இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Tuesday, 4 February 2020

நிரபராதிகளின் காலம்


'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல ?!'

ஸீக்ஃப்ரீட் லென்ஸ் என்னும் ஜெர்மன் எழுத்தாளர் நாடகாசிரியர் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இட்லரின் இனப்படுகொலையை கண்டும் காணாதது போல் கடந்து போன ஜெர்மன் குடிமகக்கள் ஒவ்வொருவரின் மனசாட்சியை சீண்டும் விதமாக பல படைப்புகளை எழுதியவர்.

'நிரபராதிகளின் காலம்' என்கிற இந்நாடகத்தில் அவரெழுப்பும் இரு கேள்விகள் :

1. பொதுக் குற்றம் என்று ஒன்று உள்ளதா ?

2. ஒரு குற்றம் நடக்க வேண்டும் என்று ஒருவன் மனதால் விரும்பி, அவ்வாறான குற்றம் நிகழும்போது, அதில் நேரடியாக எந்தப் பங்கும் கொள்ளாத ஒருவன் குற்றவாளியா, இல்லையா ?

மனிதன் எந்தச் சூழலில் குற்றவாளி ஆகிறான். தனிமனிதக் குற்றம் அல்லது சமூகத்திற்கே பொதுவான பொதுக் குற்றம் (Collective Guilt) எவ்வாறு தோன்றிச் செயல்படுகிறது என்பதே லென்ஸ் படைப்புகளின் பொதுப்பன்பு என்கிறார்
மெழிபெயர்ப்பாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி .

சர்வாதிகார ஆட்சியின் குற்றங்களுக்கும் சாமானியர்களுக்கும் எவ்வாறான தவிர்க்க முடியாத தொடர்புகள் ஏற்படுகின்றன, அந்நிலையில் அவர்கள் எந்த அளவுக்கு தாங்களாகவே முன்வந்து சர்வாதிகாரத்துடன் ஒத்துழைக்கிறார்கள் போன்றவற்றை அலசுகிறார் லென்ஸ். இடம் காலம் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லாத இந்நாடகம் எக்காலத்திற்கும் எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொருந்தும்.

No comments:

Post a Comment