இன்னா தம்ம இவ் வுலகம்;

இனிய காண்க இதன் இயல்புணர்ந் தோரே.


( பக்குடுக்கை நன்கணியார்)



சாதலும் புதுவது அன்றே ; வாழ்தல்

இனிதென மகிழ்ந்தன்றும் இலமே.

(கணியன் பூங்குன்றன்)


Friday, 28 February 2020

கன்னிமாடம்

அம்பேத்கர்கள் இனி ஆணவக்குடிகளில் உருவாக வேண்டும். மராத்தியில் 'சாய்ராட்', இந்தியில், 'ஆர்டிகல் 15' தமிழில் 'பரியேறும் பெருமாள்', 'மனுஷங்கடா', 'அசுரன்' வரிசையில் தற்போது 'கன்னி மாடம்' !.

கலைஞனின் அறம் எத்தகையது என்பதிலிருந்து உருவாகிறது ஒரு படைப்பு. இப்படத்தின் இயக்குநர் போஸ் வெங்கட் தன் படத்தின் விளம்பரமாக பெரியார் அம்பேத்கர் இருவரின் படங்களுக்கு நடுவே 'சாதிகள் இல்லையடி பாப்பா' என எழுதி ஒரு பிரபலமான நாளிதழில் கொடுத்திருக்கிறார். அவர்கள் அதை வெளியிட மறுத்திருக்கிறார்கள்.  வெளியிடா விட்டால் மெரினாவில் அமர்ந்து போராடுவேன் என்றதும் பிறகு ஏற்றுக் கொண்டிருக்கிறார்கள். இது தான் அறம்.

இப்படத்தை பார்த்து இளகி இதை எப்படியாவது மக்களிடம் கொண்டு செல்ல வேண்டுமென தவித்த எழுத்தாளர் அகர முதல்வன் சக எழுத்தாளர்கள் கலைஞர்கள் விமர்சகர்கள் செயல்பாட்டாளர்கள் என அனைவரையும் அழைத்து நேற்றிரவு ஒரு காட்சி ஏற்பாடு செய்திருந்தார். பார்த்தபின் இது அவர்கள் அனைவரின் படமாகிப் போனது. இது அகரமுதல்வனின் அறம்.

மதப்பித்து மூர்க்கமாக கோலோச்சி வரும் இந்நாட்களில் சாதிக்கெதிரான காத்திரமான படைப்பு கன்னி மாடம்.அதனோடு மனித உறவுகளில் வெவ்வேறு சாத்தியங்களை நிகழ்த்திக் காட்டுயிருக்கும் படமும் கூட. சமன்குலைந்த இவ்வுலகத்தை சமன் செய்யும் கனவுடன் இயங்குபவனே கலைஞன் என்கிறார் ஆந்த்ரே.

ஊடக அறம் என்று ஒன்றுள்ளது. எதை மக்களிடம் கொண்டு செல்ல வேண்டும் எதை புறக்கனிக்க வேண்டும் என்று அவர்கள் தீர்மானிப்பதிலிருந்து உருவாகிறது ஒரு சமுதாயம். 'நாளை'எப்படி இருக்க வேண்டுமெனும் பொறுப்பறிந்து செயல்படுவது நம் அனைவரின் கடமை.

கன்னி மாடம் அத்தகைய படைப்பு !.

**

தொடர்புள்ள பதிவு :

https://m.facebook.com/story.php?story_fbid=372861659889409&id=100014967340238

**

Wednesday, 26 February 2020

Balu mahendra 6th death aniversary - 13.02.2020

The branches of a big tree called #balumahendra met together after 6 years at its 6th death anniversary. The big branch #vetrimaaran facilitates the balu mahendra library, initiated and run by the writer #ajayanbala with all its requirements. Another big tree #barathiraja reopened this world of books and films. The dream of balu tree comes true and it ll flourish and spread its fragrance to the cinephiles and thereby mankind as a whole.


















