந்தடைந்த இடமிதென்பது தெளிவுறுகிறது.

        'FIRSTISM'.. 'FASCISM'.. என வி(இ)சங்கள் பல உழன்று வரும் காலத்தில் 'அறம்' ஒன்றே தன்னிசமாக, தன்வசமாக வாழ விழைபவன்.. அதை மீறும் நெருக்கடி ஏற்படின், 'ரஸவாதம்' தெரிந்திருந்தும் வெறும் 'ரசம்' உண்டு வீழ்வேனாயினும் அவ் வி(இ)சங்கள் கொண்டு வாழேனெனும் மிடுக்கு தெரித்தியங்கும் அகமிதாகப் படுகிறது.
  
      "அதெல்லாஞ்செரி.. இம்முட்டையும்  உள்வாங்கி பாத்து பாத்து படம் எடுக்கறது அவ்ளோ ஈசியா என்ன ?"

      " தாகம் மெய்யெனில் தண்ணீர் உன்னை அடையும்..!"
                                                                                                                             
        வாழ்த்துகள்.


                                                       ****

No comments:

Post a Comment