காலமற்ற வெளி - முதல் கலந்துரையாடல் - 22.02.2020


#காலமற்றவெளி யின் முதல் கலந்துரையாடல் கூட்டம் எங்களின் குருநாதர் பாலு மகேந்திரா நூலகத்தில் நடக்கயிருப்பது மகிழ்ச்சி. எழுத்தாளர் அஜயன் பாலா நடத்தி வரும் இந்நூலகத்தை புது இடத்தில் கட்டமைத்திருக்கிறார் எங்கள் இயக்குநர் வெற்றிமாறன். இப்புத்தகத்தினூடாக திரைப்படங்கள், திரைப்பட மேதைகள், வாழ்வானுபவங்கள் என பகிர்ந்து கொள்ள இருக்கிறோம். மதிப்பிற்குரிய இயக்குநர் அம்ஷன்குமார், திரைக்கதையாளர் ஆனந்த் குமரேசன், பத்திரிகையாளர் உமா சக்தி, பேராசிரியர்
ச.பழனியப்பன் இயக்குநர் அஜயன் பாலா மற்றும் பதிப்பாளர் வேடியப்பன் ஆகியோரோடு கலந்துரையாடலாம். அனைவரும் வருக.














a whole.

Tuesday, 4 February 2020

நிரபராதிகளின் காலம்


'நாலு பேருக்கு நல்லதுன்னா எதுவுமே தப்பில்ல ?!'

ஸீக்ஃப்ரீட் லென்ஸ் என்னும் ஜெர்மன் எழுத்தாளர் நாடகாசிரியர் இரண்டாம் உலகப் போர் சமயத்தில் இட்லரின் இனப்படுகொலையை கண்டும் காணாதது போல் கடந்து போன ஜெர்மன் குடிமகக்கள் ஒவ்வொருவரின் மனசாட்சியை சீண்டும் விதமாக பல படைப்புகளை எழுதியவர்.

'நிரபராதிகளின் காலம்' என்கிற இந்நாடகத்தில் அவரெழுப்பும் இரு கேள்விகள் :

1. பொதுக் குற்றம் என்று ஒன்று உள்ளதா ?

2. ஒரு குற்றம் நடக்க வேண்டும் என்று ஒருவன் மனதால் விரும்பி, அவ்வாறான குற்றம் நிகழும்போது, அதில் நேரடியாக எந்தப் பங்கும் கொள்ளாத ஒருவன் குற்றவாளியா, இல்லையா ?

மனிதன் எந்தச் சூழலில் குற்றவாளி ஆகிறான். தனிமனிதக் குற்றம் அல்லது சமூகத்திற்கே பொதுவான பொதுக் குற்றம் (Collective Guilt) எவ்வாறு தோன்றிச் செயல்படுகிறது என்பதே லென்ஸ் படைப்புகளின் பொதுப்பன்பு என்கிறார்
மெழிபெயர்ப்பாளர் ஜி. கிருஷ்ணமூர்த்தி .

சர்வாதிகார ஆட்சியின் குற்றங்களுக்கும் சாமானியர்களுக்கும் எவ்வாறான தவிர்க்க முடியாத தொடர்புகள் ஏற்படுகின்றன, அந்நிலையில் அவர்கள் எந்த அளவுக்கு தாங்களாகவே முன்வந்து சர்வாதிகாரத்துடன் ஒத்துழைக்கிறார்கள் போன்றவற்றை அலசுகிறார் லென்ஸ். இடம் காலம் பற்றிய குறிப்புகள் ஏதுமில்லாத இந்நாடகம் எக்காலத்திற்கும் எல்லா நாடுகளுக்கும் ஒவ்வொரு தனி மனிதருக்கும் பொருந்தும்.

காலமற்ற வெளி - தமிழ் இந்து

#காலமற்றவெளி

இன்றைய 'தமிழ் இந்து' வில் கவணிக்க வேண்டிய ஐந்து புத்தகங்களில் ஒன்றாக 'காலமற்ற வெளி'. மகிழ்ச்சி.





காலமற்ற வெளி